அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Sunday, 1 July 2012

பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு:


 திருவண்ணாமலை மாணவர் முதலிடம்
சென்னை, ஜூன் 30: பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இ.தேவபிரசாத் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ரேங்க் பட்டியலை உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் இன்று வெளியிட்டார்.
 இந்தப் பட்டியலில் மொத்தம் 32 மாணவ, மாணவியர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண்ணை 88 மாணவர்கள் பெற்றிருந்தனர்.

ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா ஆயத்தம்? இந்தியா கடும் எச்சரிக்கை


இந்தியாவுக்கு மின்சாரம் தருகிறோம்! - ஈரான் அறிவிப்பு


வேளாண்மை, எண்ணெய், எரிவாயு, பசுமை எரிபொருள் ஆகிய துறைகளில் இருநாடுகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவது என இவ்வாண்டு தொடக்கத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். தலைநகர் டெஹ்ரானில் இந்தியத் தூதர் சி.பி.ஸ்ரீவத்ஸவா மற்றும் ஈரான் வணிக வளர்ச்சித்துறை தலைவர் மாஜித் ஹிராத் ஆகியோர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆண்டுகால நண்பனான ஈரானுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா, இஸ்ரேலுடன் ராணுவ ரீதியிலான உறவை மேம்படுத்தி வருவது சர்வதேச அளவில் வினாக்களை எழுப்பியுள்ளது.

Saturday, 30 June 2012

இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய நிறுவனம்


தரைப்படை, வான்படை, கடற்படை அனைத்திற்கும் தேவையான ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலிய ராணுவத் தொழிற்சாலை இஸ்ரேலிய அரசு சார்புடையதாகும்.இந்தத் தகவலை சிபிஐயும் உறுதி செய்துள்ளது. போலி ஏவுகணைகள், வெடிக்காத ராணுவத் தளவாடங்கள் போன்றவற்றை இஸ்ரேல் முன்பு இந்தியாவிற்கு விநியோகம் செய்து ஏமாற்றியது நினைவிருக்கலாம்.

காந்திக்கு தேசத்தந்தை பட்டம் சூட்டியது யார்? சிறுமியின் கேள்விக்கு திணறிய மத்திய அரசு


சென்னையில் அதிகரிக்கும் சிசேரியன் குழந்தைகள்


சென்னையில், கர்ப்பிணிப் பெண்களில் இருவரில் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனராம். கடந்த ஆண்டு அரசு மருத்துவ மனைகள் மற்றும் மாநகராட்சி பேறுகால மையங்களில் குழந்தைப் பெற வரும் பெண்களில் சுகப்பிரசவம் பெறுபவர்களைவிட அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகக் பேறு மருத்துவர்கள் (obsterician) கூறுகிறார்கள்.
சென்னையில், முன்னணி மருத்துவமனைகளில் 50 சதவீத குழந்தைகள் பிறக்கின்றன. எழும்பூரில் உள்ள தாய்மை மற்றும் பெண்கள் நோய்க்கான பயிற்சியகத்தில் குழந்தைப் பேறுக்காகச் சேர்ந்தவர்களில் 50 சதவீதத்தினர் அறுவை சிகிச்சைப் பிரிவில் சேர்ந்திருந்தனர். மருத்துவக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் கடினமாகியுள்ளது என்கிறார் இந்தப் பயிற்சியகத்தின் இயக்குனர் கே.ஜெயஸ்ரீ.
கடினமான பிரசவங்களை நகரின் முக்கிய மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. அதுவும் இதற்கொரு காரணம் என்கிறார். கர்ப்பிணிப் பெண்களிடம் உயர் அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை (gestational diabetes), கருவில் ரத்தக்கசிவு போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன என்கிறார். ஏற்கெனவே அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெற்றவர்களையும், அதன்பின்னர் இரண்டாண்டு இடைவெளியின்றி கற்பமுற்ற பெண்களையும் இம்மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் உள் புண் ஆற இரண்டு ஆண்டுகள் அவசியப்படும். அதற்கு முன்பாக கருவுற்றால், அது அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும். இரண்டு ஆண்டு இடைவெளிக்குள்ளாக கருவுறும் பெண்களையும் எடுத்துக் கொள்கிறோம். தினமும் 200 மகளிர் வெளிநோயாளிகளாக வருகின்றனர் என்கிறார் ஜெயஸ்ரீ.
தாயையும், சேயையும் ஒருங்கே காப்பாற்ற வேண்டுமென்ற அச்ச உணர்வுதான் பேறுகால அறுவை அதிகரிப்பதற்கு காரணம் என்கிறார் சென்னை கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பி.கோபினாத். கடந்த வருடம் இம்மருத்துவமனையில், 45 முதல் 50 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு 25 பெண்கள் இங்கு குழந்தைப் பெறுகின்றனர். சென்னை இராயபுரத்தில் உள்ள ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்.எஸ்.ஆர்.எம்) மகப்பேறு மருத்துவமனையில் அதிகபட்சமாக 51 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.
பெண்கள் கருவுறுகின்றனர். அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்ய தகுந்த காரணம் இருக்கிறது. நாங்கள் அதை ஆய்வு செய்கிறோம். இருந்தாலும் சில பெண்கள் இரத்த சோகையால் மரணிக்கின்றனர். இதுதான் இன்றுவரையுள்ள பிரச்சனை. இரத்த சோகையுடன் (anaemic) நலக்குறைவுடனும் தான் கருவுறுகின்றனர் என்கிறார் பி.கோபினாத்.

டெங்கு காய்ச்சல்: மத்திய மாநில அரசுகள் மெத்தனம்


தமிழக அரசு ஓராண்டு சாதனை மயக்கத்தில் இருக்கும் நேரம் பார்த்து இந்த டெங்கு கொசு நுழைந்திருக்கிறது. இதன் பாதிப்பில் இதுவரை 42 பேர் அதிகாரப்பூர்வமாக இறந்துள்ளனர். திருநெல்வேலி வழியாக ஊடுருவி தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, புதுச்சேரி, செங்கல்பட்டு வழியாக சென்னை வந்து சேர்ந்திருக்கிறது இந்தக் கொசு. திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, கோவையையும் சென்று தாக்கியிருக்கிறது. மதுரை மருத்துவமனையில் மட்டும் இதுவரை 100 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுரையில் 2010ல் 214 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் கடந்த வருடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 2011ல் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக குறைந்தது.

குரூப் 2 பிரிவின் கீழ் 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. அந்தப் பிரிவில் 3 ஆயிரத்து 631 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிக்கை வெளியிடப்படுகிறது.