அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Saturday, 30 June 2012

சென்னையில் அதிகரிக்கும் சிசேரியன் குழந்தைகள்


சென்னையில், கர்ப்பிணிப் பெண்களில் இருவரில் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனராம். கடந்த ஆண்டு அரசு மருத்துவ மனைகள் மற்றும் மாநகராட்சி பேறுகால மையங்களில் குழந்தைப் பெற வரும் பெண்களில் சுகப்பிரசவம் பெறுபவர்களைவிட அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகக் பேறு மருத்துவர்கள் (obsterician) கூறுகிறார்கள்.
சென்னையில், முன்னணி மருத்துவமனைகளில் 50 சதவீத குழந்தைகள் பிறக்கின்றன. எழும்பூரில் உள்ள தாய்மை மற்றும் பெண்கள் நோய்க்கான பயிற்சியகத்தில் குழந்தைப் பேறுக்காகச் சேர்ந்தவர்களில் 50 சதவீதத்தினர் அறுவை சிகிச்சைப் பிரிவில் சேர்ந்திருந்தனர். மருத்துவக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் கடினமாகியுள்ளது என்கிறார் இந்தப் பயிற்சியகத்தின் இயக்குனர் கே.ஜெயஸ்ரீ.
கடினமான பிரசவங்களை நகரின் முக்கிய மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. அதுவும் இதற்கொரு காரணம் என்கிறார். கர்ப்பிணிப் பெண்களிடம் உயர் அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை (gestational diabetes), கருவில் ரத்தக்கசிவு போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன என்கிறார். ஏற்கெனவே அறுவை சிகிச்சையில் குழந்தைப் பெற்றவர்களையும், அதன்பின்னர் இரண்டாண்டு இடைவெளியின்றி கற்பமுற்ற பெண்களையும் இம்மருத்துவமனைகள் எடுத்துக்கொள்கின்றன. ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் உள் புண் ஆற இரண்டு ஆண்டுகள் அவசியப்படும். அதற்கு முன்பாக கருவுற்றால், அது அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும். இரண்டு ஆண்டு இடைவெளிக்குள்ளாக கருவுறும் பெண்களையும் எடுத்துக் கொள்கிறோம். தினமும் 200 மகளிர் வெளிநோயாளிகளாக வருகின்றனர் என்கிறார் ஜெயஸ்ரீ.
தாயையும், சேயையும் ஒருங்கே காப்பாற்ற வேண்டுமென்ற அச்ச உணர்வுதான் பேறுகால அறுவை அதிகரிப்பதற்கு காரணம் என்கிறார் சென்னை கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பி.கோபினாத். கடந்த வருடம் இம்மருத்துவமனையில், 45 முதல் 50 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு 25 பெண்கள் இங்கு குழந்தைப் பெறுகின்றனர். சென்னை இராயபுரத்தில் உள்ள ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்.எஸ்.ஆர்.எம்) மகப்பேறு மருத்துவமனையில் அதிகபட்சமாக 51 சதவீதம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.
பெண்கள் கருவுறுகின்றனர். அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்ய தகுந்த காரணம் இருக்கிறது. நாங்கள் அதை ஆய்வு செய்கிறோம். இருந்தாலும் சில பெண்கள் இரத்த சோகையால் மரணிக்கின்றனர். இதுதான் இன்றுவரையுள்ள பிரச்சனை. இரத்த சோகையுடன் (anaemic) நலக்குறைவுடனும் தான் கருவுறுகின்றனர் என்கிறார் பி.கோபினாத்.

0 comments: