அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Wednesday 10 April 2013

விடைபெறும்உயிர்

மரணம்! மனிதன்பிறக்கும்முன்பேநிச்சயிக்கப்பட்டுவிட்டஒன்று.குழந்தைகளானாலும்,
மன்னாதிமன்னர்களானாலும்,
மகான்களானாலும் யாரானாலும் மரணத்தைவெல்ல முடியாது. மரணம் தனக்குவருவதையும் அல்லது நம்முடையநெருங்கிய உறவினருக்கோ, அல்லதுநண்பர்களுக்கோ யாருக்கும் அதுவந்து விடுவதை யாரும் அத்தனைசுலபத்தில் அதை ஏற்க விரும்புவதில்லை. அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ்க்கைஅமைந்திருக்க வேண்டும் எனஇஸ்லாம் கூறுகிறது. இப்படி கட்டுப்பட்டு வாழ்ந்தவன் மரணத்தைக்கண்டு அஞ்சுவதில்லை. அல்லாஹ்விதித்திருக்கின்ற காலக்கெடு முடிந்தபின் ஒரு வினாடி கூட மரணம்பிந்தாது என்ற நம்பிக்கை கொண்டமனிதன் மரணத்திற்கு தயாராகஇருக்கின்றான். தினமும் உறங்குவதேசிறு மரணம் என்று நம்புகிறவன்மரணத்தைக் குறித்து விரண்டு ஒடமாட்டான் ஒரு மனிதன் மரணித்தபின்னர் செய்ய வேண்டிய மதச்சடங்குகளைப் பற்றி இஸ்லாம்கூறவில்லை. இவ்வுலகமே அழியக்கூடியது, ஜடப் பொருளுக்கும் அழிவுஉண்டு. மண்ணில் பிறவியெடுத்தஎல்லா உயிரினங்களும் மரணத்தைஅடையும். அல்லாஹ்வால் உருவானஎல்லா படைப்பினங்களும் சந்திக்கவேண்டிய சத்தியமானது. இது தான்நிதர்சன உண்மை.தினசரி ஒரு மரணம்:ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்!அல்குர்ஆன் 3:185
அல்லாஹும்மபிஸ்மிக்கஅமூத்துவஅஹ்யா”
யாஅல்லாஹ்உன்னுடையபெயரால் நான்மரணிக்கிறேன்.மேலும்நான்உயிர்பெறுகிறேன் என ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் ஒதவேண்டும் என்று நபி(ஸல்) அவரகள் கூறினார்கள்
கண்விழித்தவுடன்நம்மைஉறக்கத்திலேமரணிக்கச்செய்யாமல்மீண்டும்உயிர்தந்துவிழிக்கசெய்கிறஅந்த
அல்லாஹ்வைநாம்எவ்வளவு புகழ்ந்தாலும்அதற்குஅதுஈடாகாது.அல்லாஹ்உயிர்களைஅவைமரணிக்கும்போதும்,மரணிக்காதவற்றை
அவற்றின்நித்திரையிலும்
கைப்பற்றி, பின்பு எதன் மீதுமரணத்தை விதித்து விட்டானோஅதை நிறுத்திக் கொள்கிறான்.மீத முள்ளவற்றை ஒருகுறிப்பிட்டதவணைவரைஅனுப்பிவிடுகிறான். சிந்தித்துப் பார்க்கும்மக்களுக்கு நிச்சயமாக அதில்அத்தாட்சிகள் இருக்கின்றன.

அல்குர்ஆன் 39:42
பிறப்பு உன்டென்றால்இறப்பும் உண்டு:பூர்வ ஜென்மம், பல பிறப்பு,மரணம் இப்பிறவியின்முடிவுஎன்றும்,மறுபிறவி எடுப்பான் என்றும் அல்லாஹ்வைப் பற்றி அறியாதவர்களின் கூற்று, ஆனால் மரணம்இவ்வுலகவாழ்வின்முடிவு.நிரந்தரமானமறுமை வாழ்வின்ஆரம்பம்,இதுஇஸ்லாமின்தெளிவானநம்பிக்கை.மரணமில்லாதவன்அனைத்தையும்படைத்துப்பரி
பாலித்துக்கொண்டிருக்கும் அல்லாஹ்மட்டுமே! ஏனெனில், ஆதி, அந்தம்,ஆரம்பம், முடிவு இல்லாதவன்.
இன்னும் நிச்சயமாக அவனேமரணிக்கச் செய்கிறான். இன்னும்உயிர்ப்பிக்கிறான்.அல்குர்ஆன் 53:44
(பூமியாகிய) இதன் மீது உள்ளயாவரும் அழிந்து போகக் கூடியவரே. மிக்க வல்லமையும்கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.அல்குர்ஆன் 55:26,27
நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தனதுகைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்.வானத்தை தன் வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு நானேஅரசன், பூமியின் அரசர்கள் எங்கேஎன்று அவன் கேட்பான்.ஆதாரம் : புகாரி
மரணத்திற்கும் ஒரு நாள்மரணமுண்டு:மறுமையில் கருமை கலந்த வெள்ளாடு ஒன்றின் தோற்றத்தில்மரணம் கொண்டு வரப்படும்.அச்சமயம் அறிவிப்பாளர் (வானவர்)களில் ஒருவர் ”சொர்க்கவாசிகளே!”என்று அழைப்பார். சொர்க்கத்திலிருப்பவர்களை நோக்கி இதைஇந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்பார். சொர்வர்க்கவாசிகள் ”ஆம், இது தான் மரணம்என பதிலளிப்பார்கள். அவர்கள்அதை முன்பே பார்த்திருக்கிறார்கள்.பிறகு அந்த அறிவிப்பாளர் நரகவாசிகளை நோக்கி நரகவாசிகளே! என்றுஅழைப்பார்! நரகவாசிகள் தலையைநீட்டிப்பார்ப்பார்கள். அறிவிப்பாளர்இதை நீங்கள் அறிவீர்களா? எனவினவுவார். நரக வாசிகளும் ”ஆம்இது தான் மரணம்” என விடையளிப்பார்கள். ஏனெனில் அவர்கள்முன்பே மரணத்தைப் பார்த்துள்ளனர். பின்னர் அது அறுக்கப்பட்டுவிடும், பிறகு அறிவிப்பாளர் சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமில்லை என்றும் நரகவாசிகளே!நிரந்தரம் இனி மரணமில்லை என்றுகூறி அந்த ஆட்டை அறுப்பார்கள்.நூல் : புகாரி,
நமது இவ்வுலக வாழ்வு ஒருசிலமணித்துளிகளே!இவ்வுலக வாழ்வு மிகவும் அற்பமானது, ஆதம்(அலை) அவரைஅடுத்து வந்த நூஹ்(அலை)போன்றோர் சுமார் 1000 வருடங்கள் வாழ்ந்தனர் என குர்ஆனிலும்,ஹதிஸ்களிலும் காணலாம். அந்நீண்டவாழ்வும் மிக மிகக் குறுகிய வாழ்வுதான்! அதிலும் எந்த அளவுக்குஇன்றைய காலத்தில் வாழ்வு என்பதுகுறைக்கப்பட்டுள்ளது.(நபியே!) இன்னும் வர
வில்லையே! என்று வேதனையைஅவர்கள் உம்மிடம் அவசரமாகத்தேடுகிறார்கள். அல்லாஹ் தன்வாக்குறுதிக்கு மாறு செய்யவேமாட்டான். மேலும், உம்முடையஇறைவனிடம் ஒரு நாள் என்பதுநீங்கள் கணக்கிடுகிற ஆயிரம்ஆண்டுகளைப் போலாகும்.அல்குர்ஆன் 22:47
நாம் 24 மணி நேரம் ஒரு நாள்,7 நாட்கள் ஒரு வாரம், 29, 30 நாட்கள் ஒரு மாதம், 12 மாதங்கள் ஒருவருடம் என கணக்கிடுகிறோம்.நாம் கணக்கிடும் 1000 வருடங்கள்அல்லாஹ்விடம் ஒரு நாள் என்றால்நமது இவ்வுலக வாழ்வு நாம்கணக்கிடும் விதத்தில் அல்லாஹ்வின் கணக்கில் எவ்வளவு மிகப்பெரியது, அல்லாஹ்வுடைய கணக்கில் ஒரு நிமிடம் 26.4 வினாடி நம்முடைய கணக்கில் ஒரு வருடமாகும்.நமது சராசரி வயது 60 முதல் 70வரை என்றால் நமது வாழ்வுஅல்லாஹ் கணக்கில் 1 மணி 40நிமிடம் 48 வினாடி ஆகும்.ஒரு மனிதனின் வயது 60ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகுஅவன் கூறும் காரண காரியங்களைஅல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லைஎன்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்கள்: புகாரி 6419, 5940,அஹ்மது 7914, 7388
உமக்கு மரணம் வரும் வரைஉமது இறைவனை வணங்குவீராக!அல்குர்ஆன் 15:99
பாவிகளின் புலம்பல்:
இந்த நியாயத் தீர்ப்பு நாளைநாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ”எங்களுக்கு(மரணம் எனும்) உறுதி வரும்வரையில்.
அல்குர்ஆன் 74:46, 47இவ்வசனத்தில் இடம் பெறுவது”அல்யகீன் (உறுதியானது) என்றஅரபிச் சொல், உறுதியாக யாவரும்சந்திக்கவுள்ள மரணத்தை” குறிக்குமென நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.அறிவிப்பவர் : ஸாலிம் பின்ப்தில்லாஹ் பின் உமர்(ரலி),
இம்ரான் பின் ஹுசைன்(ரலி)
ஆதாரம் : புகாரி 4706
பயிரிடுகின்ற விவசாயி நிலத்தைஉழுது செம்மைப்படுத்தி வைத்திருக்கிறான். இவனால் ஒரளவு தோராயமாக அவன் வித்து எப்பொழுதுமுளைக்கும் என கூறமுடியும். சூல்கொண்ட பெண் தான் குழந்தையைப்பெற்றெடுப்போம் என்பதை ஒரளவுதோராயமாக அறிய முடியும். ஆனால்(முடிவை) மரணத்தை தோராயமாகக்கூட அளவிட முடியாது. இது படைத்தவனின் இரகசியம்!மேலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த உயிரினமும்மரணிக்க முடியாது. இது நேரம்நிர்ணயிக்கப் பட்ட விதி:அல்குர்ஆன் 3:145
ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அவகாசம்அளிக்கவும்… என்று (தூதர்கள்)கூறினார்கள்.அல்குர்ஆன் 14:10
ஆனால் மனிதன் மரணம்வரும் வரை தவறில் மூழ்கி கிடக்கிறான். மரணம் வரும் போது அய்யோமறுமை வாழ்வு போனது என புலம்பு
கிறான். வெள்ளம் வருவதற்கு முன்அணைப் போடணும், மரணம்வருவதற்கு முன் நன்மைகளைமுந்திக்கொண்டு செய்யனும்.ஒரு காலக்கெடு உண்டு,அவர்களுடைய கெடுவந்து விட்டால், அவர்கள் ஒரு கணப்பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.அல்குர்ஆன் 7:34
யாரிடம் வேண்டுமானாலும்,பொருள்களாளும், அதிகாரத்தைக்காட்டியும் தடுத்து விடலாம். ஆனால்அல்லாஹ்வின் கட்டளைகளுக்குமலக்குமார்கள் மாறு செய்ய மாட்டார்கள். என்ன புலம்பினாலும்பயனில்லை.காலை வாழ்த்துக் கூறப்பெற்றநிலையில், ஒவ்வொரு மனிதனும்தன் குடும்பத்தாரோடு காலைப்பொழுதை அடைகிறான். ஆனால்மரணம் அவன் செருப்பு வாரை விடமிக அருகில் இருக்கிறது (என்பதுஅவனுக்குத் தெரிவதில்லை).
அறிப்பவர் : அபூபக்ர்(ரலி)
நூல் : புகாரி
நீ காலைப் பொழுதைப் பெற்றால்மாலைப் பொழுதை எதிர் பார்க்காதே! மாலைப் பொழுதை பெற்றால்காலைப் பொழுதை எதிர்பார்க்காதே! நோயற்ற நிலையை நோயுள்ளநிலைக்கும் வாழ்வை மரணத்திற்கும் தயாராக்கிக் கொள்!அறிவிப்பவர் :இப்னு உமர்(ரலி)
நூல்கள் : புகாரி 6416, திர்மிதி
2255, இப்னுமாஜா 4104,
அஹ்மது 4534, 4760, 5881
எவரும் அறிய முடியாதமரணம்:
தாம் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும்அறிவதில்லை.அல்குர்ஆன் 31:34
இன்றைக்குஎவ்வளவுபெரியமாடமாளிகைகளில்இருந்தாலும்,பலஅடுக்குமாடிகட்டிடத்தில்குடியிருந்தாலும்,
நாம்மரணிக்கும்இடத்திற்காக எவராலும் பெரியகோட்டைகளைக் கட்ட முடியாது.
நிரந்தரமில்லாத உயிர்:
நபியே! உமக்கு முன்னரும்எந்த மனிதனுக்கும் (இவ்வுலகில்)நிரந்தரத்தை நாம் ஏற்படுத்தவில்லை.அல்குர்ஆன் 21:34
நம்முடைய பிறப்பு நம்முடையவிருப்பு வெறுப்பிற்கிணங்க அமையவில்லை. நம்முடைய இறப்பும் நம்முடைய விருப்பு வெறுப்பிற்
கிணங்க அமையப் போவதும் இல்லை.எவ்வளவு வேகமாக ஒடினாலும்ஜெயிக்க முடியுமா?நீங்கள் எதை விட்டும் விரண்டுஓடுகிறீர்களோ அந்த மரணம்நிச்சயமாக உங்களைச் சந்திக்கும்.அல்குர்ஆன் 62:8
மிகப்பெரும் மாளிகையையும்சுலபமாக அடையும் மரணம்:
”நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைத்தே தீரும்.நீங்கள் மிகவும் உறுதியாக்கப்பட்டகோட்டைகளில் இருந்தாலும் சரியே!கல்லுக்குள்துளைவாழ்ந்தாலும்கருங்கல்கோட்டைக்குள்நுழைந்துகொண்டாலும்மரணம்விடாது.
இதைஎவரும்சிந்திப்பதில்லை. அதைஉணர்வதும் இல்லை.ஈட்டுத்தொகை இல்லை:எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும்நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தைஈடாக கொடுத்தாலும், அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது.அல்குர்ஆன் 3:91
நாளுக்குநாள்விலைஏறிக்கொண்டிருப்பதுதங்கத்தின்விலை.தங்கத்திற்குஈடுதங்கம்தான்.யாரும்
அதைநேசிக்காமல்இருக்கமாட்டார்கள் அது தான் தங்கம். தங்கத்திற்கு கூட மதிப்பில்லை, மரணத்திற்கு முன் தங்கம்கூடஅனுமதிக்கப்படுவதில்லை.அனைவரும்உலகத்தை விட்டுவிடை பெறுவோர்கள்:நிச்சயமாக நீரும் மரணிப்பவர்,நிச்சயமாக அவர்களும் மரணிக்கிறவர்களே.அல்குர்ஆன் 39:30
நாத்திகர்கள் கூறுவதுபோலமரணம் இயற்கையானது; இதில் எந்தச்சிறப்புமில்லையென்றால், உலகிலுள்ளதாவரம் முதல் எல்லாப்படைப்பினங்களும் மரணத்தைச் சந்திக்கின்றன. அதற்கென நாம் பெரிதும்வருந்துவதில்லை. அவற்றின் மரணம்நம்மை வெகுவாகப் பாதிப்பதில்லை,ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன்மரணிக்கின்ற போது நம்முடையஉள்ளம் சொல்லொனாக் கவலைகொள்கிறது ஏன்? மரணத்திற்கு அர்த்தமில்லையெனில் மற்ற படைப்பினங்களுக்கும் மனித இனத்திற்கும்வேறுபாடில்லை என்பது பகுத்தறிவுஏற்காத ஏற்கமுடியாத உண்மை.
மரணம் குறுகிய கால, நிரந்தரமற்றஇவ்வுலக வாழ்வின் முடிவு. எனவேமரணம் வரும் முன் மறுமைக்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்வு ஒரே முறைதான். அதில் நன்றே வாழ வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கைநிச்சயிக்கப்பட்டது. நிழலாகத்தொடரும்,இறைவனால் என்றோ நிச்சயிக்கப்பட்ட மரணம் நொடிப்பொழுதில்நாம் எதிர்பாராத நிலையில் நம்மைச்சந்திக்கும் தீடிரெனத் தாக்கும். உலகஇச்சைகளில் மூழ்கித் திளைத்திருக்கும் மனிதன் மரணத்தை கண்டுபயப்படுவதையும் வெருண்டோடுவதையும் வைத்து மரணத்திலிருந்துதப்பிக்கவே முடியாது.அவர்கள் பார்த்துக் கொண்டிருக்
கும்போதே மரணத்தின் பால் அவர்கள் இழுத்துச் செல்லப்படுவதுபோன்று (நினைக்கிறார்கள்).அல்குர்ஆன் 8:6
நபி(ஸல்) அவர்களின் மரணத்தருவாயில் தொண்டை கட்டியநிலையில் கரகரத்தக் குரலில்அல்லாஹ்விடம் வேண்டுதல்
புரித்திருக்கிறார்கள். சரியாக பேசமுடியாத நிலை.நபி(ஸல்) அவர்களுக்கு மரணம்நெருங்கி விட்ட போது, அவர்கள்சிறிது நேரம் மயக்கமுற்றார்கள்.பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, வீட்டின் கூரையை நோக்கிநபியவர்களின் பார்வை நிலைகுத்தி
நின்றது. பின்னர் ”இறைவா (சொர்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன்சேர்த்தருள்” என வேண்டுதல்புரிந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புகாரி
மரணத் தருவாயில் (உயிர்)தொண்டைக் குழியை அடையும்போது; அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்; ஆயி
னும் நாமோ அவனுக்கு உங்களைவிட சமீபமாக இருக்கிறோம்;அல்குர்ஆன் 56:83லி85
இந்த மரணம் என்னும் பயணத்தின் இறுதி இலக்கு மறுமையே, இதுஅற்பம் உலக வாழ்வும் இடைக் கால,மண்ணறை வாழ்வும் இரண்டு தற்காலிக நிழல்களே, நீங்காத நிஜம்,மறுமை என்னும் நீண்ட பயணத்தில்முடிவு இல்லாத எல்லையே மறுமைவாழ்வைப் பற்றி மறக்காதீர்கள்.மரணத்தினால் மயக்க நிலைஅடைந்தவனைப் போன்று அவர்களுடைய கண்கள் சுழக்கின்றநிலையில், அவர்கள் உம்மைப்பார்த்துக் கொண்டிருப்பதை நீர்காண்பீர். அல்குர்ஆன் 33:19
இயற்கை மரணத்தைசத்திப்பவரின் நிலை:
1) இடுப்பு ஒடிந்த நிலையில்நிற்க முடியாமை; 2) கெண்டைக்கால்கள் ஒன்றையொன்று பின்னிநடக்க முடியாமை, 3) உயிர் தொண்
டைக் குழியை அடைக்க, 4) மயங்கிய நிலை, 5) உடல் வெப்பத்தால்குளுமையை நாடுதல்.நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில்மரணித்தார்களோ அந்நோயின்போது நபியவர்களின் தொண்டைகட்டிக் கொள்ள அல்லாஹ் அருள்புரிந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள். இறைப் பாதையில் உயிர்நீத்த தியாகிகள் நல்லடியார்களுடன்இருப்பார்கள் என்ற இறை வசனத்தைஓதினார்கள்.
பரம இரகசியம் மரணம்:
உயிரோடிருக்கையில் பெயருடனும், புகழுடனும் பற்பல சிறப்புப்பட்டங்களுடனும், வாழ்ந்தவன்,இன்னவரின் மைந்தன் என்று
மதிப்புடன் வாழ்த்தவன் தனதுசொந்தப் பெயரை இழக்கிறான்.பிணம், சடலம், ஜனாஸா, இர்க்ஹ் எனஅழைக்கப்படுகிறது.
நல்லோர்களின் உயிர்பறிக்கப்படும் நொடிகளில்:(நிராகரிப்பை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில், வானவர்கள் அவர்களைக் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் ‘ஸலாமுன் அலைக்கும் நீங்கள் செய்து கொண்டிருந்தசெயல்களுக்காக சுவனபதியில்
நுழையுங்கள்” என்று அவர்கள்சொல்வார்கள்.நல்லடியார்களின் உயிர் கைப்பற்றும் போது நல்ல மனிதர்கள்மரணத்திற்காக சந்தோஷத்துடன்உடலை விட்டு உயிர் பிரிகிறது.ஆனால் உறவினர்களோ இது புரியாமல் புலம்பல், கதறுதல் போன்றஅனாச்சார செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்காலிக இவ்வுலக வாழ்வைஒரு மனிதன் வாழ்ந்து நிரந்தரஉலகத்திற்காக தயாராகிவிடுகிறார்.
துன்பத்திற்குஉள்ளாக்கப்பட்டு பிரியும்தீயமரணம்:
மரணம் என்னை ஒரு போதும்நெருங்காது என சாவல்விட்டவனிடம் சுலபமாக உயிர் போகாமல் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டு பரிதாபநிலையிலும், புலம்பலுடனும் உயிர்பிரிகிறது. அற்பமான இவ்வுலகவாழ்க்கையில் வாழ்வை தொலைத்துவிட்டு நிரந்தரமான வாழ்வைபறிகொடுத்து விட்டது தீயவர்களின்உயிர்.எங்கள் இறைவனே! எங்களுக்குசற்றே அவகாசம் கொடுப்பாயாக!
அல்குல்அன் 14:44
பல வருடங்கள் இறைவன்அவகாசம் கொடுத்தும் அமல்செய்யாமல் இப்போது சில அவகாசம் கேட்பதில் நியாயமில்லை.எவ்வித பயனும் இல்லை. நான்மிகப் பெரியவன், நான் யார் தெரியுமா?என்று ஆணவத்துடன் கூறியவன்மிகக் கொடிய நிலையில் இவ்வுலகத்
திற்கு விடை கொடுக்கிறான். கொடியநரக வேதனையை வரவேற்றவனாக, மண்ணறையில் நுழைந்து விடுகிறான். கொடியவன் என்ன கத்தியும்உறவினர் திரும்ப உடலை வைத்துகொள்ளப்போவதும் இல்லை.இந்த அநியாயக்காரர்கள் மரணவேதனைகளில் இருக்கும்போதுநீங்கள் அவர்களைப் பார்த்தால்,வானவர்கள் தம் கைகளை விரித்தவர்களாக ”உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள். உண்மையில்லாததை அல்லாஹ்வின்மீது கூறிக் கொண்டிருந்ததின்காரணமாக இன்றைய தினம் நீங்கள் இழிவு தரும் வேதனையைக்கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்.
அல்குர்ஆன் 6:93
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரணத்தின் வானவரால் ஒருநல்லடியாரின் உயிர் பறிக்கப்பட்டுஅதை இரு வானவர்கள் சுகந்தமான
நறுமணத்துடன் வான் நோக்கிஎடுத்துச் செல்வார்கள். வானிலுள்ளவானவர்கள் ”பூமியில் நல்லடியாராகவாழ்ந்தவரின் உயிர் பூமியிலி
ருந்து வருகிறது. அதற்கு நம்நல்வாழ்த்துக்கள்” என போற்றிப்புகழ்ந்து இறைவனிடம் அவருக்காக வேண்டுதல் புரிவார்கள். ஒருபாவியின் உயிர் பறிக்கப்பட்டுவருகையில், கொடிய துர்நாற்றமடிக்கும் என நபி(ஸல்) அவர்கள் தமதுகைத்துனியால் மூக்கைப் பிடித்துக்கொண்டு கூறினார்கள். அந்தஉயிரை வானவர்கள் சபிப்பார்கள்.அதற்குரிய இடத்திற்கு (நரகிற்கு)எடுத்துச் செல்ல ஆணையிடப்படும்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
நூல்கள் : முஸ்லிம் 6867,
இப்னுமாஜா 4252, அஹ்மது 8414
மரணிக்கும் போதே தான்நல்லவனா? தீயவனா? இறையடியானா? பாவியா? சுவர்க்கவாசியா? நரகவாசியா என்பது எல்லாம் மரணிப்பவனுக்கு ஐயமின்றி விளங்கும்.உங்களில் எவர் செயலால்மிகவும் அழகானவர் என்பதைச்சோதிப்பதற்காக அவன், மரணத்
தையும் வாழ்வையும் படைத்தான்.அல்குர்ஆன் 67:2
சோதனையான வாழ்வையும்,மரணத்தையும் சாதனையாக மாற்றாவிட்டாலும், வேதனையாக மாறிவிடக்கூடாது. நம் நற்செயலால் வாழ்வைநிரப்பி வாழனும், தீய செயலால்வாழ்வைத் தொடங்கவும், முடிக்கவும் கூடாது. எதிர்பாராத நிலையில்நம்மைத் தாக்கவுள்ள மரணத்திற்குதயாராக இருக்கணும்.ஜஅஃபர்(ரலி) அவர்கள் போரில்உயிர் நீத்த செய்தி கிடைத்ததும்,ஜஅஃபரின் வீட்டாருக்கு உணவு
தயாரித்துக் கொடுங்கள். ஏனெனில்அவர்களை வேதனைக்குள்ளாக்கும்செய்தி வந்துள்ளது என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ்
இப்னு ஜஅஃபர்(ரலி)
நூல் : அபூதாவூத்
மரணத்திற்கு தயாராகணும்ஆனால் அதை வேண்டக் கூடாது:சிலர் தொழிலில் நஷ்டம், வியாபாரம், குடும்பம், பிள்ளைகள், செல்வம்
போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியாமலோ வாழ்வில் வெறுப்புற்று, நிராசையுடன் தற்கொலை செய்கிறார்கள். நமது உயிர் இறைவனால்அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தற்கொலைசெய்தவனின் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ளவில்லை.
அதை வெறுத்தார்கள்.உயிரைக்கொடுக்கும் உரிமைஎப்படி நமக்கில்லையோ, அதைப்போல் உயிரை எடுக்கும் உரிமையும் நமக்கில்லை. அது இறைவனின்அதிகாரத்திற்கு உட்பட்டது.உங்களில் எவரும் தமக்குநேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆக வேண்டும் என்றிருந்தால் இறைவா (நான்) உயிர் வாழ்வதுஎனக்கு நன்மையாக இருப்பின்என்னை உயிர் வாழச் செய்வாயாக!நான் இறந்து விடுவதே எனக்குநன்மையாக இருப்பின் எனக்குஇறப்பைத் தருவாயாக! என்று கேட்கப்படட்டும் என்றார்கள் நபி(ஸல்)அவர்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல் : புகாரி
உலகமே எல்லாம் என எண்னிவேடிக்கை ஆரவாரத்தில் மினுமினுப்பில் மனதைப் பறி கொடுத்து அவற்றைஅடைய வேண்டாம். இரு வாழ்வும்முக்கியமாகக் கருதி தீய செயலைத்தவிர்த்து நற்செயலை அதிகரித்துஒவ்வொரு நிமிடமும் மரணத்திற்குத் தயாராகி இருந்தால் தவறுகள்பாவம் நம்மிடம் குறையும் மரணத்தைக் கண்டு விரண்டோடாதீர்கள்.மரணம் நம்மைக் கண்டே தீரும்எப்பொழுதும் நாம் மரணத்திற்குதயாராகி காத்திருப்பின் பலனைப்பறுவோம் இன்ஷாஅல்லாஹ்.

0 comments: