அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 2

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
நற்கூலி பெற்றுத் தரும் செயல்கள் எவை?

    ரியாவைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பு 'தூய்மையான எண்ணத்தின்" முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.

    அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: '"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அதையே அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" இதை உமர் பின் கத்தாப் (ரலி) மேடையில் இருந்து அறிவித்தார்கள். ஆதாரம்: புகாாி (1), முஸ்லிம், அபூதாவூத்
    இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக இந்த ஹதீஸ் விளங்குகின்றது. இதனால் அநேகமாக எல்லா ஹதீஸ் நூல்களிலும், இந்த ஹதீஸ் இடம் பெற்று அனைவராலும் பரப்பப்பட்டுள்ளது. இமாம் புகாாி (ரஹ்) தமது ஸஹீஹ் புகாாியை இந்த ஹதீஸுடன் தான் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் அல்லாஹ்விற்கன்றி வேறு எவருக்காகவும், ஏதாவது ஒரு செயல் செய்யப்படுமேயானால், இவ்வுலகிலும், மறுவுலகிலும் அதனால் எவ்வித நற்பயனும் ஏற்படாது என்பதை உணர்த்துகிறார்கள்.

    இஸ்லாத்தின் அடித்தளம் மூன்று ஹதீஸ்கைைளச் சார்ந்து இருப்பதாக இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். அவற்றில் ஒன்று நாம் மேலே குறிப்பிட்டுள்ள 'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற உமர் (ரலி) அறிவிக்கின்ற நபிமொழியாகும்.

மற்றொன்று நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்ற பின் வரும் நபிமொழியாகும்.

    அல்லாஹ்வின் தூதார் நபி அவர்கள் கூறினார்கள்: 'அனுமதிக்கப்பட்டவையும், மிகத் தெளிவானவை. அனுமதிக்கப் படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கிடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்திற்கும், தமது மானம், மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுவதிலிருந்து விலகி விடுகிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறாரோ அவர் வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சாிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவைகளாகும். எச்சாிக்கை! உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம்" இதை நூஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாாி (52), முஸ்லிம்

இன்னொரு நபிமொழி ஆயிஷா (ரலி) அறிவிக்கின்ற பின்வரும் நபிமொழியாகும்.

    'எவரொருவர் நம்முடைய இந்த விவகாரத்தில் (அதாவது இஸ்லாத்தில்), அதனைச் சார்ந்திராத ஏதாவது ஒன்றைப் புகுத்துவாரேயானால், அது நிராகாிக்கப்படும்." ஆதாரம்: புகாாி (2697), முஸ்லிம், அபூதாவூத், இப்னு மாஜா

அதாவது 'பித்அத்" (நூதனச் செயலை) ஒருவர் கடைப்பிடிப்பாரேயானால், அவருக்கு மறுமையில் எவ்வித நற்பேறும் கிடைக்கப்போவதில்லை.

இமாம் அபூதாவூத் அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

    'இறைத்தூதாின் 500000 ஹதீஸ்களை நான் தொகுத்தேன். இதில் எனது நூலுக்கு (சுனன் அபூதாவூதிற்கு) 4800 ஹதீஸ்களை மட்டுமேதேர்ந்தெடுத்தேன். இதில் ஒருமனிதர் தனது மார்க்கத்தைப் பேண நான்கு நபிமொழிகளே போதுமானதாகும்."

அவற்றில்,
முதலாவது:-
'எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன...." என்ற இறைத்தூதாின் பொன்மொழி.

இரண்டாவது:-
'தனக்குத் தொடர்பில்லாத விஷயங்களை விட்டு விடுவது நல்ல முஸ்லிமாக விளங்குவதின் ஒரு பகுதியாகும்" அறிவிப்பவர்கள்: அலி (ரலி) அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத்

மூன்றாவது:-
'தனக்கென எதனை விரும்புகின்றானோ அதனைத் தனது சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் உண்மையில் நம்பிக்கையாளர் இல்லை" அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: புஹாாி (13), முஸ்லிம், இப்னு மாஜா

நான்காவது:-
'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவை..." என்று தொடங்கும் நுஃமான் பின் பஷீர் அறிவக்கும் நபிமொழியாகும்.

    நாம் மேற்கோள் காட்டியுள்ளவற்றிலிருந்து எண்ணங்களைப் பற்றிய நபிமொழிகள் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    மனிதன் திட்டமிட்டுச் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் ஒரு எண்ணம் இருப்பதை இந்த நபிமொழிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த எண்ணங்கள் பாராட்டிற்குாியவைகள் அல்லது கண்டிக்கப்பட வேண்டியவையாக இருக்கலாம்: அல்லது இந்த இரண்டு வகையையும் சேராதவையாகவும் இருக்கலாம். ஆனால், மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் நிச்சயமாக இருக்கும்.

    எதனை எண்ணினானோ அதனை ஒவ்வொரு மனிதனும் அடைந்து கொள்வான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கூலி, அவனது எண்ணத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் நற்செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணமுள்ள ஒரு மனிதன், தகுந்த காரணத்தினால் அதனைச் செய்ய இயலவில்லை என்றாலும், அந்த நற்செயலுக்குாிய கூலி அம்மனிதனுக்குக் கிடைத்து விடும். ஆனால், தீயச்செயலைச் செய்ய எண்ணும் ஒரு மனிதன், பின்னர் அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வானேயானால், அல்லாஹ் அவனது தீய எண்ணத்தை மன்னிப்பதுடன், அவனது இறைவுணர்விற்காக நற்கூலியையும் வழங்குவான். இதனைப் பின் வரும் நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    (ஒருமுறை) நபி அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கும்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

    அல்லாஹ் நன்மைகளையும், தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அதனை விவாித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என எண்ணி விட்டாலே அதை செயல்படுத்தா விட்டாலும் - அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையை தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதை செய்யாமல் விட்டு விட்டால் அதற்காக அவருக்கு தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்கு ஒரேயொரு குற்றத்தையே எழுதுகிறான். நூல்: புகாாி (6491)

    இது குறித்து ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தீய செயலைப் புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன், சூழ்நிலைகளின் காரணமாக அச்செயல் செய்யாமல் விட்டு விட்டால், அவனது கணக்கில் ஒரு தீய செயல் தான் பதிவு செய்யப்படும். உதாரணமாக கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லும் திருடன் ஒருவன், வழியில் விபத்து ஒன்றில் சிக்கிக் காலை முறித்துக் கொள்கிறான். இதனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணம் நிறைவேறவில்லை. இத்தகையவனுக்கு கொள்ளையடிக்க வேண்டும் என்ற அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதற்காக நற்கூலி கிடையாது. ஆனால், கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புறப்படும் ஒரு மனிதன், வழியில் மனம் மாறி வீடு திரும்புவானேயானால், தீமையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டதற்காக அவனுக்கு நற்கூலி கிடைக்கும்.

    தீயநோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு செயலினால், நன்மை விளைந்தாலும், அதனைச் செய்த மனிதனின் கணக்கில் தீய செயலே பதிவு செய்யப்படும். சரியான தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருப்பதின் அவசியத்தை திருக்குர்ஆனும் வலியுறுத்துகின்றது அல்லாஹ் கூறுகின்றான்.

    வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கே உாித்தாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இது தான் நேரான மார்க்கம். (திருக்குர்ஆன் 98:5)

    அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார். நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போாின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும். (திருக்குர்ஆன் 17,18,19)

    நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்குத்தான். அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் (திருக்குர்ஆன் 2:272)

    ஆரம்பக்கால முஸ்லிம்கள் தூய்மையான, நல்ல எண்ணங்களின் அவசியத்தை நன்கு உணர்ந்து இருந்தார்கள். எனவே தான், அவர்கள் இது குறித்து ஏராளமானக் கருத்துக்களைத் தொிவித்துள்ளனர்.

    இறைத்தூதாின் தோழரும், இஸ்லாத்தை முதலிலேயே தனது வாழ்வியல் திட்டமாக ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.

'பேச்சைத் தொடர்ந்து செயல் இல்லையெனில், அந்தப் பேச்சு பயனற்றதாகும். நல்ல எண்ணம் இல்லாப் பேச்சும், செயலும் பயனற்றதாகும். நபிவழியுடன் ஒத்துப் போகாத பேச்சும், செயலும், நல்லெண்ணமும் பயனற்றதாகும்."

சுப்யான் அஸ் ஸவ்ாி கூறுகின்றார்கள்:
'எனது எண்ணங்களை சீர் செய்வதை விடக் கடினமான செயல் வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அது மாறுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கின்றது."

ஹதீஸ் கலை வல்லுநராக விளங்கிய அப்துல்லாஹ் பின் முபாரக் சொல்கின்றார்கள்:
'செய்யப்பட்ட செயல் மிகச் சிறிதாக இருந்தாலும், எண்ணத்தின் காரணமாக அதற்குக் கிடைக்கும் நற்கூலியினால் அது மிகப் பொிதாக மாறி விடும். அதே நேரத்தில் ஒரு மிகப் பெரும் செயல் எண்ணத்தின் காரணமாக அற்பமானதாகவும் ஆகி விடும்."

முஹம்மது பின் அஜ்லான என்ற தாபியீ (நபித்தோழாின் தோழர்) சொல்கின்றார்கள்:
'அல்லாஹ்வின் மீதான அச்சம், நல்லெண்ணம், மற்றும் நபிவழியை ஒத்து இருத்தல் ஆகிய மூன்று விஷயங்களுடன் சேர்ந்திராத எந்தவொரு செயலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது."

முத்தரீப் பின் அப்தில்லாஹ் (இவர் நபிகள் காலத்தில் பிறந்தவர், ஆனால் அவர்களைப் பார்த்திராதவர்) கூறுகின்றார்கள்.
'தூய்மையான, இறையச்சமுள்ள செயல்களின் மூலமாகத் தான் உள்ளத்தைத் தூய்மையானதாகவும், இறையச்சமுடையதாகவும் மாற்றலாம். சரியான எண்ணத்தின் மூலமாகத் தான் தூய்மையான இறையச்சமுடைய செயல்களைப் புரிய முடியும்."

    உங்களில் அழகிய செயலுக்குாியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தோன், மன்னிப்போன்.(திருக்குர்ஆன் 67:2)
என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் அளித்த ஃபுழைல் பின் இயாழ் என்ற அறிஞர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

    'தூய்மையான எண்ணத்துடனும், சரியான முறையிலும் செய்யப்பட்ட செயல்களைத் தான் சிறந்த செயல் என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட செயல் முறையற்றதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதே போல முறையாக செய்யப்பட்டாலும், நல்லெண்ணத்துடன் செய்யப்படாத செயல், நிராகாிக்கப்படும். நல்லெண்ணத்துடன், முறையாகவும் செய்யப்பட்ட செயல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நல்லெண்ணம் என்பது அல்லாஹ்விற்காக மட்டுமே செய்யப்படும் ஒரு செயலாகும். முறையான செயல் என்பது நபிகளார் அவர்களின் வழிமுறையின் படி செய்யப்பட்ட செயலாகும்."

    எனவே அல்லாஹ்வால் அங்கீகாிக்கப்பட வேண்டுமெனில் ஒரு செயல் பல நிபந்தனைகளைகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முதல் நிபந்தனை அல்லாஹ்விற்காக மட்டுமே அச்செயல் செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக அச்செயல் நபிகளாாின் வழிமுறைப்படி அமைய வேண்டும். மூன்றாவதாக நபிகளார் அவர்களின் மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்ட நூதனமாக (பித்அத்) அது இருக்கக் கூடாது

 ரியாவினால் ஏற்படும் அபாயங்கள் ...
இன்ஷா அல்லாஹ்  - அல்லாஹ்  நாடினால்   >>>>>>>>  தொடரும்

0 comments: