அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Monday, 7 October 2013

புற்று நோய் (cancer) எவ்வாறு ஏற்படுகிறது..?

உடலில், அசாதாரணமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத உயிரணுக்களின் (cells) வளர்ச்சியே, புற்றுநோய் அல்லது கான்சர் (cancer) எனப்படுகிறது. உடலின் குறிப்பிட்ட பகுதியில் அவை கட்டுப்படுத்த இயலாமல் அசாதாரணமாக வளர்ந்து கட்டித் (tumour) திசுவாக மாறுவதோடு உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவத் துவங்குகிறது.

உடலின் பிற பகுதிகளுக்குப் பரவும் கட்டிகள் "வீரியமிக்க கொடிய" கட்டிகளாக இருக்கின்றன; இவை தோன்றுமிடத்திலேயே தங்கிவிடும் "தீங்கற்ற, வலிமையில்லாத" கட்டிகளிலிருந்து மாறுபட்டவை ஆகும்.

தற்போது புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க மூன்று வழிகள் உள்ளன. முதலாவது, முதலில் தோன்றும் மூலக் கட்டியையும், பிற துணைக் கட்டிகளையும் முடிந்த அளவு அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றுவது. இரண்டாவது, ரேடியத்திலிருந்து பெறப்படும் ஆற்றல் மிக்க காமா கதிர்களைப் (gamma rays) பயன்படுத்தி புற்று உயிரணுக்களை அழிக்கும் முறை. புற்று எதிர்ப்பு மருந்துகள் சிலவும் உள்ளன; இவற்றைக் கொண்டு புற்று நோயைக் கட்டுப்படுத்த இயலும்.

ஆனால், இம்முறைகளால் கான்சர் உயிரணுக்கள் அழிவதுடன், சுற்றிலுமுள்ள சாதாரண திசுகளும் சிதைந்து போய், தீவிரமான பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். மரபியல் ஆய்வின் (genetic research) அண்மைக்கால முன்னேற்றங்கள் புற்றுநோய்ச் சிகிச்சையில் புதிய நம்பிக்கையைத் தோற்.றுவித்துள்ளன

0 comments: