இன்னும் நீங்கள் பார்க்கின்றீர்கள்; பூமி வறண்டு கிடக்கின்றது; அதில் நாம் மழையைப் பொழியச் செய்ததும் உடனே அது சிலிர்த்து, செழித்து வளர்ந்து விதவிதமான அழகிய தாவரங்களை முளைப்பிக்கச் செய்கிறது. இவையனைத்திற்கும் காரணம் இதுதான்:
திண்ணமாக, அல்லாஹ் தான் உண்மையானவன். மேலும், உயிரற்றவற்றை அவனே உயிர்ப்பிக்கின்றான். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். இன்னும் மறுமை நாள் வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை (என்பதற்கும் இது ஒரு சான்றாகும்). மேலும், மண்ணறைகளில் உள்ளவர்களைத் திண்ணமாக அல்லாஹ் எழுப்புவான். அல்குஆன் 22:7
இங்கே சொல்லப்பட்ட சான்றுகள் மெய்ப்பிக்கின்ற இன்னும் இரண்டு உண்மைகள்: “மறுமை வேளை வந்தே தீரும்’ இறந்து போனவர்கள் அனைவரையும் இறைவன் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பியே தீருவான்.’