அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label மிஃராஜ். Show all posts
Showing posts with label மிஃராஜ். Show all posts

Sunday, 2 June 2013

மிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு

சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில்அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும்.
இஸ்லாம் அண்டை அயலவருடன் அழகிய முறையில் நடப்பதை ஈமானின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியப் பற்றுள்ள, இஸ்லாமிய ரூபத்தில் வாழக் கூடிய பலரும் அயலவருடன் பகைமையை வளர்த்துக் கொண்டு வழக்கு-வம்பு என வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகக் கோட்பாட்டுக்கு இது முரணான நடைமுறையாகும். எனவே, அயலவருடன் நாம் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில அம்சங்களைச் சுருக்கமாக முன்வைக்க விரும்புகின்றோம்.

விண்ணுலகப் பயணம் / வானுலகப் பயணம் - மிஃராஜ்

        سُبْحَانَ الَّذِى أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الاْقْصَى  தன் அடியாரை (மும்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர் ஆன் 17:1)
       அண்ணல் நபி அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். நபிகள் நாயகம் அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
       அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. இதில் சந்தேகம் கொள்ளும் எவனும் முஸ்லிமாக இருக்கவும் முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிராஜை” கட்டாயம் நம்பியே ஆகவேண்டும். 
       இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்ராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
       மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ“ அவர்கள் “துல்கஃதா மாதத்தில் ஏற்பட்டது“ என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக நபித்தோழர்கள் ஜாபிர்  இப்னு அப்பாஸ்(ரலி)  இருவரும் ரபீவுல் அவ்வல் 12-ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27-ல் நடந்தது “ என்கிறார்.
       மிஃராஜ்  எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து  வேறுபாடு  தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.
       ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லியிருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவு வைத்திருப்பார்கள். இரண்டு, மூன்று அபிப்ராயங்கள் கொண்டிருக்க முடியாது. ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷூரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்ப வேண்டும். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
       இப்னு அப்பாஸ்(ரலி)  ஜாபிர்(ரலி)  உர்வா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபியுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27-ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.
       பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபியுல் அவ்வலை விட்டு விட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27”ஐத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.