அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67
Showing posts with label இறைமார்க்கம் கண்டோர். Show all posts
Showing posts with label இறைமார்க்கம் கண்டோர். Show all posts

Friday, 28 February 2014

முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...

அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

   இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லிமாளாதது. சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...

"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள்.
நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.பிறகு, பல்கலை கழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

Wednesday, 26 February 2014

அவ்ப் ஹனீபா : 60 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயனாக நடித்தவர் · இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக...


 முஸ்லிம்கள் அவர்களது பணியை சரியாகச் செய்யாவிட்டால்ஏனையவர்களைக் கொண்டு அந்தப் பணியை நான் செய்வேன் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.

உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

எனது பெற்றோர்கள் கல்ஹின்னையைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றினார்எனவேஅவருக்கு இடமாற்றம் கிடைத்து செல்லும் இடங்களுக்கெல்லாம் நாமும் செல்ல வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் பதுள்ளையில் உள்ள 'தர்மதூதபாடசாலையில் கற்றேன். பின்னர்கம்பளை ஸாஹிறாவுக்கு வந்து சாதாரண தரம் வரை கற்றேன். பின்னர்தந்தைக்கு கொழும்புக்கு இடமாற்றம் கிடைத்தது. கொழும்புக்கு வந்து வகுப்புக்களுக்குச் சென்று வந்தேன்.

அப்போதுதான் எனக்கு சினிமாத்துறையில் நடிகராக வரவேண்டும் என்ற ஆசை வந்தது. பின்னர் ஒரு பிரபலமான நடிகராக மாறினேன். 65 திரைப்படங்கள் கதாநாயகனாக நடித்தேன். தற்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒரு வியாபாரத்தை நடாத்தி வருகிறேன்.

நீங்கள் எவ்வாறு சினிமாத்துறைக்கு வந்தீர்கள்?

dஎனது தந்தை ஓய்வு பெற்று டுபாய்க்குச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்தார்டுபாய் நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் பல உள்ளன. வந்தால் சேர்ந்துகொள்ளலாம் என தந்தையார் அடிக்கடி அழைத்துக்கொண்டிருந்தார்நான் செல்லவில்லை. நான் பல திரைப்படங்கள் பார்த்தேன். எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. சில மேடை நாடகங்களை அரங்கேற்றினேன். பலரிடம் போய் நடிக்க வாய்ப்புக் கேட்டேன். யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. கடைசியாக நானே ஒரு படத்தைத் தயாரித்தால்தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். எனவேபணம் சேர்ப்பதற்காக டுபாய் செல்ல முடிவு செய்து தந்தையிடம் சொன்னேன்.

அங்கு சென்று சுமார் இரண்டு வருடங்கள் அளவில் தொழில் புரிந்து பணத்தைச் சேர்த்துக்கொண்டு வந்து ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் 'ஒபட திவுரா கியன்னம்” என்ற திரைப்படம். சுனில் சோம பீரிஸ் என்பவர்அதனை இயக்கினார்அதில் அனோஜா வீரசிங்க அவர்கள் என்னோடு ஜோடியாக நடித்தார்அந்தத் திரைப்படம்138 நாட்கள் ஓடியது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


Tuesday, 18 February 2014

Yuvan Shankar Raja embraces Islam

Yuvan Shankar Raja embraces Islam



தனது மன மாற்றம் சம்பந்தமாக டெக்கான் க்ரோனிக்கல் என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு யுவன் சங்கர் ராஜா கொடுத்த பேட்டியை இந்த பதிவில் பார்ப்போம்:

அனுபமா சுப்ரமணியன்: இஸ்லாத்துக்கு செல்வதென்ற முடிவு திடீரென்று ஏன் உங்களுக்கு ஏற்பட்டது?

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது. அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

MasaAllah !!! Michael Jackson’s Sister Janet jackson converts to Islam...

மாஷா அல்லாஹ்! மைக்கல் ஜாக்சனின் சகோதரி ஜெனட் ஜாக்சன் இஸ்லாத்தை தழுவியுள்ளார். தற்போது அவரின் பெயர் ஜன்னத் விஸ்ஸம். 

MasaAllah !!! Michael Jackson’s Sister Janet jackson converts to Islam... Her new name is Jannat Wissam...தற்போது அவரின் பெயர் ஜன்னத் விஸ்ஸம். 

அல்லாஹ் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துவான்..இன்றைய உலகில் நிறைய எதிர்ப்புகள் விமர்சனங்கள் அடக்குமுறைகள் எல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ..மக்கள் கூட்டம் கூட்டமாக விரைவதும் இஸ்லாத்தை நோக்கியே..இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 9 சதவீதமாக இருந்து..இன்று உலகின் நான்கில் ஒருவர் முஸ்லிம் என்பது ஆச்சர்யம்..இஸ்லாம் மட்டுமே இறைவன் ஏற்றுகொள்ளும் வழி..என்பது உலகம் விளங்கும்..இன்ஷா அல்லாஹ்

Saturday, 7 December 2013

"இது தான் இஸ்லாம்" என்றால் " இது எனக்கு வேண்டும்" - லாரன் பூத்

Though it is a long article, it worth reading. May Allah lead us in the path of Jannah

தற்போதைய காலக் கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பல வித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் தான் தழுவுகின்றனர்.ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறு விதமானது.


இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்று கோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கை முறை தான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக் கொண்டவர் இவர். பின்னர் தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.
இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம் பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷாஅல்லாஹ்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக் கொள்வாராம்,

Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்கவை.
டீனேஜ் பருவத்தின் போது பிரார்த்திப்பதை நிறுத்தி விட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டா மென்ற முடிவுக்கு வந்து விட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம் தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.

Monday, 21 October 2013

நபியவர்களை அவமதிக்கும் திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்து அரசியல்வாதி இஸ்லாத்தை தழுவினார்



''அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அவனது தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன்''
 
இவ்வாறு புனித கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர் வேறு யாருமல்ல….
 
முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக நேசிக்கும் இறைதூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அவமதிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பித்னா எனும் திரைப்படத்தை தயாரிப்பதில் பெரும் பங்கு வகித்த நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஆர்னோட் வான் டூர்ன் என்பவர்தான்.
 
கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி திருக்கலிமாவை மொழிந்து புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இவர் கடந்த வாரம் மஸ்ஜிதுந் நபவிக்கு விஜயம் செய்த போதே தான் செய்த பாவத்திற்காக ரசூலுல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினார்.
 
மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு விஜயம் செய்த அவர் ‘’யாரசூலுல்லாஹ்… திரைப்படமெடுத்து உங்களைக் கேவலப்படுத்த முனைந்தமைக்காக என்னை மன்னித்துவிடுங்கள். எனது பாவக் கறையைப் போக்க உங்கள் அழகிய வாழ்க்கை நெறியை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் திரைப்படத்தை தயாரிக்கப் போகின்றேன் ‘’ என்று மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டதாக சவூதி கெஸட் உள்ளிட்ட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யார் இந்த ஆர்னோட் வான் டூர்ன்?

Saturday, 5 October 2013

"Mr Bean" announced his conversion to Islam இஸ்லாத்தை ஏற்ற "மிஸ்டர் பீன்"

இஸ்லாத்தை ஏற்ற "மிஸ்டர் பீன்" ! ! ! இஸ்லாத்தை ஏற்ற உலகின் நகைச்சுவை

நாயகன் "மிஸ்டர் பீன்" பேட்டி அளிக்கும் போது, தான் இஸ்லாத்தை 

ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக 'ஷஹாதா' என்று தனது விரலை நீட்டி 

காட்டியதாக 01/10/13 தேதியிட்ட 'ரஃயல் யவ்ம்' பத்திரிகையில் செய்தி 

வெளியாகியுள்ளது. The king of silent comedy "Mr Bean" announced his conversion to 

Islam Islam News networks picked up on the social networking site, and other websites on 

Tuesday morning news announcement Global Islam comedian Rowan Atkinson's famous "Mr 

Bean". And surprised the comedian famous "Mr Bean" middle and artistic world by announcing 

entry in the Islamic religion. And the relocation of "echo my" word Mr Bean shows from which 

the film was offensive to the Prophet - peace be upon him - was a major reason for the 

discovery of a teacher this true religion, and did not want Mr Bean authorizing the channels of 

information so, as it could only raise his finger testimony. According to some sources, interested 

according to the site, Sheikh Rashid Ghannouchi Contact the name and the name of the Nahda 

Movement congratulatory telegram for this artist Qadeer congratulating, calling him stable on 

the road to the right, waiting to send an official mission to congratulate him. The site indicates 

that Sheikh Rashid relationship with "Mr Bean" is related to ancient days was in London. Sheikh 


has long been a good mentor. The advantage of this artist's legendary talent does not possess 

any artist alive, comedy silent is the home first which is not rivaled by any artist where ever, its 

launch was in the theater and excelled in hundreds of figures varied but the public is still asking 

him to return to his unique (Mr Bean)-(http://www.raialyoum.com/?p=8697) நன்றி : 

@[246687175418480:274:Maruppu]) 

REF:
1. http://www.pakistaniyan.com/2013/10/rowan-atkinson-mr-bean-converted-to.html
2. http://www.bubblews.com/news/1247706-mr-bean-has-become-a-muslim
3. http://www.israellycool.com/2013/09/30/batsht-crazy-claim-of-the-day-rowan-atkinson-converted-to-islam/

Friday, 3 May 2013

How the Bible Led me to Islam - Yusha Evans- இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக...

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), 29 வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ்பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.

"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ள குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

Monday, 8 April 2013

Actress Queenie Padilla Embraces ISLAM. நடிகை Queenie Padilla இஸ்லாத்தை ஏற்றுக்கொன்றார்.

மெய் சிலிக்க வைக்கும் பேச்சு. இவர்களின் ஈமானின் உறுதி 
கண்ணீரை வரவழைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

முதல் தடவையாக காபாவை தரிசித்ததை பற்றி பேசும் போது தேம்பி தேம்பி அழும் மெய் சிலிக்க வைக்கும் காட்சி. இவர்களின் பேச்சை கேக்கும் போது மீண்டும் காபாவுக்கு போகணும் போல எண்ணம் தோன்றுகிறது...

Hijab brought me to Islam: Jessica-New revert to ... - Islam


Assalamu Alaikkum Dear Brothers & Sisters...

Hijab brought me to Islam: Jessica

Jessica Rhodes is a 21 year old female from Norwich, UK who works as a telesales consultant and is also a student. She was a Pagan before reverting to Islam a month ago.
She was born in 1991 and was adopted in 1993. Grew up in a small seaside town on the south east coast of England, she went to university at 19 to study for a degree in Music and she hopes to do postgraduate qualifications in counselling starting September 2013.
She has an amazing story of her reversion and how she got attracted to Islam.
New York based lady Nazma Khan started a campaign known as ‘world hijab day’.
The movement has been organised almost solely over social networking sites.

Sunday, 31 March 2013

கேட் ஸ்டீபன்ஸ் (எ ) யூசுப் இஸ்லாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பு


பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்:

நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக தம்மைத் தயார்படுத்துவதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். ஏனென்றால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன் அதை மீண்டும் பெறவே இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:

கமலாதாஸ் (எ) ஸுரையா இஸ்லாத்தை ஏற்ற பின்பு


கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.

கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.

காதலுகாக இஸ்லாத்தை ஏற்று!!! இஸ்லாத்திற்காக காதலையும் , குடுபத்தையும் இழந்த சகோதரன்!!! :



ஒரு சில நாட்களுக்கு முன் அப்சல் கான் என்ற சகோதரர் உடன் தொலைபேசிய்ல் பேசி கொண்டு இருந்தேன்! ஒரு சில நிமிடம் கழித்து அப்சல் கான் என்னிடம் அவர் நண்பரை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு சில மாதகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர் அப்துல் ரஹ்மான் என்று அவரிடம் என்னை பேச சொன்னார்

நன் அவர் இடம் பேச தொடகினேன்! அவரை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன்!

கேட்டு அறிந்தஉடன் என் உள்ளம் அழவேண்டும் என்று சொன்னது!

9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய பெண்மனி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins)


9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய பெண்மனி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins)

சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர். 

ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார். 

இஸ்லாத்திற்காக கணவனையும் குடும்பத்தினரை இழந்த டாக்டர் ஜைனப்., M.D. (மதுமிதா மிஷ்ரா)


ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

யுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்


''ட்ரூ கால்'' islam.thetruecall இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ''முஹம்மது யூஃஸுப்''பிடம் நேருக்கு நேர் கண்ட ''பேட்டி''

உலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.

அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.

இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்






பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ் அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இஸ்லாத்தை ஏற்ற கிருத்தவ கன்னியாஸ்திரி Irena Handono

இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்துஎழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும். நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த Liaision Maria என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் Stray Sheeps என்று சொல்லப்படக் கூடிய காணாமல் போன ஆடுகளை தேடுவதாகும். காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது. ஒரு வருடம் கழித்த பிறகு நான்,