அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Thursday, 5 June 2014

ரமளானை வரவேற்போம்!

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தை சந்திக்கும் முஸ்லிம்களுக்கு, அந்த ஒவ்வொருரமளான் மாதத்தையும் புதிதாக எதிர்கொள்வது போலவே உவகையுடன் – களிப்புடனும் வரவேற்பார்கள். வருடத்தில் பதினோரு மாதங்கள் பகல் பொழுதில் உண்ணுவதையும், பருகுவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தவர்கள், இதற்கு நேர் எதிர்மறையாக பகல் பொழுது முழுவதும் – உண்ணுவதையும், பருகுவதையும் கைவிட்டு – ஏக இறைவனின் திருப்திக்காக மட்டுமே உண்ணா நோன்பைப் பூர்த்தி செய்வார்கள்.

வணக்க வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குரியது. அனைத்து வழிபாடுகளிலும் ”நோன்பு” என்ற வணக்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. ஒருவர் மற்ற வணக்கங்களை தாம் தனித்தே செய்தாலும் அதைப் பிறர் காணும் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் உண்ணா நோன்பிருக்கும் வணக்கத்தில் அவர் உண்ணவில்லை, பருகவில்லை என்பதை மற்றெவரும் காண வாய்ப்பில்லை. தனிமையில், எவரும் அறியாமல் உண்ணவும், பருகவும் செய்துவிட்டு நான் உண்ணா நோன்பிருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லிக்கொள்ள முடியும்.

தனிமையில் இருந்தாலும் உண்ணாமல், பருகாமல் இருப்பது இறைவனுக்காக மட்டுமே என்பதால், அடியான் நோன்பென்ற வணக்கத்தைத் தனக்காகவேச் செய்கிறான் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். ரமளான் மாதத்ததை வரவேற்று உண்ணா நோன்பை எதிர்கொள்ளவிருக்கும் முஸ்லிம்களுக்கு ரமளான் மாதத்திற்கான சில சட்டங்கள் இங்கே..

புனித மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

அல்லாஹ் கூறுகிறான்..

சமரசம் 1 - 15 ஜூன் 2014

Monday, 5 May 2014

பொருளீட்டுதலின் அத்தியாவசியம்

'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10

இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.

தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

கடன் குறித்து இஸ்லாத்தின் பார்வை

கடன் என்பது மனிதர்கள் சர்வ சாதாரணமாக பணமாகவோ பொருளாகவோ என்று ஒருவர் மற்றவரிடம் வாங்கக் கூடிய ஒரு சூழலில் என்றென்றும் இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் என்றுமே கடன் வாங்காதவராகவும் இருக்கலாம்; ஆனால் கடன் என்பது தனி மனிதன் முதல் நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து அரசுகள் மற்ற அரசுகளிடம் இருந்து இன்று வங்கிகள் மற்ற வங்கிகளில் என்று பலவிதமாக தற்போது புழக்கத்தில் உள்ளது.

சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.

Saturday, 19 April 2014

இறைவனின் ஞான உபதேசங்கள் - வாழ்வியல் அறிவுரை

பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ, வசனங்கள்: 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

17:22. அல்லாஹ்வுடன் மற்றோர் இறைவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!