அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Monday, 8 April 2013

Hijab brought me to Islam: Jessica-New revert to ... - Islam


Assalamu Alaikkum Dear Brothers & Sisters...

Hijab brought me to Islam: Jessica

Jessica Rhodes is a 21 year old female from Norwich, UK who works as a telesales consultant and is also a student. She was a Pagan before reverting to Islam a month ago.
She was born in 1991 and was adopted in 1993. Grew up in a small seaside town on the south east coast of England, she went to university at 19 to study for a degree in Music and she hopes to do postgraduate qualifications in counselling starting September 2013.
She has an amazing story of her reversion and how she got attracted to Islam.
New York based lady Nazma Khan started a campaign known as ‘world hijab day’.
The movement has been organised almost solely over social networking sites.

Sunday, 31 March 2013

கேட் ஸ்டீபன்ஸ் (எ ) யூசுப் இஸ்லாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பு


பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்:

நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக தம்மைத் தயார்படுத்துவதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். ஏனென்றால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன் அதை மீண்டும் பெறவே இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:

கமலாதாஸ் (எ) ஸுரையா இஸ்லாத்தை ஏற்ற பின்பு


கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.

கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.

காதலுகாக இஸ்லாத்தை ஏற்று!!! இஸ்லாத்திற்காக காதலையும் , குடுபத்தையும் இழந்த சகோதரன்!!! :



ஒரு சில நாட்களுக்கு முன் அப்சல் கான் என்ற சகோதரர் உடன் தொலைபேசிய்ல் பேசி கொண்டு இருந்தேன்! ஒரு சில நிமிடம் கழித்து அப்சல் கான் என்னிடம் அவர் நண்பரை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு சில மாதகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர் அப்துல் ரஹ்மான் என்று அவரிடம் என்னை பேச சொன்னார்

நன் அவர் இடம் பேச தொடகினேன்! அவரை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன்!

கேட்டு அறிந்தஉடன் என் உள்ளம் அழவேண்டும் என்று சொன்னது!

9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய பெண்மனி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins)


9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய பெண்மனி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins)

சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர். 

ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார். 

இஸ்லாத்திற்காக கணவனையும் குடும்பத்தினரை இழந்த டாக்டர் ஜைனப்., M.D. (மதுமிதா மிஷ்ரா)


ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

யுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்


''ட்ரூ கால்'' islam.thetruecall இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ''முஹம்மது யூஃஸுப்''பிடம் நேருக்கு நேர் கண்ட ''பேட்டி''

உலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.

அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.

இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்






பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ் அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.