ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
மூல ஆசிாியர் உரை
திருக்குர்ஆன் வாயிலாக எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்திற்கு பின்வரும் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.
ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
(திருக்குர்ஆன் 35:6)
ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,

'நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்" (திருக்குர்ஆன் 7:16,17)
மேலும் ஒரு வசனத்தில் ஷைத்தானால் வழிகெடுக்க முடியாத மனிதர்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலவீனத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.
என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழுக்காக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)