அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label சேரமான் பெருமாள்- தாஜுதீன். Show all posts
Showing posts with label சேரமான் பெருமாள்- தாஜுதீன். Show all posts

Monday, 29 October 2012

முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்

சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க.

முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இசுலாம் மதத்தை ஏற்றார்.மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்.
http://ta.wikipedia.org/s/13td   கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேரமான் பெருமாள் ஜுமா மசூதி - இந்தியாவின் முதல் மசூதி.
சேரமான் பெருமாள் ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜுமா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

சேரநாடு

சேரமான் பெருமாள் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு கிறித்துவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்