அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Monday, 5 May 2014

பொருளீட்டுதலின் அத்தியாவசியம்

'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10

இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.

தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

கடன் குறித்து இஸ்லாத்தின் பார்வை

கடன் என்பது மனிதர்கள் சர்வ சாதாரணமாக பணமாகவோ பொருளாகவோ என்று ஒருவர் மற்றவரிடம் வாங்கக் கூடிய ஒரு சூழலில் என்றென்றும் இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் என்றுமே கடன் வாங்காதவராகவும் இருக்கலாம்; ஆனால் கடன் என்பது தனி மனிதன் முதல் நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து அரசுகள் மற்ற அரசுகளிடம் இருந்து இன்று வங்கிகள் மற்ற வங்கிகளில் என்று பலவிதமாக தற்போது புழக்கத்தில் உள்ளது.

சில நேரங்களில் இது மிகவும் அவசியமான உணவு, உடை, இருப்பிடம், வைத்தியம் போன்ற தேவைகளுக்காக வசதி இல்லாத ஒரு நிலையில் வாங்கப்படுகிறது, இன்னும் சில சந்தர்ப்பங்களில் பொருள் வியாபாரம் கல்வி வாகனம் வசதிவாய்ப்பு சாதனங்கள் , திருமணம் போன்ற இதர காரியங்கள் விருந்துகள் இதுபோல பிறவற்றிற்கு சில நேரங்களில் விபத்து, மருத்துவம் போன்ற அவசரமான இக்கட்டான சூழ்நிலைகளுக்காகவும் வாங்கப்படுகிறது.