அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Wednesday 12 March 2014

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன ? ஒரு விழிப்புணர்வு ஆய்வு...

இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர். இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான். 


"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அல்குர்ஆன் (4 : 119)


உருவத்தில் ஆணாக இருந்து கொண்டு பெண்களைப் போன்று உடை அணிவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி (5885)



 5886حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ فُلَانًا رواه البخاري 


நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், "அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரைரை வெளியேற்றினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி நூல் : புகாரி (5886)


இது போன்று தீய நடத்தை கொண்ட அரவாணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். 
  
என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்) "அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த "அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், "அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)  நூல் : புகாரி (4324) 


ஆண்கள் எவ்வாறு பெண்களுடைய சபைக்கு செல்லக் கூடாதோ அதைப் போன்று அலிகளும் செல்லக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.   


அரவாணிகளை மாற்று மத  மக்கள் மதிக்கின்ற நிகழ்வுகளும் உண்டு,

திருமண விழா குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா கடை திறப்பு விழா போன்ற நற்காரியங்களுக்கு பூசாரியை அழைப்பது போன்றே திருநங்கைகளையும் அழைத்து ஆசி வாங்கிக் கொள்ளும் பழக்கம் மும்பை போன்ற பகுதிகளில் அதிகமாக உள்ளது. அரவாணியிடம் ஆசி பெற்றால் குழந்தை அரவாணியாக மாறாது என்று நம்பிக்கையும் நிலவுகிறது.

 http://www.youtube.com/watch?v=5iljkl7nva4&feature=player_embedded

 நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும். “எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத். 

 அரவாணிகள் பற்றி இஸ்லாம் கூறுவது ....


நபிமொழிகளில்அரவாணிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இவர்கள் அறுவறுப்பான முறையில் பெண்களின்அங்கங்களைக் கொச்சைப் படுத்தி வர்ணிப்பவர்கள் என்பதால் அரவாணிகளை வீடுகளில்சேர்க்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். நபிமொழித் தொகுப்பு புகாரி நூலில் அறிவிக்கப்பட்ட அரவாணிகளின் செய்தி: பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4324 


(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 
என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்)அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னுஅபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ்வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம்நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்''என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள்(பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்றுகூறினார்கள். இப்னு உயைனா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்தஅலியின் பெயர் 'ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ... மற்றோர் அறிவிப்பில், 'அப்போது நபி(ஸல்) அவர்கள் தாயிஃபை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5235 


உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 
 நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்' என்றார்கள்.அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள்இன்னாரை வெளியேற்றினார்கள். பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5887.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!' என்றும்சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி)அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள். 

யார் யாரெல்லாமோ இஸ்லாத்திற்கு வாரங்க என்றால் சந்தோசப்படும் இஸ்லாமியர்களாகிய நீங்கள். நீங்கள் மறந்த இஸ்லாமிய கொள்கைகளை , கலாச்சாரத்தை நினைவுட்டினால் கோபப்படுரீகளே?
Labels & LINK : இறைமார்க்கம் கண்டோர்>http://riyazpages.blogspot.in/search/label/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும்.பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், “மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே” என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும். “எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத். என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். “அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.    
Labels: வழிகேடு பித்அத் > http://jaasimshareef.blogspot.in/2014/02/blog-post_27.html
  • கலாச்சார ஊடுருவல் http://jaasimshareef.blogspot.in/2014/02/blog-post_27.html
அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானதா?

அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானது என்று இன்றைக்கு சில தன்னார்வக் குழுக்கள் குரல் கொடுக்கின்றன.

இவர்கள் இப்படி குரல் கொடுப்பது சமுதாய சிந்தனையுள்ளவர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்குகிறது.

இயற்கைக்கு மாற்றமாக செய்ற்கை முறையில் தன்னை பெண்ணாக காட்ட முயலும் இவர்கள் சுய லாபத்திற்காக உழைக்காமல் கையேந்தி சாப்பிடுவதற்காக இப்படி செய்யும் போது சமுதாய நலனை விரும்பும் எந்தவொருவரும் அவர்களை எதிர்க்க வேண்டுமே தவிர அவர்களை ஆதரிப்பது எந்த விதத்திலும் சரியானதாக அமையாது.

அத்தோடு ஓரினச் சேர்க்கை போன்ற மிகப் பெரும் சமூகக் கொடுமையை அரங்கேற்றும் இவர்களை ஆதரித்தால் அவர்களை நாம் எந்த பட்டியலில் சேர்ப்பது?

இஸ்லாமிய தீர்ப்பு என்ன?

அரவாணிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் இவர்களைப் பற்றி இஸ்லாம் அழகான மிகத் தெளிவான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.

உலகில் ஏற்படும் அணைத்துப் பிரச்சினைகளுக்கும் அழகாக எந்த மார்க்கமும் சொல்லாத வகையில் தீர்பை சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் என்பது உலகறிந்த உண்மை.

இந்த தூய இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது.
இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப் பட முடியாதவர்கள்.

உலகில் ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் தான் இருக்கிறது. இதை தவிர செயற்கை பாலினமாக மாற முனையும் இவர்களை ஒருக்காலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.

திருக்குர்ஆன் பார்வையில் இரண்டு பாலினம் மாத்திரமே!

உலகில் இரண்டு பாலினம் மாத்திரமே உள்ளது என்பதை குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்(4:1)

மேற்கண்ட வசனத்தில் ஆதம்(அலை)மூலம் அவரின் துணையை படைத்து அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.என்று குறிப்பிடுவதிலிருந்து உலகில் ஆண் பெண் ஆகிய இரு பாலினத்தைத் தவிற வேறு பாலினம் இல்லை என்பது உள்ளங் கையில் நெல்லிக் கணி போல் தெளிவான விஷயம்.

0 comments: