அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label அனாச்சாரங்கள். Show all posts
Showing posts with label அனாச்சாரங்கள். Show all posts

Friday, 11 April 2014

புதுமனைப் புகுவிழா கொண்டாடலாமா?

புதுமனைப் புகுவிழா கொண்டாடலாமா? 
கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா? 
புதுமனைப் புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை.

புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் பால் காய்ச்சுதல், மவ்லிது பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன.

சில இடங்களில் சுப்ஹ் தொழுகையைப் புது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றும் வழக்கமும் உள்ளது.

இதுவும் பித்அத்தாகும். இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆனால் அதே சமயம் ஒருவர் புது வீடு கட்டி, அதில் குடிபுகும் போது விருந்தளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

Wednesday, 12 March 2014

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன ? ஒரு விழிப்புணர்வு ஆய்வு...

இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர். இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான். 


"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அல்குர்ஆன் (4 : 119)


உருவத்தில் ஆணாக இருந்து கொண்டு பெண்களைப் போன்று உடை அணிவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி (5885)

Tuesday, 29 October 2013

காதுகுத்துதல் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
தொகுப்பு: கலாநிதி. யூ.எல்.ஏ. அஷ்ரப் (Ph.D.Al-Azhar)
… …பிரபல்யமான தமிழ் நாட்டுப் பேச்சாளர் ஒருவர், பெண்களுக்கு காதுகுத்துவது ஹராம் என்ற புரளியைக் கிளப்பியுள்ளார். … …. ….சப்தமிட்டுக் கத்துவது சத்தியத்துக்கு அடையாளம் எனக் கருதும் சில தவ்ஹீத் சகோதரர்கள் இதை நம்பி விட்டார்கள். இதனால் அவர்களுக்கு பெண்குழந்தை கிடைக்கும் போது அவர்களுக்கும், அவர்களது மனைவிமார்களுக்கிடையில் பாரிய சர்ச்சையும், பிளவும் ஏற்பட்டன…. … மேலும் படிக்க (PDF)
மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர். மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது. 

Tuesday, 16 April 2013

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை


Post image for வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை
இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
    நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

Friday, 11 January 2013

மீலாது விழா கொண்டாடலாமா?


فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள்.

Thursday, 10 January 2013

புத்தாண்டு கொண்டாடும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?


கடந்தவாரம் ஜனவரி 1 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பல அனாச்சாரமான அருவருக்கத்தக்க காரியங்கள் அரங்கேறி முடிந்தன. இந்த நிலையில் இத்தகைய காரியங்களில் முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லி கொள்ளக்கூடியவர்களும் கலந்து கொண்டிருப்பது தான் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில் ஆலிம்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளக்கூடிய போலி உலமாக்கள் சிலர் கலந்து கொண்டு கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மதுரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களில் சிலர் கிறிஸ்த்தவ பாதிரியாரிடத்தில் ஆசிவாங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், கடந்த வாரம் இந்து முன்னனி தலைவர் ராமகோபாலன் விடுத்த அதிரடி அறிவிப்பு ஒன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. கோவில்களில் நடைதிறப்பது என்பதை இந்துக்களின் ஆகமக விதிகளின்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் தான். அன்று தான் நாளில் துவக்கம் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதற்கு மாற்றமாக சிலகோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தனர். அதைக் கண்டிக்கும் விதமாக இந்துமுன்னனி தலைவர் ராமகோபாலன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

Tuesday, 21 August 2012

அனாச்சாரங்கள்


நல்லடியார்களின் கப்ருகளின்மீது…

ரஸூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின்மீது எதனையும் எழுப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
    யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால்,  அல்லாஹ்  சபித்துவிட்டான்  என  தன்னுடைய  மரண  தருவாயில்  நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஸா அவர்கள் அறிவித்துவிட்டு, “இவ்வாறு ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கா விட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட)உயர்தப்பட்டிருக்கும் “என்று கூறினார்கள் .(புகாரி)
    கப்ருகள் பூசப்படுவதையும் , அதன்மீது உட்கார்வதையும் ரஸூல் (ஸல்) அவர்கள்  தடுத்தார்கள்.  ஜாபிர் (ரலி)  முஸ்லிம்
    யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கபுரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக்கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னை ஆயிஸா (ரலி) (புகாரி)

கப்ருகளுக்கு ஸஜ்தா செய்வாயா ?

    நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.” அவ்வாறு நான்செய்யமாட்டேன் “என நான் பதில் கூறினேன் . அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு ஸஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள் . கைஸிம்னு சயீத் (ரலி) (அபூதாவூத்)