அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label பாகப்பிரிவினை. Show all posts
Showing posts with label பாகப்பிரிவினை. Show all posts

Monday, 2 September 2013

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.  அல்குர் ஆன் 4:7

அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.

சொத்து குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பிரச்சினை அல்ல. மாறாக, நெருங்கிய உறவினர் விட்டுச் செல்லும் சொத்தில் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பாகம் உண்டு என்று கூறியிருப்பதால் இந்த வாரிசுரிமை பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது கட்டாயம் ஆகும்.

"யூகத்தின் அடிப்படையில் (வாரிசுரிமை பற்றிப்) பேசக் கூடியவர்கள் தோன்றுவதற்கு முன்பு (மிக முக்கிய அடிப்படைக் கல்வியான பாகப்பிரிவினை) கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி (பாகப்பிரிவினையை கற்றுக் கொள்ளுங்கள் என்ற பாடம்) மற்றும் ரஸீன்

கடனும் வஸிய்யத்தும்

ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில்,

. . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான். . . என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன் கடன் அடைக்கப்பட வேண்டும்.

"மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)க்கு கடனைத் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) கூறினார்கள் என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்.

ஆதாரம்: அஹ்மத் 2220; முஸ்லிம் 4860;
திர்மிதீ 1640, 1886; நஸயீ 3156

வாரிசுரிமை பெறுவோர்

ஆண்களில் வாரிசுரிமை பெறக்கூடியவர்கள் பத்துப் பேர் ஆவர். விரிவாகச் சொன்னால் அவர்கள் பதினைந்து பேராக இருப்பார்கள். அவர்கள்,

1. மகன்
2. மகனின் மகன்
3. தந்தை
4. தந்தை வழிப் பாட்டன்
5. தாய் வழிச் சகோதரன்
6. தந்தை வழிச் சகோதரன்
7. தாய் தந்தை வழிச் சகோதரன்
8. தந்தை வழிச் சகோதரனின் மகன்
9. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரனின் மகன்
10. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தகப்பனார்
11. தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை
12. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
13. தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
14. கணவன்
15. அடிமையாயிருந்து விடுதலை பெற்றவன்

இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாரிசுதாரர்களாக வந்தால் இவர்களில் மூவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர்.

இஸ்லாமிய ஷரியத் படி பாகப்பிரிவினை

இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம்
start 20 sec

இஸ்லாத்தில் சொத்துரிமை