உலகில் மிக வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம். இந்த பேருண்மையை மேற்கானும் சில வீடியோ தொகுப்புகளை வெளியிட்டுதான் நிரூபிக்கும் நிலையில் முஸ்லிம்களாகிய நாம் இல்லை. பிற மதங்களிலிருந்து விடுபட்டு இஸ்லாத்தை ஆய்வுசெய்து பின்னர் தங்களையும் சர்வதேச முஸ்லிம் சமுதாயத்தோடு இணைத்துக் கொண்டு அதை துணிச்சலோடு பிரகடணப்படுத்துவோர் இன்று லட்சக்கணக்கில் உள்ளனர். இருப்பினும் 'நான் ஏன் இஸ்லாத்திலிருந்து வெளியேறினேன்' என்று பொய்யான தலைப்பிட்டு ஏதோ முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தைவிட்டு வெறியேறி சென்றுகொண்டிருப்பதைப் போன்ற ஒரு மாயை சில கள்ள கிருஸ்தவ மீடியாக்களால் ஏற்படுத்தப்படும் இந்நேரத்தில், இஸ்லாத்தில் இணைந்தவர்களின் பேட்டிகளில் சிலவற்றை தற்போது வெளியிடுவது பொருத்தமானதாகக் கருதுகிறோம்.
இந்திய முஸ்லிம்களின் தற்போதைய எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டாலே அது உலக முஸ்லிம் மக்கள் தொகையான 150 கோடியில் சற்றொப்ப ஆறில் ஒருபங்கை நெருங்கும். மேலும் இந்த 25 கோடி இந்திய முஸ்லிம்களின் அப்பன் பாட்டன்கள் அரபு நாட்டு தயாரிப்புகளோ அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களோ அல்லர். பிற மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்தாம் இன்று முஸ்லிம்களாக இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். மேலும் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னர் இந்து, கிருஸ்தவ மதங்களில் இருந்த நாங்கள் எந்த ஜாதியில் இருந்தோம் என்பதைக் கூட இன்று நினைவுபடுத்த முடியாத அளவிற்கு தீண்டாமையை இஸ்லாம் ஒழித்து கட்டியிருக்கிறது. எனவே 'நான் ஏன் இஸ்லாத்திலிருந்து வெளியேறினேன்' என்று பொய் கற்பனைகளை வெளியிடுவதற்கு முன்னர் 25 கோடி இந்திய முஸ்லிம்களும் இன்னும் இஸ்லாத்தில் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று அவர்களே சிந்தனை செய்து கொள்ளட்டும்.
மேலும் வேகமாக பரவி வருவதால் இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமா? புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும்தான் வேகமாக பரவுகிறது! என்று ஒரு தத்துவமுத்தை மேற்படி கள்ள கிருஸ்தவ இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எப்படியாவது கிருஸ்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்திவிடவேண்டும் என்று பல மில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டிக் குவித்து கிருஸ்தவ சபைகள் மக்களை மூலைச்சலவை செய்து கொண்டிருக்கும் இக்காலத்தில், இப்படி எந்த கிருஸ்தவராவது சிந்திப்பாரா?. இவர்கள் கள்ளக் கிருஸ்தவர்களாக இருப்பதாலோ என்னவோ இப்படி வெக்கங்கெட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேகமாக பரவுவதால்தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்று முஸ்லிம்களில் எவராது பிரச்சாரம் செய்கிறார்களா? அல்லது இஸ்லாத்தின் அடைப்படைகளான இறைவேதம் திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளை வைத்து இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நிரூபிக்கிறார்களா? என்பதை மாற்றுமத நண்பர்கள் சிந்திக்க வேண்டும். இஸ்லாம் வேகமாக பரவட்டும் அல்லது வேகம் குறைந்து பரவட்டும், இஸ்லாம்தான் இறைமார்க்கம் என்பதை நிரூபிக்க இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போதனைகளுமே முஸ்லிம்களுக்கு போதுமானது என்பதை இங்கு ஆழமாக பதிவு செய்கிறோம்.
கடந்த 1400 ஆண்டுகளாக எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல் பாதுகாக்கப்படுகின்ற இறைவேதமான திருக்குர்ஆன் கடவுளைப் பற்றி சொல்லும்போது வணங்கத் தகுதியான இறைவன் ஒருவன் மட்டும்தான் என்கிறது. நபி ஈஸா (அலை) மற்றும் நபி முஹம்மது (ஸல்) உட்பட சங்கைக்குரிய இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஓரிறைக் கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள் என்றும் திருக்குர்ஆன் சான்று பகர்கிறது. அந்த ஓரிறைக் கொள்கைக்கு வேட்டுவைக்கும் முகமாக இறைவனுக்கு இணைகற்பிப்பதுதான் புற்றுநோயை விட மிக்கொடியதாகும். தெளிவாக சொல்வதென்றால் கிருஸ்தவம் என்ற பவுலின் முக்கடவுள் கொள்கைதான் ஏகத்துவத்தை அழிக்கும் மிகப்பெரிய புற்றுநோயாகும். எனவே மக்களிடையே கிருஸ்தவம் என்ற புற்றுநோய் பரவுவதுதான் அபாயமே அன்றி அந்த புற்றுநோயை வேறோடு அழிக்கும் அறுமருந்தான ஒரிறைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் பரவுவதால் எந்தத் தவறும் இல்லை, இஸ்லாம் வேகமாக பரவத்தான் வேண்டும் என்பதே உண்மை.
இந்த பேருண்மையை பறைசாற்றும் சாட்சிகளாக இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டோரின் நிதர்சனமான பேட்டிகளில் எங்களுக்கு கிடைத்த சில வீடியோ தொகுப்புகளை இங்கு வெளியிட்டுள்ளோம். இவற்றை நீங்கள் பார்வையிடுவது மட்டுமல்லாது உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 comments:
Post a Comment