அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Saturday, 19 April 2014

இறைவனின் ஞான உபதேசங்கள் - வாழ்வியல் அறிவுரை

பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ, வசனங்கள்: 111
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

17:22. அல்லாஹ்வுடன் மற்றோர் இறைவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

Monday, 27 May 2013

அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
( @[450029425048634:274:Anñisa | முஸ்லிம் பெண்கள்] )

‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)


உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)


உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Wednesday, 10 April 2013

விடைபெறும்உயிர்

மரணம்! மனிதன்பிறக்கும்முன்பேநிச்சயிக்கப்பட்டுவிட்டஒன்று.குழந்தைகளானாலும்,
மன்னாதிமன்னர்களானாலும்,
மகான்களானாலும் யாரானாலும் மரணத்தைவெல்ல முடியாது. மரணம் தனக்குவருவதையும் அல்லது நம்முடையநெருங்கிய உறவினருக்கோ, அல்லதுநண்பர்களுக்கோ யாருக்கும் அதுவந்து விடுவதை யாரும் அத்தனைசுலபத்தில் அதை ஏற்க விரும்புவதில்லை. அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ்க்கைஅமைந்திருக்க வேண்டும் எனஇஸ்லாம் கூறுகிறது. இப்படி கட்டுப்பட்டு வாழ்ந்தவன் மரணத்தைக்கண்டு அஞ்சுவதில்லை. அல்லாஹ்விதித்திருக்கின்ற காலக்கெடு முடிந்தபின் ஒரு வினாடி கூட மரணம்பிந்தாது என்ற நம்பிக்கை கொண்டமனிதன் மரணத்திற்கு தயாராகஇருக்கின்றான். தினமும் உறங்குவதேசிறு மரணம் என்று நம்புகிறவன்மரணத்தைக் குறித்து விரண்டு ஒடமாட்டான் ஒரு மனிதன் மரணித்தபின்னர் செய்ய வேண்டிய மதச்சடங்குகளைப் பற்றி இஸ்லாம்கூறவில்லை. இவ்வுலகமே அழியக்கூடியது, ஜடப் பொருளுக்கும் அழிவுஉண்டு. மண்ணில் பிறவியெடுத்தஎல்லா உயிரினங்களும் மரணத்தைஅடையும். அல்லாஹ்வால் உருவானஎல்லா படைப்பினங்களும் சந்திக்கவேண்டிய சத்தியமானது. இது தான்நிதர்சன உண்மை.தினசரி ஒரு மரணம்:ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்!அல்குர்ஆன் 3:185
அல்லாஹும்மபிஸ்மிக்கஅமூத்துவஅஹ்யா”
யாஅல்லாஹ்உன்னுடையபெயரால் நான்மரணிக்கிறேன்.மேலும்நான்உயிர்பெறுகிறேன் என ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் ஒதவேண்டும் என்று நபி(ஸல்) அவரகள் கூறினார்கள்
கண்விழித்தவுடன்நம்மைஉறக்கத்திலேமரணிக்கச்செய்யாமல்மீண்டும்உயிர்தந்துவிழிக்கசெய்கிறஅந்த
அல்லாஹ்வைநாம்எவ்வளவு புகழ்ந்தாலும்அதற்குஅதுஈடாகாது.அல்லாஹ்உயிர்களைஅவைமரணிக்கும்போதும்,மரணிக்காதவற்றை
அவற்றின்நித்திரையிலும்
கைப்பற்றி, பின்பு எதன் மீதுமரணத்தை விதித்து விட்டானோஅதை நிறுத்திக் கொள்கிறான்.மீத முள்ளவற்றை ஒருகுறிப்பிட்டதவணைவரைஅனுப்பிவிடுகிறான். சிந்தித்துப் பார்க்கும்மக்களுக்கு நிச்சயமாக அதில்அத்தாட்சிகள் இருக்கின்றன.

Friday, 8 February 2013

KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு



கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.



 இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின.
விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Wednesday, 9 January 2013

கோபம் தன்னையே அழித்து விடும்

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)
Post image for கோபம் தன்னையே அழித்து விடும்“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.
· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

Tuesday, 1 January 2013

ஸுர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில். . .


அல்குர்ஆன்
73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
82:1.
வானம் பிளந்து விடும்போது
82:2.
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3.
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4.
கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5.
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
81:1.
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
81:2.
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3.
மலைகள் பெயர்க்கப்படும் போது
101:4.
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
80:34.
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35.
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

Sunday, 30 December 2012

தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகள்


முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல
விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
தஜ்ஜால் என்பது ஒரு தீய சக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர். பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த மாடர்ன் மவ்லவிகள் , ‘ பிரிட்டன் தான் தஜ்ஜால்
என்றனர். இஸ்ரேலின் பிரதமர் மோஷே தயானையும் சிலர் தஜ்ஜால் என்றனர்.
ஜார்ஜ் புஷ் என்ற அமெரிக்கனின் ஆட்சியைச் சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது ஜார்ஜ் புஷ் தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.
தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம். தஜ்ஜாலைப் பற்றி எல்லா அறிவிப்புகளையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்பு களில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் தமது
அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.
மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி
அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை ,
வானத்துக்கும் , கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து
சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில்
மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான்
என்றெல்லாம் கடோத்கஜன் கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று
சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா
முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.