பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி பள்ளியிலிருந்து வெளியேறுவது
நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத்தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியிலிருந்து வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521
பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது
நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித்தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள் இருவரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இரு வரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர்களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார். புகாரி 470 .
விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும் வாங்குவதையும், தவறிப் போனவற்றைத் தேடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்துள்ளார்கள் என்று ஷூஐப் பின் அம்ர் கூறினார், நூல்: அபூ தாவூத் 1081.
பள்ளிக்குச் செல்லும் முன்னர் தொழுகையாளிகளுக்கு தொல்லை ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்ற வாசம் உள்ள பொருள்களை உண்ணாமல் இருப்பது.
இந்த பூண்டுக் கீரையை யாரேனும் தின்றால் என்றும் மற்றோரு தடவை இந்த வெங்காயம், பூண்டு, வெங்காயக் கீரை போன்றவற்றை யாரேனும் தின்றால் அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம், ஏனெனில் ஆதமுடய மக்கள் எதிலிருந்து நோவினை அடைவார்களோ அதனால் மலக்குகளும் நோவினை அடைகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜாபிர் கூறினார்கள். முஸ்லிம் 1282.
பள்ளிக்குள் செல்பவர் பள்ளியின் காணிக்கையான இரண்டு ரகஅத்துகளை தொழுது விட்டு அமர்வது சுன்னத்தாகும்
உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத்துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா அஸ்ஸலமிய்யி கூறினார்கள். புகாரி 415.
பள்ளிக்குச் செல்பவர் ஓத வேண்டிய துஆ:
…..اَللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَسَارِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَأَمَامِي نُورًا وَخَلْفِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا….بخاري.
……..இறைவா! எனது உள்ளத்திலும், எனது பார்வையிலும், எனது செவியிலும், எனது வலது, இடது புறத்திலும். எனது மேலும், கீழும், எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி6316.
பள்ளிக்குள் நுழைபவர் வலது இடது காலை முற்படுத்தி நுழைவது
:நீ பள்ளிக்குள் நுழைவதாக இருந்தால் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளி யேறுவதாக இருந்தால் இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் சுன்னத்தைச் சார்ந்ததாகும் என அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள், நூல்: ஹாகிம் 791
:நீ பள்ளிக்குள் நுழைவதாக இருந்தால் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளி யேறுவதாக இருந்தால் இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் சுன்னத்தைச் சார்ந்ததாகும் என அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள், நூல்: ஹாகிம் 791
اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ
(இறைவா! உனது அருள் வாயல்களை திறந்தருள்வாயாக!) என்றும், உங்களில் ஒருவர் பள்ளியிலிருந்து வெளியேறுவதாக இருந்தால்
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
(இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்) என்றும், கூற வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உசைத் (ரலி) கூறினார், நூல்கள்:அபூதாவூத்465, முஸ்லிம் 1685.
பள்ளிக்குச் செல்பவர் தனது உடலையும் ஆடைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
: ஆதமுடைய மக்களே! மஸ்ஜிதிலும் தொழுகைகளில் உங்களை ஆடைகளால் அழகாகிக் கொள்ளுங்கள்…………7:31. :உங்களில் ஒருவர் ஜூம்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி6316
K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
0 comments:
Post a Comment