அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday 28 February 2014

முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...

அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

   இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லிமாளாதது. சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...

"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள்.
நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

Wednesday 26 February 2014

அவ்ப் ஹனீபா : 60 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயனாக நடித்தவர் · இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக...


 முஸ்லிம்கள் அவர்களது பணியை சரியாகச் செய்யாவிட்டால்ஏனையவர்களைக் கொண்டு அந்தப் பணியை நான் செய்வேன் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.

உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

எனது பெற்றோர்கள் கல்ஹின்னையைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றினார்எனவேஅவருக்கு இடமாற்றம் கிடைத்து செல்லும் இடங்களுக்கெல்லாம் நாமும் செல்ல வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் பதுள்ளையில் உள்ள 'தர்மதூதபாடசாலையில் கற்றேன். பின்னர்கம்பளை ஸாஹிறாவுக்கு வந்து சாதாரண தரம் வரை கற்றேன். பின்னர்தந்தைக்கு கொழும்புக்கு இடமாற்றம் கிடைத்தது. கொழும்புக்கு வந்து வகுப்புக்களுக்குச் சென்று வந்தேன்.

அப்போதுதான் எனக்கு சினிமாத்துறையில் நடிகராக வரவேண்டும் என்ற ஆசை வந்தது. பின்னர் ஒரு பிரபலமான நடிகராக மாறினேன். 65 திரைப்படங்கள் கதாநாயகனாக நடித்தேன். தற்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு வியாபாரத்தை நடாத்தி வருகிறேன்.

நீங்கள் எவ்வாறு சினிமாத்துறைக்கு வந்தீர்கள்?

dஎனது தந்தை ஓய்வு பெற்று டுபாய்க்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்டுபாய் நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் பல உள்ளன. வந்தால் சேர்ந்துகொள்ளலாம் என தந்தையார் அடிக்கடி அழைத்துக்கொண்டிருந்தார்நான் செல்லவில்லை. நான் பல திரைப்படங்கள் பார்த்தேன். எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. சில மேடை நாடகங்களை அரங்கேற்றினேன். பலரிடம் போய் நடிக்க வாய்ப்புக் கேட்டேன். யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. கடைசியாக நானே ஒரு படத்தைத் தயாரித்தால்தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். எனவேபணம் சேர்ப்பதற்காக டுபாய் செல்ல முடிவு செய்து தந்தையிடம் சொன்னேன்.

அங்கு சென்று சுமார் இரண்டு வருடங்கள் அளவில் தொழில் புரிந்து பணத்தைச் சேர்த்துக்கொண்டு வந்து ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் 'ஒபட திவுரா கியன்னம்” என்ற திரைப்படம். சுனில் சோம பீரிஸ் என்பவர்அதனை இயக்கினார்அதில் அனோஜா வீரசிங்க அவர்கள் என்னோடு ஜோடியாக நடித்தார்அந்தத் திரைப்படம்138 நாட்கள் ஓடியது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


Tuesday 18 February 2014

இஸ்திகாராத் தொழுகை

நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப் பெயர். 'திருக்குர்ஆனின் சூராக்களை கற்றுத் தந்தது போன்று ஒவ்வொரு விஷயங்களிலும் இஸ்திகாராவை எங்களுக்கு எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்' என ஜாபிர் இன்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவிக்கிறார்கள். நூல்: புஹாரி.

ஒருவர் ஒரு செயலைச் செய்வதா? அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? அல்லது தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து கொண்டு இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில், பாத்திஹா சூராவிற்குப் பின் 'குல் யாஅய்யுஹல் காபிரூன்' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். அந்த செயலை செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்ற தெளிவான முடிவு அவனுக்கு கிடைக்கும் வரை இவ்வாறு திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும். இதன்பின்பும் தெளிவு ஏற்படாவிடில் தனக்கு எது இலகுவாகத் தோன்றுகிறதோ அந்தச் செயலை செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் அதுநன்மையாகவே முடியும். தொழுது முடிந்த பின் 'இஸ்திகாரா'வின் இந்த துஅவை ஓதுவது விரும்பத்தக்கது.

دُعَاء

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ ، وَاَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَاَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ . فَاِنَّكَ تَقْدِرُ وَلاَ اَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا اَعْلَمُ ، وَاَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ ، اَللّٰهُمَّ اِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ خَيْرٌ لِّىْ فِيْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِيْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَقَدِّرْهُ لِىْ ، وَبَارِكْ لِىْ فِيْهِ ، ثُمَّ يَسِّرْهُ لِىْ ،وَاِنْ كُنْتَ تَعْلَمُ اَنَّ هٰذَا الْاَمْرَ شَرٌّ لِّىْ فِىْ دِيْنِىْ وَدُنْيَايَ وَعَاقِبَةِ اَمْرِىْ وَعَاجِلِهِ وَآجِلِهِ فَاصْرِفْنِىْ عَنْهُ ، وَاصْرِفْهُ عَنِّىْ ، وَاقْدِرْلِيَ الْخَيْرَ اَيْنَمَا كَانَ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ .

பொருள்:

Yuvan Shankar Raja embraces Islam

Yuvan Shankar Raja embraces Islam



தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது. அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

MasaAllah !!! Michael Jackson’s Sister Janet jackson converts to Islam...

மாஷா அல்லாஹ்! மைக்கல் ஜாக்சனின் சகோதரி ஜெனட் ஜாக்சன் இஸ்லாத்தை தழுவியுள்ளார். தற்போது அவரின் பெயர் ஜன்னத் விஸ்ஸம். 

MasaAllah !!! Michael Jackson’s Sister Janet jackson converts to Islam... Her new name is Jannat Wissam...தற்போது அவரின் பெயர் ஜன்னத் விஸ்ஸம். 

அல்லாஹ் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துவான்..இன்றைய உலகில் நிறைய எதிர்ப்புகள் விமர்சனங்கள் அடக்குமுறைகள் எல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ..மக்கள் கூட்டம் கூட்டமாக விரைவதும் இஸ்லாத்தை நோக்கியே..இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 9 சதவீதமாக இருந்து..இன்று உலகின் நான்கில் ஒருவர் முஸ்லிம் என்பது ஆச்சர்யம்..இஸ்லாம் மட்டுமே இறைவன் ஏற்றுகொள்ளும் வழி..என்பது உலகம் விளங்கும்..இன்ஷா அல்லாஹ்

சமரசம் 16 - 28 பிப்ரவரி 2014

Wednesday 5 February 2014

குர்ஆனின் நற்போதனைகள் - நாவைப் பேணுக!

உண்மை பேசுக! அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
 நேர்மையாக பேசுக! ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக! பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக! உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக! நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள். 6:152

சமரசம் 01 - 15 பிப்ரவரி 2014

http://www.samarasam.net/2014/01-15_Feb_14/index.htm#1