பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி பள்ளியிலிருந்து வெளியேறுவது
நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத்தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியிலிருந்து வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521
பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது
நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித்தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள் இருவரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இரு வரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர்களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார். புகாரி 470 .