அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Monday, 7 October 2013

நீங்களும் வஹ்ஹாபிகளா...?

துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. 

இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. 


பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். 

Friday, 6 September 2013

தன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைத்ததில்லை

இவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கென்று ஒரு நீண்ட நெடியதொரு பாரம்பரியமும், வரலாறும் அல்லாஹ்வினால் கொடுக் கப்பட்டுள்ளதை நபிமார்களின் சரிதைகள் வாயிலாக திருமறைக் குர்ஆன் தெளிவாகவே உணர்த்து கிறது. அல்லாஹ்வால் படைக்கப் பட்ட முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) அவ் விருவரும் முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தார்கள். எனவே முஸ்லிம் களின் வரலாறும் இவ்வுலகின் முதல் மனித ஜோடியிலிருந்தே தோன்றுகிறது.
அதன் வரிசையில் உலகத்தூதர் உத்தம நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத் முதல் முஸ்லிம்களின் இன் றைய நிலை வரை முஸ்லிம்களின் வரலாறுகள் சரித்திர சுவடுகளில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் முஸ்லிம்கள் எனப் படுவோர் முகவரியில்லாதவர்களோ அல்லது நாடோடிகளோ அல்ல; மாறாக வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கும் சமூகத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பது நிரூபிக் கப்பட்ட உண்மையாகும்.

Saturday, 9 February 2013

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்கள்


நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :
1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.
ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக  பணியை துவக்கினார்.
1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.
1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்
1983-ல் சுப்ரீம் க
ர்ட் நீதிபதியானார்.
25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் க
ர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
மக்கள் தொகை (பக்கம் 13)
முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)
முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)
1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %
அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.
2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்
3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்
குடி இருப்புகள் : (பக்கம் 23)