சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க.
முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இசுலாம் மதத்தை ஏற்றார்.மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்.
சேரமான் பெருமாள் ( Cheraman Perumal )என்பவர்
இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜுமா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
சேரநாடு
சேரமான் பெருமாள் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு கிறித்துவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
நிலவை பிரிக்கும் அதிசயம்
மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர் பலரிடமும் விசாரித்தார். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அராபியர் கூட்டம் ஒன்று அது பற்றித் தங்களுக்கு தெரியும் என கூறியதைக் கேட்டு, அவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறினர். இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அந்த அராபியர்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அராபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாளை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
இஸ்லாத்தை ஏற்றல்
தனது அரசைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அதைத் தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்). அதன் பிறகு சேரமான் பெருமாள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பிச் சென்றார். அங்கு முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இசுலாம் மதத்தை ஏற்றார். மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின் முகம்மது நபிக்கு (ஸல்) தான் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார். இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்:
இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு கலன் நிறைய ஊறுகாய்களைக் கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.
இறப்பு
சேரமான் பெருமாள் அரேபியாவிலுள்ள ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மணம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை
மாலிக் பின் தீனாரின் (ரலி) குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள், இஸ்லாம் மதத்தைப் பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காகப் பல மசூதிகளைக் கட்டுமாறும் தன் குடும்பத்தாருக்குப் பணித்திருந்தார். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இசுலாம் மதத்தைப் பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 629-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் கட்டினார்.
சில தகவல்கள்
சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
சேரமான் பெருமாள் ஜுமா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜுமா மசூதிமதினாவில் உள்ளது)
சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
சேரமான் பெருமாள் மற்றும் மாலிக் பின் தீனார் (ரலி) ஆகிய இருவரது சமாதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
சேரமான் ஜும்மா பள்ளிவாசல்
சேரமான் ஜும்மா மசூதி (Cheraman Juma Masjid) இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொடுங்களூர் என்ற ஊரில் உள்ளது. இது கி.பி 629-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.
முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இசுலாம் மதத்தை ஏற்றார்.மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்.
http://ta.wikipedia.org/s/13td கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் காரணமும் வரலாறும்
சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி (ஸல்) அவர்களை பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் அவர்கள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.
பின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசுதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 629-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார்.
இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.
கட்டுமான அமைப்பு
இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.
சிறப்புகள்
இந்த மசூதி முகம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே கட்டப்பட்டது. இது இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது. இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது.மேலும் இங்கு உள்ள ரோஸ்வுட் சொற்பொழிவு மேடை (மிம்பர் படி) மற்றும் கருப்பு மார்பில் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கருப்பு மார்பில் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
- cheraman juma masjid- a secular heritage
- A mosque from a hindhu king
- Hindhu patron of a muslim heritage site
- kalam to visit oldest mosque in sub-continant
- தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem

4 comments:
சேரமான் வாழ்ந்த காலம் 8 ம் நுற்றாண்டு ., மொஹ்மத் காலம் 6 ம் நூற்றாண்டு - எப்படி இருவரும் சந்திக்க முட்யும் ., இது வரலாற்றுப் பிழை அல்லவா ??"??
சேரமான் பெருமாள் என்ற பெயரில் பல அரசர்கள் கேரளா, தமிழ் நாட்டில் ஆட்சி செய்துள்ளனர். இதில் நபிகளை சந்தித்தது எந்த சேரமான் எனபது வரலாற்றாசிரியர்களிடையே இன்றும் குழப்பம்தான் உள்ளது. விக்கியில் வரும் அனைத்தும் அத்தனை நம்பகமானதாக இருக்க முடியாது. சில ஆதாரமற்ற செய்திகளும் வந்து விடுவது உண்டு.மேலும் பல தகவல்கள் -> {Prophet Muhammad (SAW) died at the very beginning of 7th century..}{ The 87-year-old Raja Valiyathampuram of Kodungallur in Central Kerala is a descendant of King Cheraman Perumal, the first Indian to embrace Islam in the early 7th century. Talking to him is like talking with history-http://www.iosworld.org/interview_cheramul.htm} [ தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem -http://riyazpages.blogspot.in/2012/10/blog-post_7071.html ]
*/பெரிய புராணத்தில் சேரமான் பெருமாள் நாயனார் என்று குறிப்பிடப்படுபவரும், மெக்கா சென்ற சேரமான் பெருமாளும் ஒருவரே என்று கருதுவதற்கான அடிப்படைகள் உள்ளன.
1. இந்த இரண்டு இடங்களில் மட்டுமே ஒரு சேர மன்னர், சேரமான் பெருமாள் என்ற பெயரில் மட்டும் குறிப்பிடப்படுகிறார்.
2. சுந்தரரின் காலமும் சேரமானின் மெக்கா பயண காலமும் ஏறக்குறைய ஒன்றாகவே இருப்பது.
3. சேரமானின் விசித்திரமான மறைவு.
இந்தக் காரணங்களால்தான் ஒளவை துரைசாமிப் பிள்ளை போன்ற தமிழறிஞர்களும், ஸ்ரீதர மேனன்போன்ற கேரள அறிஞர்களும் சேரமானின் மெக்கா பயணத்தை மறுக்க அவர் நாயனார்தான் என்று நிலைநாட்ட சிரமம் எடுத்துக்கொண்டார்கள். தோப்பில் முகமது மீரான் கூட அண்மையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பரான சேரமான் பெருமாள் மெக்கா சென்றார் என்று கூறியுள்ளார்./* < http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4107:2010-02-23-10-11-48&catid=1:articles&Itemid=264 >
ஓமனின் உள்ள சேரமான் சமாதி பற்றிய விவரங்களுக்கு… http://www.aulia-e-hind.com/dargah/Intl/Oman.htm
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி! தொடர்ந்து கருத்துக்களை அளித்து வாருங்கள்.
Modi gifted a replica of Cheraman Juma Masjid to the Saudi King; here’s why this mosque is so important for both countrieshttp://indianexpress.com/article/explained/narendra-modi-cheraman-juma-masjid-replica-saudi-king-gift/
https://www.asian-voice.com/Volumes/2017/13-May-2017/Early-Arrival-of-Islam-in-Southern-India
The PM tweeted on 3 April 2016 says : “In Thrissur district, Cheraman Juma Masjid is believed to be the first mosque built by Arab traders around 629 AD
Post a Comment