வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்தனையோ தலைவர்களும் அறிஞர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகத்தான் இருக்கவேண்டும் என்று அவரின் வாழ்க்கையை படித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் –
ஆனால் துவேசம் கக்கும் ஒருசிலர் முஹம்மது நபியின் வாழ்க்கையை படித்திராதவர்களிடம் அவதூறு பரப்புவதில் தீவிரமாக இருந்தாலும் இத்தகைய எள்ளல்களின் விளைவுகள் அவர்களின் எண்ணங்களுக்கு எதிராகத்தான் இதுவரை அமைந்துவந்திருக்கிறது.
இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -