அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 8

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியா கலப்பில்லாத இறை நம்பிக்கைக்கு வழி என்ன?
    நிறைவு செய்வதற்கு முன்பு, ரியா தொடர்பாக இன்னும் சில விளக்கங்களை அளிப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

    1. ரியாவாகி விடுமோ என்ற அச்சத்தில் நற்செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுதல்

    நமது நற்செயல்களை அழிப்பதற்காக ஷைத்தான் கையாளும் முறைகளில் ஒன்று தான் ரியா என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால் ரியாவாகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நாம் நற்செயல்கள் பூிவதைத் தடுப்பதும் ஷைத்தானிக் இன்னொரு ஊசலாட்டம் என்பதை மறந்து விடக் கூடாது. நற்செயல்களின் பலன்கள் நம்மை வந்து சேரக் கூடாது, என்பதற்காக ஷைத்தான் இந்த உத்தியைக் கையாளுகின்றான். ரியா மூலம்மனிதர்களின் நற்செயல்களை அழிக்க முடியாவிட்டால், அதற்கு நேர் மாற்றமாக ரியாவின் அச்சத்தினால் நற்செயல்கள் பூிவதிலிருந்து மக்களைத் தடுக்கும் செயலின் ஷைத்தான் ஈடுபடுகிறான்.
    உண்மையான நம்பிக்கையாளர் ரியா பற்றிய அச்சம் கொண்டவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் நற்செயல்களிலிருந்து மனிதனைத் தடுக்கும் வகையில் இந்த அச்சம் அமைந்து விடக் கூடாது.

    ஃபுலைல் பின் இயால், பின்வருமாறு கூறினார்கள்: 'மக்களைக் காரணமாக வைத்து, நற்செயல்கள் பூிவதை நிறுத்திக் கொள்வதும் ரியா ஆகும். மேலும் மக்களுக்குக் காண்பிப்பதற்காக நற்செயல்கள் புரிவதும் சிறிய இணை வைப்பாகும். இந்த இரண்டு வகையான செயல்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வது தான் தூய்மையான எண்ணமாகும்."

    நாம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய தொழுகை, ஹஜ் முதலிய கடமைகள் பொது மக்கள் பார்வையில் படும்படியாகத் தான் நிறைவேற்றுகிறோம். இச்செயல்கள் பற்றித் தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில செயல்களைப் பிறர் பார்வைக்குத் தெரியாத வகையிலும் நாம் நிறைவேற்றலாம்.

உதாரணமாக தான, தர்மங்களை மறைவாக நிறைவேற்றலாம். இருப்பினும், தான தர்மம் போன்ற நற்செயல்களைப் புரியும் மனப் போக்கு மற்றவர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவ்வப்போது பகிரங்கமாகவும் அவற்றை நிறைவேற்றலாம். ஆனால் பகிரங்கமாக தானம் செய்யும் போது, நம் உள்ளத்தில் கிஞ்சிற்றும் ரியா ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். பிறருக்குத் தெரியாத வகையில் ஒருமனிதர் திருக்குர்ஆன் ஓதுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதில் தவறேயில்லை. அது தான் சிறந்த வழியாக இருக்கும் என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    ஷைத்தானின் மற்றொரு வித்தையையும் இங்கே குறிப்பிட வித்தையையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அல்லாஹ் தமக்கு அருளிய கல்வியை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க சில பக்திமான்கள் மறுப்பார்கள். இதற்குக் காரணம் இவ்வாறு கற்றுக் கொடுப்பது ரியா ஆகி விடுமோ என்று அவர்கள் அஞ்சுவது தான். ஆனால் இத்தகைய செயல் தமது பாவ மூட்டையை அதிகாிக்கின்றது என்பதை அவர்கள் உணர்வதில்லை. அல்லாஹ் தமக்கு அருளியுள்ள கல்வியைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பது தம்மீது கடமை என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    இப்னுல் ஜவ்ஸி பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: 'மக்களைக் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் உடையவர் மனதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. அவரது உள்ளத்தில் 'உன்னைப் போன்றோர் சொற்பொழிவு செய்வதற்கே தகுதியற்றவர்கள்" என்று ஷைத்தான் கிசுகிசுப்பான். தனது தகுதி மீது சந்தேகம் ஏற்பட்டு, அந்த மனிதர் சொற்பொழிவாற்றுவதை விட்டு விட்டால், அவரது வாயை அடைப்பதில் ஷைத்தான் வெற்றி பெற்று விட்டான் என்றே பொருள்.
    வேறு பல முறைகளிலும் ஷைத்தான் நற்செயல்கள் புரியும் மனிதர்கள் உள்ளத்தில் கிசுகிசுப்பான். 'உனது செயல்கள் உனக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகின்றன. ரியா உனது உள்ளத்தில் ஊடுருவியது போல் தொிகின்றது. எனவே இந்த நற்செயல்களை விட்டு ஒதுங்கியிருப்பதே நலமாகும்" என்று ஷைத்தான் முணுமுணுப்பான். இந்த நல்லமனிதர் மற்றும் அவரது நற்செயல்களால் பயனடைவோருக்கு நன்மையின் வாசலை அடைப்பது தான் ஷைத்தானின் உண்மையான நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நூல்: தல்பீஸ் இப்லீஸ்

    ஒரு உண்மையான விசுவாசி, தூய்மையான, உறுதியான மனதுடன், அதிகபட்சமான நற்செயல்களில் ஈடுபட வேண்டும். ரியாவிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு அவர் அல்லாஹ்வை இறைஞ்சுவதுடன், அல்லாஹ்வின் மீது பாரத்தைச் சுமத்த வேண்டும்.

    நற்செயல்களைப் புரிந்து கொண்டே, ரியாவின் அச்சுறுத்தலை எதிர் கொண்டிருப்பதன் மூலம் தான் ரியாவை எதிர்த்து நிற்பது எப்படி என்பதை ஒரு மனிதரால் கற்க முடியும். நல்ல செயல்களைச் செய்வதை விட்டு விலகி நிற்பது, நற்கூலிகள் கிடைப்பதைத் தடுப்பது மட்டுமன்றி அவரது ஏனைய நற்செயல்களையும் பாழ்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி விடும்.

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்:

    மக்களுடன் பழகி அவர்களால் ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளாத நல்லடியானை விடச் சிறந்தவர் ஆவார். நூல்: திர்மிதீ, இப்னுமாஜா

    இஸ்லாம் துறவறத்தைத் தடை செய்துள்ளது. இதற்குக் காரணம், துறவறம் போலித்தனமான நேர்மை உணர்வையும் இறைவனுக்கு நெருக்கமானவர் என்ற போலித் தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மக்களுடன் பழகுவதை தவிர்த்துக் கொள்வது மூலம் ரியாவைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால் ரியா ஏற்படும் சூழலை எதிர்கொண்டு, அதனுடன் முட்டி மோதுவதின் மூலம் தான் ரியா நம்மை ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடியும். மக்களுடன் எப்படித்தான் ஒருவர் விலகியிருந்த போதிலும், அவர்களுடன் தொடர்பு ஏற்படுவதைத் தடுக்க இயலாது. இப்படித் தொடர்பு ஏற்படும் போது, மக்களை விட்டு விலகியிருந்த மனிதனின் பலவீனங்கள் அம்பலமாகி விடும். தன்னைத் தூய்மைப்படுத்தி, தனது நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக உண்மையான நம்பிக்கையாளர் தன்னை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதில்லை.

நெருப்பில் புடம் போட்டு தூய்மையான உலோகம் தயாராகுவது போல்மனிதர்களிடையான சமூக உறவில் ஏற்படும் உரசல்களிலிருந்து தான் ரியா கலப்பில்லாத உண்மையான நம்பிக்கை உருவாகும்.

    2. சாதனைகளை பகட்டிற்காக வெளிப்படுத்துதல்
    முழுக்க முழுக்க மார்க்க விவகாரங்கள் தொடர்பான 'ரியா"வைப் பற்றி விளக்குவது மட்டுமே இந்த நூலின் நோக்கமாகும்.

    உலக விவகாரங்களில் ரியா எப்படியெல்லாம் கடைபிடிக்கப் படுகின்றது என்பது குறித்து நாம் இதுவரை விவாதிக்கவில்லை. தனது சொத்துக்களை, சாதனைகளைப் பகட்டிற்காக வெளிப்படுத்துதல் போன்றவற்றை தான் உலக விவகாரங்களுக்காக 'ரியா" என்று நாம் குறிப்பிடுகிறோம்.

    உதாரணமாக தன்னிடம் இருக்கும் செல்வத்தைக் காட்டுவதற்காக ஒருமனிதர் தனது வீட்டிற்கு விருந்தாளிகளை அழைக்கலாம். இது போல் தனது கல்வி மற்றும் இதர சாதனைகள் குறித்து ஒருமனிதர் பெருமையாகப் பேசலாம். இது போன்ற நடவடிக்கைகள், நாம் இந்த நூலில் விவாதித்து வந்த ரியாவின் வகையில் சேராது. ஆனால் ஒரு உண்மையான நம்பிக்கையாளருக்கு இப்படி நடந்து கொள்வது அழகல்ல. இஸ்லாம் அடக்கத்தையும், எளிமையையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகின்றது.

    அல்லாஹ் திருக்குர்ஆனில், 'ரஹ்மானின் அடியார்கள் யாரெனில் பூமியில் அவர்கள் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது சாந்தி" எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 25:63)

    பகட்டாக நடந்து கொள்வோர் பற்றி அண்ணல் நபி பின்வருமாறு கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    புகழ் எனும் ஆடையை எவரொருவர் (இவ்வுலகில்) அணிகிறாரோ, அவருக்கு இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவமானத்தின் ஆடையை அணிவிப்பான்" ஆதாரம்: அபூதாவூத்

    உலக விவகாரங்களில் கூட பகட்டாக நடந்து கொள்வது பெரும் பாவம் என்பதையும் எனவே அதனைத் தவிர்த்துக் கொள்வது அவசியம், என்பதையும் இந்த நபிமொழியிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

    ஆனால், இந்த வகைப் பகட்டுத் தனம் சிறிய இணை வைப்பில் சேராது. ஆனால் இது பெருமை மற்றும், டாம்பீகத்தின் அடையாளமாக அமைவதால் இக்குணங்கள் நம்பிக்கையாளாின் பண்பாக இருக்க முடியாது. இத்தகைய போக்கு மிக எளிதாக ரியாவில் கொண்டு போய்ச் சேர்ந்துவிடும். உலக விவகாரங்களில் புகழையும், போற்றுதலையும் விரும்பும் மனப்பான்மையுடைய மனிதன், மார்க்க விஷயங்களிலும் அதனை நாடக் கூடியவனாக எளிதில் மாறி விடுவான்.

    3. சிறியவகை இணைவைப்பின் ஏனைய வடிவங்கள்
    ரியாவைத் தவிர வேறு பல வடிவங்களிலும் சிறிய வகை இணை வைப்புகள் உள்ளன. இவை குறித்து அண்ணல் நபி  பல நபிமொழிகளில் குறிப்பிட்டுள்ளார்கள். பின்வரும் நடத்தைகள் 'ரியா"வைப் போன்று சிறிய வகை இணைவைப்பு அந்தஸ்தில் உள்ளன. அதாவது இத்தகைய நடத்தையுடையவர்கள் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிக்கவும் கூடும்.

    அ. சகுனம் பார்த்தல்
    அல்லாஹ்வின் படைப்புகளைப் பார்த்து நன்மை அல்லது தீமை பயக்கும் சகுனம் பார்ப்பதை நபிகள் நாயகம் அவர்கள் தடை செய்தார்கள். பறவைகள் அல்லது மிருகங்கள் செல்லும் திசையை முன் வைத்து நன்மை, தீமையைக் கணித்து, அதன் அடிப்படையில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் வழக்கம் அண்ணல் நபி அவர்களின் வருகைக்கு முன்பு அரபுகளிடையே இருந்து வந்தது.

    உதாரணமாக ஒருமனிதர் பயணத்தில் செல்லும் போது, ஒரு பறவை அவர் மேல் பறந்து சென்று இடது புறம் திரும்பினால், அதனை ஒரு கெட்ட சகுனம் என்று கருதி அவர் வீடு திரும்பி விடுவார். இப்படி பறவைகளின் நடமாட்டத்தை வைத்து ஆருடம் பார்ப்பது 'தியரா" என்று அழைக்கப்பட்டது. அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.

    'தியரா (பறவை மூலம் சகுனம் பார்த்தல்) இணை வைப்பாகும்" ஆதாரம்: அபூதாவூத்
அனைத்து வகையான சகுனம் பார்த்தலும் சிறிய வகை இணை வைப்பாகும்.

    ஆ. அல்லாஹ் அல்லாத மற்றவர்களின் பெயாில் சத்தியம் செய்தல்

அல்லாஹ்வின் தூதா; கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

    'எவரொருவர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களின் பெயாில் சத்தியம் செய்கிறாரோ அவர் இணை வைத்தவராவார்." நூல்: திர்மிதி

    அல்லாஹ்வின் படைப்புகளின் பெயாில் சத்தியம் செய்தல் சிறிய வகை இணை வைப்பின் ஒரு வடிவமாகும். சத்தியம் செய்ய விரும்புவோர் அல்லாஹ்வின் பெயாில் தான் அதனைச் செய்ய வேண்டுமே அன்றி அவனது படைப்புகளின் பெயாில் அதனைச் செய்யக் கூடாது.

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக குத்தைலா பின்த் ஷபி (ரலி) அறிவிக்கிறார்கள்:

    'சத்தியம் செய்ய விரும்புவோர் கஃபாவின் அதிபதியின் பெயாில் சத்தியம் செய்யட்டும்." ஆதாரம்: அஹ்மது, பைஹக்கி

    இ. இயற்கையின் நிகழ்வுகளுக்குமனிதர்களைக் காரணமாகக் கூறுதல்
    அல்லாஹ் மட்டுமே நமது சுற்றுப்புறத்தின் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிறான் என்பதை ஒரு முஸ்லிம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதா; அவர்கள் கூறியதாக ஸைத் பின் காலித் அல் ஜுஹனி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

    'அல்லாஹ்வின் திருத்தூதா; அவர்கள், ஹுதைபிய்யாவில் மழை பெய்திருந்த ஒரு இரவைத் தொடர்ந்து காலை (சுபுஹு) தொழுகையைத் தலைமையேற்று நடத்தினார்கள். திருத்தூதா; தொழுகையை முடித்தவுடன், மக்களை நோக்கி, 'உங்களுடைய ரப்பு (இரட்ஷகன்) என்ன கூறியுள்ளான் என்று உங்களுக்குத் தொியுமா?" என்று வினவினார்கள். அதற்கு மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் மட்டுமே அதனை நன்கு அறிவார்கள்" என்ற பதிலுரைத்தார்கள். திருத்தூதா; (அல்லாஹ் கூறியதாக) சொன்னார்கள்: 'இன்று காலை என்னுடைய அடியார்களில் ஒருவர் என் மீது நம்பிக்கை கொண்ட முஃமினாகவும் மற்றொருவர் என் மீது நம்பிக்கை கொள்ளாத காஃபிராகவும் மாறியுள்ளார்கள். எவர், 'அல்லாஹ்வின் பொருட்டாலும் அவனது கருணையாலும் தமக்கு மழை இறக்கப்பட்டுள்ளது" என்று கூறினாரோ அவர் (என் மீது நம்பிக்கையுள்ள) முஃமினாகவும், (குறிப்பிட்ட) நட்சத்திரத்(தால் மழை பெய்தது என்ப)தை நிராகாித்தவராகவும் விளங்குகிறார். எவர் 'மழை பொழிவதற்கு இன்னின்ன நட்சத்திரங்களே காரணம்" என்று கூறுகிறாரோ (அவர் என் மீது நம்பிக்கையற்ற) காஃபிராகவும் நட்சத்திரங்கள் மீது நம்பிக்கையுள்ளவராகவும் விளங்குகிறார். ஆதாரம்: புகாாி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், முஅத்தா, நஸயீ

    இதற்கு இன்னொரு உதாரணம் 'அல்லாஹ்வின் உதவி மற்றும் இன்னாாின் உதவி இல்லாமல் இருந்தால், எனக்கு நன்மை ஏற்பட்டிருக்காது" என்றோ அல்லது இது போன்றோ ஒரு மனிதாின் உதவியை அல்லாஹ்வின் உதவிக்கு இணையாகக் கருதும் வழக்கம் சிலாிடம் உள்ளது.

அதனால் இது சரியான சொற்பிரயோகம் அல்ல. இதற்கு மாறாக 'அல்லாஹ்வின் உதவி மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால், இதற்குப் பிறகு இன்னாாின் உதவி கிடைக்காமல் இருந்திருந்தால்...." என்ற முறையில் அல்லாஹ்வின் உதவியை மனிதர்களின் உதவியுடன் சமப்படுத்தாமல் வார்த்தைப் பிரயோகம் செய்வது தான் சரியான வழியாகும்.
 'ரியா"விலிருந்து காப்பாற்ற இறைவனிடம் கையேந்துவோம்!   ...
இன்ஷா அல்லாஹ்  - அல்லாஹ்  நாடினால்   >>>>>>>>  தொடரும்

0 comments: