அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Tuesday, 16 April 2013

அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்


هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأَخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلۡبَاطِنُ‌ۖ وَهُوَ بِكُلِّ شَىۡءٍ عَلِيمٌ
அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (ஸூரா அல்ஹதீது 57:3)
يَعۡلَمُ مَا يَلِجُ فِى ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡہَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيہَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ
http://www.allah.org/allah.jpgபூமிக்குள் பதிகின்ற (வித்து முதலிய)வைகளையும், அதிலிருந்து வெளிப்படும் (மரம், செடி முதலிய) இவைகளையும் வானத்திலிருந்து இறங்குபவைகளையும் அதன் பக்கம் ஏறுகின்றவைகளையும் அவன் நன்கறிவான். (ஸூரா ஸபா 34:2)
وَعِندَهُ ۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَ‌ۚ وَيَعۡلَمُ مَا فِى ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ‌ۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٍ۬ فِى ظُلُمَـٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٍ۬ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَـٰبٍ۬ مُّبِينٍ۬
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (ஸூரா அல்அன்ஆம் 6:59)
وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۚۦ
…அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை… (ஸூரா ஃபாதிர் 35:11)
 ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ سَبۡعَ سَمَـٰوَٲتٍ۬ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَہُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىۡءٍ۬ قَدِيرٌ۬ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَىۡءٍ عِلۡمَۢا

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை


Post image for வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை
இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
    நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

நிலத்தில் மிதக்கும் மலைகள்


“இன்னும் மலைகளைப் போல் கடலில் செல்பவையும் (கப்பல் மற்றும் பனிப் 

பாறை (Ice berg) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ள வையாகும்.” அல்குர்ஆன் 42:32


அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…..
இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ள டக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங்களில் ஒன்றுதான்,
“அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன” அல்குர்ஆன் 55:24

Wednesday, 10 April 2013

விடைபெறும்உயிர்

மரணம்! மனிதன்பிறக்கும்முன்பேநிச்சயிக்கப்பட்டுவிட்டஒன்று.குழந்தைகளானாலும்,
மன்னாதிமன்னர்களானாலும்,
மகான்களானாலும் யாரானாலும் மரணத்தைவெல்ல முடியாது. மரணம் தனக்குவருவதையும் அல்லது நம்முடையநெருங்கிய உறவினருக்கோ, அல்லதுநண்பர்களுக்கோ யாருக்கும் அதுவந்து விடுவதை யாரும் அத்தனைசுலபத்தில் அதை ஏற்க விரும்புவதில்லை. அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ்க்கைஅமைந்திருக்க வேண்டும் எனஇஸ்லாம் கூறுகிறது. இப்படி கட்டுப்பட்டு வாழ்ந்தவன் மரணத்தைக்கண்டு அஞ்சுவதில்லை. அல்லாஹ்விதித்திருக்கின்ற காலக்கெடு முடிந்தபின் ஒரு வினாடி கூட மரணம்பிந்தாது என்ற நம்பிக்கை கொண்டமனிதன் மரணத்திற்கு தயாராகஇருக்கின்றான். தினமும் உறங்குவதேசிறு மரணம் என்று நம்புகிறவன்மரணத்தைக் குறித்து விரண்டு ஒடமாட்டான் ஒரு மனிதன் மரணித்தபின்னர் செய்ய வேண்டிய மதச்சடங்குகளைப் பற்றி இஸ்லாம்கூறவில்லை. இவ்வுலகமே அழியக்கூடியது, ஜடப் பொருளுக்கும் அழிவுஉண்டு. மண்ணில் பிறவியெடுத்தஎல்லா உயிரினங்களும் மரணத்தைஅடையும். அல்லாஹ்வால் உருவானஎல்லா படைப்பினங்களும் சந்திக்கவேண்டிய சத்தியமானது. இது தான்நிதர்சன உண்மை.தினசரி ஒரு மரணம்:ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்!அல்குர்ஆன் 3:185
அல்லாஹும்மபிஸ்மிக்கஅமூத்துவஅஹ்யா”
யாஅல்லாஹ்உன்னுடையபெயரால் நான்மரணிக்கிறேன்.மேலும்நான்உயிர்பெறுகிறேன் என ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் ஒதவேண்டும் என்று நபி(ஸல்) அவரகள் கூறினார்கள்
கண்விழித்தவுடன்நம்மைஉறக்கத்திலேமரணிக்கச்செய்யாமல்மீண்டும்உயிர்தந்துவிழிக்கசெய்கிறஅந்த
அல்லாஹ்வைநாம்எவ்வளவு புகழ்ந்தாலும்அதற்குஅதுஈடாகாது.அல்லாஹ்உயிர்களைஅவைமரணிக்கும்போதும்,மரணிக்காதவற்றை
அவற்றின்நித்திரையிலும்
கைப்பற்றி, பின்பு எதன் மீதுமரணத்தை விதித்து விட்டானோஅதை நிறுத்திக் கொள்கிறான்.மீத முள்ளவற்றை ஒருகுறிப்பிட்டதவணைவரைஅனுப்பிவிடுகிறான். சிந்தித்துப் பார்க்கும்மக்களுக்கு நிச்சயமாக அதில்அத்தாட்சிகள் இருக்கின்றன.

Monday, 8 April 2013

Actress Queenie Padilla Embraces ISLAM. நடிகை Queenie Padilla இஸ்லாத்தை ஏற்றுக்கொன்றார்.

மெய் சிலிக்க வைக்கும் பேச்சு. இவர்களின் ஈமானின் உறுதி 
கண்ணீரை வரவழைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

முதல் தடவையாக காபாவை தரிசித்ததை பற்றி பேசும் போது தேம்பி தேம்பி அழும் மெய் சிலிக்க வைக்கும் காட்சி. இவர்களின் பேச்சை கேக்கும் போது மீண்டும் காபாவுக்கு போகணும் போல எண்ணம் தோன்றுகிறது...

Hijab brought me to Islam: Jessica-New revert to ... - Islam


Assalamu Alaikkum Dear Brothers & Sisters...

Hijab brought me to Islam: Jessica

Jessica Rhodes is a 21 year old female from Norwich, UK who works as a telesales consultant and is also a student. She was a Pagan before reverting to Islam a month ago.
She was born in 1991 and was adopted in 1993. Grew up in a small seaside town on the south east coast of England, she went to university at 19 to study for a degree in Music and she hopes to do postgraduate qualifications in counselling starting September 2013.
She has an amazing story of her reversion and how she got attracted to Islam.
New York based lady Nazma Khan started a campaign known as ‘world hijab day’.
The movement has been organised almost solely over social networking sites.