அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Tuesday, 2 July 2013

நன்றியின் மாதம் ரமழான்


அகிலங்களின் அரசனாகவும் ஆன்றோர்களின் துணைவனாகவும் திகழுகின்ற வல்ல இறைவனுக்கு புகழ் யாவும்! இறையச்சம் உடையோரின் தலைவ ராகவும் உலக மக்கள் அனைவருடைய வழிகாட்டி ஆகவும் திகழுகின்ற எம்பெருமானார் அஹ்மத் முஸ்தஃபா அண்ணலார் மீது இறைவனின் புறத்தில் இருந்து தோன்றுகின்ற கண்ணியமும் கௌரவமும் என்றென்றும் உரித்தாகட்டும்!
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ
‘ரமழான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத் தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரை களைக் கொண்டதும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கி அருளப் பட்டது’ (அல்குர்ஆன் 2:185) என்பது வான் மறையின் அருள்வாக்கு.

இறை அடிமைத்தனத்தின் மாதமாகவும் அழகிய முறையில் இறைவனை வணங்கப் பயிற்றுவிக்கின் மாதமாகவும் (ஷஹ்ருல் இபாதா வல் இஹ்ஸான்) மன்னிப்பின் மாதமாகவும் இறை திருப்தியின் மாத மாகவும் (ஷஹ்ருல் மக்ஃபிரத் வர் ரிழ்வான்) வேண் டுகோளின் மாதமாகவும் குர்ஆனின் மாதமாகவும் (ஷஹ்ருத் துஆ வல் குர்ஆன்) துயரையும் கவலை களையும் போக்கி பொறுமையை நல்குகின்ற மாத மாகவும் (ஷஹ்ருஸ் சப்ரு வஸ் ஸுல்வான்) நம் ஆன் மாக்களுக்கு விடுதலையை வழங்குகின்ற மாதமாக வும் உள்ளங்களை வருடிக்கொடுத்து ஒளிரச் செய் கின்ற மாதமாகவும் நன்மையின் மாதமாகவும் அருள்வளங்களின் மாதமாகவும் விளங்குகின்றது.
ரமழானில் உடல் உறுப்புகளால் செய்கின்ற செயல் களைக் காட்டிலும் உள்ளத்தின் பக்கம் அதிக கவ னத்தை செலுத்தவேண்டும். இறையச்சம் முதலில் உள்ளத்தில் தான் பிறக்கின்றது. உள்ளத்தில் தக்வா இருந்தால்தான் உடல் உறுப்புகளில் அது வெளிப் படும். அந்த தக்வாவை உள்ளத்தில் ஊறச் செய்வதற் காகத்தான் வருடந்தோறும் ரமழான் வருகின்றது.
கைக்கொள்ளவேண்டிய நன்றியுணர்வு
இம்மாதத்தில்தான் இறைவனின் புறத்தில் இருந்து பேரொளி வழி காட்டுதல் மனித குலத்திற்கு அருளப் பட்டது. மேற்கண்ட இறை வசனம் அதனையே சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வுலகில் மனிதனுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் இறைவன் வசப்படுத்திக் கொடுத் துள்ளான். குழந்தையாக இருக்கட்டும் அல்லது சாதா ரணத்திலும் சாதாரணமான விலங்குக் குட்டியாக இருக்கட்டும். அது பிறந்து உலகில் காலடி எடுத்து வைக்கும் முன்பே அதற்குத் தேவையான எல்லா வற்றையும் அல்லாஹ் தயாராக்கி வைத்திருக்கி றான். அந்த தயாரிப்பை உற்றுப் பார்க்கையில், அகில உலகமும் — மலையிலிருந்து மடுவரை — இதற்கா கத்தான் இயங்கிக் கொண்டுள்ளதோ என்று வியப் படைய நேரிடுகின்றது. சூரியனும் அதற்காகவே இயங்குகின்றது; சந்திரனும் அதற்காகவே செயற் படுகின்றது; வான் மேகங்களும் அப்பணிக்கே ஓடோடிச் சென்று கொண்டுள்ளன; காற்றும் சதாவும் அதற்காகவே வீசிக் கொண்டுள்ளது.
மனிதப் படைப்பே இறைவனுக்கு நன்றி செலுத்தி யாக வேண்டும் எனும் உண்மையை சொல்கின்றது.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
‘அல்லாஹ் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான் நீங்கள் ஏதும் அறியாத நிலையில்! மேலும், செவிப்புலன் களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இத யங்களையும் உங்களுக்கு வழங்கினான் நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழ வேண்டும் என்பதற்காக!’ (அல்குர்ஆன் 16:78)
இப்பரிபாலனத்தை, இவ்வளர்ப்பை உன்னித்துக் கவனித்தால் இன்னொரு விஷயமும் புலனாகின்றது. நம்முடைய வாழ்வின் குறிப்பிட்டதொரு பருவத்தில் மட்டுமே இப்பரிபாலனம் நடைபெறுவதில்லை. நம் வாழ்வு முழுக்க இது சூழ்ந்துள்ளது. நமது வெளித் தோற்றமும் வளர்ச்சியடைகின்றது, நமது உள்ளரங் கமும்! நம்முடைய உடலும் வளர்கின்றது. அறிவுக் கும் உணவு கிடைக்கின்றது. நமது உடல் வலிமையும் திறமைகளும் மேம்படுகின்ற அதே நேரத்தில் நமது ஆன்மீக அம்சங்களும் வளர்ச்சி காண்கின்றன. இவ் வாறாக நம் வாழ்வின் எந்தவொரு பகுதியும் கண்டு கொள்ளப்படாமல் இருப்பதில்லை.
அவ்வகையில் மனித வாழ்க்கை முழுவதற்கும் வழிகாட்டுகின்ற ஒரு கையேட்டை ஒரு பேரொளிப் பந்தத்தை இறைவன் குர்ஆனின் வடிவில் இறக்கியுள் ளான். ஸுப்ஹானல்லாஹ்! அதற்காக நாம் எவ்வளவு நன்றி பாராட்டினாலும் தகும்.
இல்லை, தகாது. உண்மையில் நம்மால் அதற்கு நன்றி செலுத்தவே முடியாது! ஆயினும் முடிந்தளவு அவனுக்கு நன்றி செலுத்தியாக வேண்டும், அல் லவா? அதுதானே, அடிமைக்கு அழகு?
وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
‘அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தி யதற்காக நீங்கள் அவனது பெருமையைப் பறை சாற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காக’ என்று வான்மறை இதைத்தானே சொல்ல வருகின்றது? (அல்குர்ஆன் 2:185)
எப்பேற்பட்ட வழிகாட்டுதல் இது? எப்பேற்பட்ட அருட்கொடை இது? இதற்கு எப்படி நன்றி செலுத் தித் தீர்க்க முடியும்? நன்றிக் கடனை அடைப்பதாக இருந்தால் எவ்வளவு நன்றியை செலுத்த வேண் டும்? அளவிடவே முடியாதே?
நன்றி என்னும் பண்பைக் கொஞ்சமும் பெறாதவர் களாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.
إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ
‘திண்ணமாக, அல்லாஹ் மக்கள் மீது கருணை யுடையவனாக இருக்கிறான். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை’ (அல்குர் ஆன் 10:60)

0 comments: