அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு - பாகம் 1

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
 மூல ஆசிாியர் உரை 
    திருக்குர்ஆன் வாயிலாக எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்திற்கு பின்வரும் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.

    ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
(திருக்குர்ஆன் 35:6)


    ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,
    'நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்" (திருக்குர்ஆன் 7:16,17)

    மேலும் ஒரு வசனத்தில் ஷைத்தானால் வழிகெடுக்க முடியாத மனிதர்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலவீனத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

    என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழுக்காக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தே
ர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)

    நாம் படைக்கப்பட்டத்தின் நோக்கம் அல்லாஹ்வை மட்டுமே வழிபட வேண்டும் என்பதாகும். ஆனால், இந்த நல்லெண்ணத்தை மாற்றி, நமது நற்செயல்களைப் பாழ்படுத்துவது ஷைத்தானின் வழிமுறைகளில் ஒன்றாகும். நமது எண்ணங்களில் தவறான சிந்தனைகளைப் புகுத்தி, நமது வழிபாட்டின் நோக்கங்களை ஷைத்தான் மாற்றி விடுகிறான். இதன் விளைவாக நாம், படைத்த இறைவனின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெற முயற்சி செய்யாமல், படைக்கப்பட்ட மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற முயற்சிக்கின்றோம். இதுதான்'ரியா' எனப்படும்.

    எனது உள்ளத்தில் இந்த நோய் இருப்பதை நான் கவனித்த போது, ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்னை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நான் கவனித்த போது என்ன செய்வது என்று அறியாமல் நான் தத்தளித்தேன். ரியாவின் அபாயத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக நற்செயல்களைச் செய்வதை நான் நிறுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது நான் செய்யும் சிறிய நற்செயல்களைத் தொடர்ந்து கொண்டே, அந்தத் தீய செயலில் இருந்து என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமா? எனது இதயத்திலிருந்து இந்த நோயை விரட்ட சரியான வழி எது?

    திருக்குர்ஆன் மற்றும் திருநபிமொழியின் பால் நான் திரும்பி இந்த நோயைப் பற்றிய தகவல்களைத் தேடினேன். இந்த நோய் எத்தகையது? இது வருவதற்கான காரணம் என்ன? இதன் அறிகுறிகள் யாவை? இதனைக் குணப்படுத்துவது எப்படி? இதனைத் தடுப்பது யாவை? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடினேன்.

    அல்ஹம்துல்லில்லாஹ்! நான் தேடிய விடைகளையெல்லாம் கண்டபோது நான் ஆச்சாியப்படவில்லை. ஏனெனில், குர்ஆனும், ஹதீஸும் நமது மார்க்கத்தின் மூலங்களாக விளங்குகின்றன. நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அவற்றில் தான் இருக்கின்றன.

நான் அறிந்தவற்றைத் தொகுக்க வேண்டும் என்று எண்ணினேன். இதனை எனது சகோதர முஸ்லிம்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், மறுமையில் எனக்கு ஒரு நல்லறமாகவும் அல்லாஹ் ஆக்குவான் என்று எதிர்பார்த்து இதை உங்கள் முன் வைக்கிறேன்.
அபூ அம்மார் யாசிர் அல் காழி
ரியா என்றால் என்ன?

    'ரியா" என்ற அரபிச் சொல், 'ரஆ" எனற வேர்ச் சொல்லிருந்து வருகின்றது. 'ரஆ" என்றால் 'பார்த்தான்", 'கவனித்தான்" என்று பொருள். 'ரியா" என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.மனிதர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறும் நோக்கில் அல்லாஹ்வை வணங்குவது .
அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பதே ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் 'த:ஜ்கியா - உளத்தூய்மை " எனப்படுகின்றது.

    இத்தகைய செயல்களைத் தூண்டும் எண்ணம் முற்றிலும் தூய்மையற்றதாக இருக்கலாம். அதாவது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற வேண்டுமென்ற எண்ணம் சிறு துளி கூட இல்லாமல், மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அச்செயலில் ஒரு மனிதர் ஈடுபட்டிருக்கலாம்: அல்லது அவரது எண்ணத்தின் ஒரு பகுதி மட்டும் தூய்மையானதாக இருக்கலாம். அதாவது அச்செயலில் ஈடுபடும் போது அவரது எண்ணத்தில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பது ஒரு பகுதியாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டும் என்பது அவரது எண்ணத்தின் இன்னொரு பகுதியாகவும் இருக்கலாம்.

    'ரியா" என்பது குறித்த இந்த விளக்கத்தை நாம் கவனிக்கும் போது, 'ரியா" உள்ளத்தில் இருந்து தோன்றுகின்றது என்பதைப் பூிந்து கொள்ளலாம். ஈமான் (நம்பிக்கை) என்பது உள்ளத்தின் செயற்பாடுகளும் (அதாவது, அச்சம், அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பு) நாவின் வெளிப்பாடுகளும் (அதாவது, கலிமாவைச் சொல்வது) கால், கைகளின் செயற்பாடுகளும் (அதாவது தொழுகை, ஹஜ்) உள்ளடங்கியதாக உள்ளது.

    'உள்ளத்தின் வெளிப்பாடுகள், அடிப்படை நம்பிக்கையின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீதான நேசம், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, அல்லாஹ்விற்காக மார்க்க விஷயத்தில் நேர்மையாக இருத்தல், அல்லாஹ்விற்கு நன்றிக் கடன்பட்டிருப்பது, அல்லாஹ்வின் நாட்டம் குறித்து பொறுமையாக இருப்பது, அல்லாஹ்வின் பால் அச்சம்... ஆகிய இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், எல்லா படைப்பினங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளதாக அனைத்து அறிஞர்களும் ஒருமித்தக் கருத்துக் கொண்டுள்ளார்கள்." (மஜ்மு அல் பத்தாவா பகுதி 10, பக்கம் : 5) என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்.

    இப்னு கையூம் அல் ஜவ்ஸீ இவ்வாறு சொல்கிறார்கள்:
    'உள்ளத்தின் செயற்பாடுகள் தான் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது. உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் இவற்றைப் பின்பற்றி நம்பிக்கையை நிறைவுபடுத்துகின்றன. நோக்கம் ஆத்மா போன்றும், செயல்கள் உடல் போன்றும் அமைந்துள்ளன. ஆத்மா உடலை விட்டுப் பிாிந்தால், உடல் செத்து விடுகின்றது. எனவே உள்ளத்தின் செயற்பாடு பற்றிய அறிவு, உடல் உறுப்புகளின் செயற்பாடு பற்றிய அறிவை விட முக்கியமானதாகும். இல்லையெனில் உள்ளத்தின் செயற்பாட்டைத் தவிர வேறு எதைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளரை, நயவஞ்சகாிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலும்? உடல் உறுப்புகளின் வணக்கம் மற்றும் சமர்ப்பணத்தை விட உள்ளத்தின் வணக்கமும், சமர்ப்பணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், உள்ளத்தின் வணக்கம் தொடர்ச்சியானது, ஒவ்வொரு சந்தப்பத்திலும் உள்ளம் வழிபாடு செய்வது அவசியமாகும்."
    நற்கூலி பெற்றுத் தரும் செயல்கள் எவை?
 இன்ஷா அல்லாஹ்  - அல்லாஹ்  நாடினால்   >>>>>>>>  தொடரும்

0 comments: