அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Wednesday 26 February 2014

அவ்ப் ஹனீபா : 60 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயனாக நடித்தவர் · இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக...


 முஸ்லிம்கள் அவர்களது பணியை சரியாகச் செய்யாவிட்டால்ஏனையவர்களைக் கொண்டு அந்தப் பணியை நான் செய்வேன் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.

உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

எனது பெற்றோர்கள் கல்ஹின்னையைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றினார்எனவேஅவருக்கு இடமாற்றம் கிடைத்து செல்லும் இடங்களுக்கெல்லாம் நாமும் செல்ல வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் பதுள்ளையில் உள்ள 'தர்மதூதபாடசாலையில் கற்றேன். பின்னர்கம்பளை ஸாஹிறாவுக்கு வந்து சாதாரண தரம் வரை கற்றேன். பின்னர்தந்தைக்கு கொழும்புக்கு இடமாற்றம் கிடைத்தது. கொழும்புக்கு வந்து வகுப்புக்களுக்குச் சென்று வந்தேன்.

அப்போதுதான் எனக்கு சினிமாத்துறையில் நடிகராக வரவேண்டும் என்ற ஆசை வந்தது. பின்னர் ஒரு பிரபலமான நடிகராக மாறினேன். 65 திரைப்படங்கள் கதாநாயகனாக நடித்தேன். தற்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு வியாபாரத்தை நடாத்தி வருகிறேன்.

நீங்கள் எவ்வாறு சினிமாத்துறைக்கு வந்தீர்கள்?

dஎனது தந்தை ஓய்வு பெற்று டுபாய்க்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்டுபாய் நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் பல உள்ளன. வந்தால் சேர்ந்துகொள்ளலாம் என தந்தையார் அடிக்கடி அழைத்துக்கொண்டிருந்தார்நான் செல்லவில்லை. நான் பல திரைப்படங்கள் பார்த்தேன். எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. சில மேடை நாடகங்களை அரங்கேற்றினேன். பலரிடம் போய் நடிக்க வாய்ப்புக் கேட்டேன். யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. கடைசியாக நானே ஒரு படத்தைத் தயாரித்தால்தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். எனவேபணம் சேர்ப்பதற்காக டுபாய் செல்ல முடிவு செய்து தந்தையிடம் சொன்னேன்.

அங்கு சென்று சுமார் இரண்டு வருடங்கள் அளவில் தொழில் புரிந்து பணத்தைச் சேர்த்துக்கொண்டு வந்து ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் 'ஒபட திவுரா கியன்னம்” என்ற திரைப்படம். சுனில் சோம பீரிஸ் என்பவர்அதனை இயக்கினார்அதில் அனோஜா வீரசிங்க அவர்கள் என்னோடு ஜோடியாக நடித்தார்அந்தத் திரைப்படம்138 நாட்கள் ஓடியது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


பின்னர் நான் திரும்ப டுபாய் நாட்டுக்குத் தொழிலைத் தொடர்வதற்காகச் சென்றேன். பத்திரிகையில் எனது டுபாய் முகவரியும் பிரசுரமானது. ரசிகர்களிடமிருந்து கடிதங்கள் வரத் தொடங்கின. ஒரு நாளைக்கு இருநுறு,முன்னூறுநானூறு என கடிதங்கள் வந்தன. இது பணிபுரிந்த நிறுவனத்திற்கே பெரும் தலையிடியாக மாறியது. அதன் பின் நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வரத் தொடங்கின. கடைசியாக எனது தொழிலை விட்டுவிட்டு நடிப்பதற்கு வந்துவிட்டேன். பின்னர் நடிப்பிலே தீவிரமாக ஈடுபடலானேன்.

· நீங்கள் நடித்த படங்கள் சிலவற்றைச் சொல்லுங்கள்.

நான் 65 திரைப்படங்களில் நடித்துள்ளேன். எனது முதல் படத்திலேயே நான் ஒரு கதாநாயகனாகத்தான் நடித்தேன். அதைத் தொடர்ந்து சந்தர்ப்பங்கள் வரத் துவங்கின.

'சிங்க ரஜா” 'ரஜ தருவோ” 'பமசர பிசவ்” 'ஒக்கொம ரஜவரு” 'சர்மிலாவின் இதயராகம்” என பல திரைப்படங்கள் நடித்தேன். 'சுர வீர சன்டியோ” என்ற திரைப்படம் 150 நாட்கள் ஓடியது. அதில் நானும் ஜீவன் குமாரதுங்கசனத் குனதிலக ஆகியோரும் நடித்தோம்.

· உங்கள் தம்பியும் ரங்க விஜேந்திர என்ற பெயரில் சினிமாத் துறையில் இருந்தார்அவர் பற்றிச் சொல்லுங்கள்.

எனது தம்பியும் நானும் பாடசாலையிலிருந்து வெளியேறியது முதல் எல்லாவற்றையும் ஒன்றாக இணைந்துதான் செய்தோம். நான் சினிமாத் துறைக்கு வந்ததும் அவரும் என்னுடன் வந்துவிட்டார்திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார்தயாரித்தார்.நான் சினிமாவை விட்ட போது அவரும் அதை விட்டுவிட்டார்தற்போது மலேசியாவில் வியாபாரம் செய்து வருகிறார்.

· நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி...

நான் இருந்தது வர;த்தக சினிமாத் துறையில். எனவேநான் நடிதத படங்கள் நீண்ட நாட்கள் ஓடின. வியாபார ரீதியாக பாரிய வெற்றியைப் பெற்றன.

1994 ஆம் ஆண்டு பிரபலமான நடிகருக்கான விருது எனக்கு கிடைத்து. அதற்கு முன்னர் சிறந்த துணை நடிகருக்கான விருதும் எனக்குக் கிடைத்தது.

· நீங்கள் தயாரித்த திரைப்டபங்கள் எத்தனை?

நான் நடித்த முதல் திரைப்படமான 'ஒபட திவுரா கியன்னம்” என்ற திரைப்படத்தை நானே தயாரித்தேன். பின்னர், 'சக்திய ஒபய் அம்மே”, 'ஒபட பமனய் ஆதரே” போன்ற திரைப்படங்களையும் நான் தயாரித்தேன்.

· நீங்கள் வேறு எந்த திரைப்பட முன்னோடிகள் பலரோடு பணியாற்றியுள்ளீர்கள்.
காமினி பொன்சேகாசனத் குனதிலகதயா விமலவீரபோன்ற பலரோடு நான் பணியாற்றினேன்.

முஸ்லிம் கலைஞர்களான இயக்குனர் ஏ.ஏ. ஜூனைதீன்தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் எம்.ஏ. கபூர்ஆகியோருடன் பணியாற்றினேன்.

shashi· உங்கள் பெயர் சசி விஜேந்திர என்று எவ்வாறு மாறியது?

நான் ஆரம்பத்தில் மேடை நாடகங்கள் தயாரிக்கும் போதே எனது பெயரை 'சசி குவின்டஸ்” என்று மாற்றிக்கொண்டேன். முதல் படத்தை தயாரித்துக்கொண்டிருக்கும் போது அதற்கு எடிடராக பணியாற்றிய டெனில் சில்வா என்பவர்தான் எனது பெயரை சசி விஜேந்திர என மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்அது உச்சரிக்க நல்லதாக இருக்கும் என்று நானும் சரி என்றேன். நான் அந்தப் பெயரில் அறிமுகமானது எனது பிரபல்யத்துக்கு உதவியது என்று நினைக்கிறேன்.

· நீங்கள் அப்போது புகழில் உச்சத்தில் இருந்தீர்கள். எனவேஒரு கதாநாயகன் என்ற வகையில் நீங்கள் உங்களுக்கு ஏதும் வரையறைகள் வகுத்துக்கொண்டிருந்தீர்களா?

இல்லை. நான் அவ்வாறு வரையறைகள் எதனையும் வகுத்துக்கொள்ளவில்லை. எனக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு சினிமா துறையில் இருக்கவில்லை. அதனால்எனக்கென்று ஒரு போக்கை தீர்மானித்துக்கொள்ள வேண்டும், எனது புகழை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.

· நீங்கள் இத்துறையில் நடித்துக்கொண்டிருந்த போது உங்கள் உறவினர்கள் உங்களை எவ்வாறு நோக்கினார்கள்?

உண்மையில் அந்த காலப்பகுதியில் நான் ஊருக்குச் செல்ல அவ்வளவு விரும்புவதில்லை. போனால்,என்னைக் காண்பவர்கள் எல்லோரும் விட்டுவிடு. விட்டுவிடு எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது ஒரு தொந்தரவாகவே எனக்குப் பட்டது.

எனது தாயார் எப்போதும் என்னை நினைத்து அழுதுகொண்டே இருந்தார்தினமும் பிரார்த்தனை செய்து வந்தார்.

இளைஞர்கள் இதன் பாரதூரத்தை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் என்னைப் பாராட்டினார்கள். பார்த்த படங்களைப் பற்றிப் பாராட்டிச் சொன்னார்கள்.

· உங்கள் வாழ்க்கையை இவ்வாறு மாற்றியவர் யார்?

எனது தாயாரின் துஆக்கள்தான் எனது வாழ்க்கைப் போக்கை மாற்றியதற்கான பிரதான் காரணம்.

முஸ்லிம்கள் அவர்களது பணியை சரியாகச் செய்யாவிட்டால்ஏனையவர்களைக் கொண்டு அந்தப் பணியை நான் செய்வேன் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.

அடுத்த படியாக எனது வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வு எனது திருமணம். 1995 இல் எனது திருமணம் நடைபெற்றது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எனது ரசிகை ஒருவரையே நான் காதலித்தேன். திருமணம் செய்ய முன் அவர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் எனச் சொன்னேன. அவரும் ஒப்புக் கொண்டார்.இஸ்லாம் சம்பந்தமாக நிறையவே வாசித்தார்எனது தாயாரிடம் போய்ச் சொன்னேன். ஆச்சரியப்படத்தக்க வகையில் எனது தாயாரும் சரி என்று சொல்லிவிட்டார்எனது திருமனமும் நடைபெற்றது. 

நாட்கள் செல்லச் செல்ல எனது மனைவி இஸ்லாம் தொடர்பாக நிறைய வாசித்துவிட்டு என்னிடமிருந்த பிழைகளை திருத்தத் துவங்கினாள். ஒரு நாள் நீங்கள் இவ்வாறு நடிப்பதெல்லாம் இஸ்லாத்திற்கு முரணானது அல்லவா என்று என்னைப் பார்த்துச் சொன்னாள். அப்போதுதான் நான் செய்வது பிழை. அவற்றை உடனடியாக விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வந்தது.

நான் நடித்துக்கொண்டிருந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் எல்லாவற்றையும் முடித்துக்கொள்ள வேண்டும் எனச் சொன்னேன். பலரும் அவற்றை முடித்துக்கொண்டார்கள். சிலர் தாமதித்து நட்டமடைந்தார்கள்.

மெதுவாக எனது பாதை மாற்றமடையத் துவங்கியது. ஹஜ் கடமையையும் நிறைவேற்றினேன். எனக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்முதலாவது மகன் புனித குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ் ஆக உள்ளார்மற்றவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை இவ்வாறு மாற்றிவிட்ட அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

IMG 4476· பல இயக்கங்கள் ஜமாஅத்கள் காணப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பமான ஜமாஅத் ஒன்றிறை சார்ந்திருப்பது இயல்பானதுதான். அதற்காக ஏனைய ஜமாஅத்கள் பிழையானது என்று யாரும் சொல்ல முடியாது.

நாங்கள் எந்த ஜமாஅத்தில் இருந்தாலும் முஸ்லிம்கள் என்ற அடையாளம் எம்மை ஒற்றுமைப் படுத்த வேண்டும். இதனை ஒரு பிளவாக மாற்ற நினைப்பவர்களுக்கு நாம் ஒத்துழைக்கக் கூடாது.

· நீங்கள் ஏற்கனவே ஒரு சுகபோக வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டவர்இவ்வாறு எல்லா விடயங்களையும் விட்டுவிட்டு வந்து புது வாழ்க்கையைத் துவங்கியபோது பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும். அவற்றை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

நான் சினிமாவில் இருக்கும் போது கூட எனக்கு ஒரு தெளிவான இலக்கு இருக்கவில்லை. பிரபல்யமடைய வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நடிப்பில் விருப்பம் இருந்தது. நடித்தேன். அதனால்அதனை விட்டுவிட்டு வரும் போது எனக்கு பெரியளவில் கஸ்டமானதாக இருக்கவில்லை.
அத்தோடு எனக்கு தப்லீக் ஜமாஅத்தின் தொடர்பு கிடைத்தது. அதனால்பள்ளிவாசல்களில் தரையில் படுத்து உறங்கினேன். இந்த அனுபவங்கள் எனக்கு நிறையவே கற்றுத் தந்தது. மெதுவாக இந்த வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டேன்.
  
· புதிய தலைமுறையினருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?.

யார் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு (மோடிவேசன) உந்துதல் இருக்கத்தான் செய்யும். நாங்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் நபி (ஸல்) அவர்கள் தான் சிறந்த உந்துதலாக இருக்க வேண்டும். அப்போது இந்த இளைஞர்கள் நேர் வழியில் தொடர்ந்து செல்வார்கள்.

எமது வாழ்வின் நோக்கம் அல்லாஹ்வை சந்தோசப்படுத்துவதுதான் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

· நீங்கள் இவ்வாறு மாற்றமடைந்ததன் பின்னர்இந்தத் துறையில் உள்ள முஸ்லிம்களுக்கு நீங்கள் உபதேசங்கள் செய்தீர்களா?

ஆம்அப்போது நான் சந்தித்தவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். எனது கடமையை செய்துவிட்டேன்.

· இலங்கை முஸ்லிம்களுக்கு ஊடகம் தேவை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

நிச்சயமாகஎமக்கென்று ஒரு ஊடகம் கட்டாயம் அவசியமானது. அப்போதுதான் எம்மைப் பற்றி இஸ்லாத்தைப் பற்றி ஏனையவர்களுக்குச் சொல்ல இந்த ஊடகங்களை எமக்குப் பயன்படுத்தலாம்.

· இந்த காலத்துப் பெற்றோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உண்மையில் இப்போது உலகம் பாரியளவு வளர்ச்சியடைந்துள்ளது. தொழில் நுட்பம் அவ்வளவு மக்களை நெருங்கியுள்ளது.

பெற்றோர் எப்போதுமே தமது பிள்ளைகளைக் கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும்.
அதேபோன்றுபெற்றோர் பிள்ளைகளோடு கடுமையாக நடந்துகொள்ளாமல், அவர்களோடு நண்பர்களாகப் பழக வேண்டும். அப்போது நிறைய பிரச்சினைகளை பேசித் தீர்த்துவிடலாம். இல்லாவிட்டால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பாரிய இடை வெளி உருவாகிவிடும். அந்த இடைவெளி அதிகரிக்க பல விடயங்கள் பெற்றோரின் கையை விட்டு தூரமாகிவிடும்.

· இஸ்லாமியப் பதிலீடுகள் உருவாக வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உங்கள் கருத்து.

உண்மையில் இஸ்லாத்தை சொல்லக் கூடிய வகையில் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி பதிலீடுகளை உருவாக்குவது நல்லதுதான்.

· நீங்கள் சிரச தொலைக்காட்சியில் தோன்றிய நிகழ்ச்சியின் பின் விளைவுகள் பற்றி..

அவர்கள் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களது நிகழ்ச்சிக்கு வருமாறு வேண்டிக்கொண்டே இருந்தார்கள். நானும் புறக்கணித்துக்கொண்டே வந்தேன். ஒரு ஷெய்ஹ் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது நான் இது பற்றிச் சொன்னேன். அப்போது அவர் ஏன் இதனை நீங்கள் தஃவாவுக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று கேட்டார்எனவேநான் போய் அதில் பங்குகொண்டேன்.

நான் 65 திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால்அவை போகாத இடங்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி போய் இருக்கிறது. பலரும் அதைப் பார்த்திருக்கிறார்கள். பலரும் பாராட்டினார்கள். அதுவும் ஒரு வகை தஃவாதான். அல்லாஹ் எல்லாவற்றையும் பொருந்திக்கொள்ள வேண்டும்.

0 comments: