அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday, 6 September 2013

தன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைத்ததில்லை

இவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கென்று ஒரு நீண்ட நெடியதொரு பாரம்பரியமும், வரலாறும் அல்லாஹ்வினால் கொடுக் கப்பட்டுள்ளதை நபிமார்களின் சரிதைகள் வாயிலாக திருமறைக் குர்ஆன் தெளிவாகவே உணர்த்து கிறது. அல்லாஹ்வால் படைக்கப் பட்ட முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா(அலை) அவ் விருவரும் முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தார்கள். எனவே முஸ்லிம் களின் வரலாறும் இவ்வுலகின் முதல் மனித ஜோடியிலிருந்தே தோன்றுகிறது.
அதன் வரிசையில் உலகத்தூதர் உத்தம நபி (ஸல்) அவர்களின் கிலாஃபத் முதல் முஸ்லிம்களின் இன் றைய நிலை வரை முஸ்லிம்களின் வரலாறுகள் சரித்திர சுவடுகளில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் முஸ்லிம்கள் எனப் படுவோர் முகவரியில்லாதவர்களோ அல்லது நாடோடிகளோ அல்ல; மாறாக வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கும் சமூகத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பது நிரூபிக் கப்பட்ட உண்மையாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறை வனால் வழங்கப்பட்ட ஆட்சி அதி காரம் அவர்களின் மரணத்திற்குப் பின்னரும் நேர்வழி நின்ற கலீஃபாக் களால் தொடரப்பட்டது. நபி (ஸல்) அவர்களால் ஒழுக்கத்திலும், வீரத்திலும், நேர்மையிலும் நன்கு பயிற்று விக்கப்பட்ட அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), உதுமான்(ரலி), அலீ(ரலி) போன்ற நபித்தோழர்களால் சிறந்ததோர் இஸ்லாமிய சாம்ராஜ்யம் இவ்வுலகில் நிலைநாட்டப்பட்டது. இவர்களின் ஆட்சி காலத்தில் அன்று கோலோச்சி நின்ற ‘ரோமாபுரியும்’ ‘பாரசிகப் பேரரசும்’ முஸ்லிம்களின் காலடியில் வந்து வீழ்ந்தன. அதன்பிறகு உமையாக்களின் ஆட்சி, பின்னர் அப்பாசியர் தலை மையில் கிலாஃபத், அதன்பிறகு உதுமானியப் பேரரசு என்றெல்லாம் நூற்றுக்கணக்கான வருடங்கள் முஸ்­ம்களின் கைகளில் ஆட்சியை யும் அதிகாரங்களையும் அல்லாஹ்; வழங்கினான். டமஸ்கசும், பஃதாதும், புர்ஷாவும் வரலாறுகளில் அலங் கரிக்கப்பட்ட, இவ்வுலகத்தையே உலுக்கிய மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யங்களின் அன்றைய தலைமை பீடங்கள். முஸ்லிம்களால் நிறுவப்பட்ட அந்த அரசாங்கங்கள் எப்படிப்பட்ட ஆட்சி அதிகாரங்களைக் கொண் டிருந்தது? இன்றைய உலக அரசியல் நிலைபோல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு வருடத் திற்கு ஐந்துமுறையோ ஆட்டம் கண்டு மக்களாலேயே மாற்றப்படும் அளவிற்கு ஊழல் போன்ற குற்றங் களும், அதிகார துஷ்ப்பிரயோகங்களும் நிறைந்த நிலையற்ற ஆட்சியா? இல்லவே இல்லை. நீதியையும், நேர்மையையும், கண்ணி யத்தையும் இவ்வுலகிற்கே கற்றுக் கொடுத்த செல்வச்செழிப்புமிக்க பேரரசுகளல்லவா? அவைகள். ஸ்பெயினை எடுத்துக்கொண்டால் 800 வருடங்கள் இஸ்லாமியர்களின் நிலையான ஆட்சி.
இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் முஸ்லீம் களின் ஆட்சி 800 வருடங்கள். இவ் வாறு உலகையே கட்டி ஆண்டவர் கள் முஸ்லீம்கள். அவ்வாறு ஆளப் பட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யமான ஸ்பெயினிலும்; இந்தியாவிலும் முஸ் லிம்களின் இன்றைய நிலையை யும் எண்ணிக்கையையும் பற்றி சற்று சிந்தித்தாலே முஸ்லிம்களின் எந்தத் தலைமையும் தன் ஆட்சியின்கீழ் முஸ் லிமல்லாதவர்கள் மீது எவ்வித துஷ்ப்பிரயோகங்களும் செய்ய வில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். வெறும் ஆட்சி அதிகாரங்களில் மட்டும்தான் முஸ் லிம்கள் கோலோச்சி யிருந்தார்களா என்றால் இல்லை.
அன்றைய உலகின் அத்துணை துறை களுக்கும் வல்லுனர்கள் முஸ் லிம்கள் தான். கி.பி 1600 வரை ஐரோப்பா என் பது அறிவொளியற்ற ஓர் இருண்ட கண்டமாகவே காட்சியளித்தது. பூமி உருண்டை வடிவமானது என்றகுர்ஆன் கூறும் உண்மையை அன்றைய விஞ்ஞானிகள் சொன்ன தற்காக பூமி தட்டை என்ற பைபிளின் கூற்றுக்கு அது மாறுபடுகிறது என்று கூறி அவர்களைத் தூக்கி­டச் சொன்னது அன்றைய கிருத்தவத் திருச்சபை. அந்த அளவிற்கு ஐரோப் பாவும் கிருத்துவ திருச்சபைகளும் அறியாமை இருளின் படுபாதாளத் தில் மூழ்கியே கிடந்தன. ஆனால் முஸ் லிம்களோ அறிவில் சிறந்து விளங்கி வரலாறுகள் பொற்காலம் ( ) என்று வர்ணிக்கும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். கி.பி 700ன் இறுதியில் ஹாருன் ரஷித் அவர்களின் தலைமையில் வீற்றிருந்த அப்பாஸியர்களின் ஆட்சியில்; வானவியல், கணிதம், மருத்துவம், வேதியியல், உடற்கூறு கள் பற்றிய ஆய்வு போன்றவை களில்; வல்லுனர்களாகவும், ஆராய்ச்சி யாளர்களாகவும் சிறந்து விளங்கியவர் கள் முஸ் லிம்கள்தான். அந்நாளில் முஸ் லிம்கள் அனைத்துத் துறைகளி லும் ஒரு கரையைக் கடந்து விட்டார் கள் என்று சொன்னால் அது மிகை யில்லை. அந்த அளவிற்கு உலகின் எத்துறையில் யார் ஆய்வுகளை மேற்கொண்டாலும் முஸ் லிம்கள் எழுதிய அரபிமொழியில் அமைந்த ஆ ய் வு க் க ட் டு û ர க û ள யு ம் , ஆராய்ச்சி நூற்களையும் புரட்டியே ஆகவேண்டும் என்ற நிலைதான் இருந்தது. இவ்வாறு கல்வி அறிவு, நிர்வாகத்திறன் போன்றவற்றில் முஸ்­ம் கள் பேரெழுச்சி பெற்றிருந்தனர். உலக முஸ் லிம்களின் இன்றைய நிலை.
பேணி நடந்து நம் வாழ்கையைத் திருக்குர்ஆனாகவே மாற்றுவதும், அத்தனைக்கும் தாயகமாம் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை அப்படியே பின்பற்றி வாழ்வதும் மட்டுமே நம்மை இஸ்லாத்தோடு இறுகிப்பிணைத்திட ஒரே வழியாகும். நம் வீடு முதல் பள்ளி கல்லூரிகள் உட்பட பல்கலைக் கழகங்கள் வரை இஸ்லாமியக்கல்வி முறையை ஏற்படுத்துவதும் வருங் காலத் தலைமுறைகளை ஒழுக்கத் திலும் அறிவிலும் சிறந்தவர்களாக மாற்றுவதும் இன்றைய முஸ் லிம் களின் இன்றியமையாக் கடமையா கும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முஸ்­மும் தத்தமது வீடுகளை சிறந்த இஸ்லாமியக் குடும்பமாக மாற்றாதது வரையில் முஸ்­ம்களுக்கும் இஸ்லாத் திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியைத் தவிர்க்கவே இயலாது.
யூத, கிருத்துவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலும் சிலுவை யுத்தங்கள் போன்றவற்றாலும் முஸ்­ம்களின் ஆட்சியை உடைத்தனர். இன்றுவரை முஸ் லிம்களுக்கு எதிராக நடை பெறும் அனைத்துவித தாக்குதல் களுக்கும் உலக முஸ் லிம்களிடையே ஒற்றுமையின்மையும் ஒரு காரணம் என்றாலும் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சிகளால் முஸ் லிம்களை ஒற்று மையின்மை என்ற ஜாஹி லிய்யாவில் வீழ்த்தியவர்கள் இந்த யூத, கிருத்துவர் கள் தாம். ஆம்! எந்த ஒரு உண்மை முஸ் லிமையும்; தனது ஓரிறைக்கொள் கையை மறுக்கவைத்து இணைவைப் பின் பக்கம் அவ்வளவு எளிதில் வீழ்த்திட இயலாது என்பதை உணர்ந்த. அன்று உலகத்திற்கே தன் அறி வையும், ஆற்றலையும் வாரிவழங்கிய சமுதாயம், இவ்வுலகையே கட்டி ஆண்ட ஒரு சமுதாயம் இன்று தான் அறிவு பெறுவதற்காகவும், தம் வாழ்வுரிமைக்காகவும் மாற்றாரிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு பரிதாப நிலையில் உள் ளதை நம் கண்கூடாகக் காண்கிறோம். உலக முஸ்­ம்களின் இன்றைய நிலையை சற்று ஏறிட்டு பார்ப்போமா னால் அவர்களுக்கெதிரான அநீதி களும், கொடுமைகளும், எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்ப் பிரகடனங்களும் கண்கூடாகத் தெரியும்.
முஸ் லிம்களின் உரிமைகள் மறுக்கப் பட்டு; அவர்களை ஒட்டுமொத்தமாக நசுக்கிய போதிலும் கேட்பதற்கு நாதியற்ற சமூகமாக மாறிக்கொண் டிருக்கிறது. எண்ணிக்கையில் ஐம் பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும் 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ் லிம்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற போதிலும் இத்தகைய அவல நிலைக்கு என்ன காரணம்?
காரணங்கள் இருக்கத் தான் செய்கின்றன அவை. நாம் இவ்வுலகில் முஸ் லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்க நம்மிடமிருந்து இஸ்லாம் எடுபட்டுபோய்க்கொண்டே இருப்பதும், உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தின் பெயரால் ஜாஹி­ய்யாவில் (மடமை யில்) வீழ்ந்து பிரிவினையில் மேலோங்கிக் கிடப்பதும்தான். இறைவனது கட்டளையை சரிவரயூத கிருத்துவ மூளைகள் வேறுவகை யான யுக்திகளின் பக்கம் தம் சிந்தனையைத் திருப்பின. அவ்வாறு சிந்தித்த யூத, கிருத்துவர்கள் நவீன கலாச்சாரம், மார்டன், பேஸன் என் றெல்லாம் கூறி இஸ்லாமிய உலகை சீரழிவின் பக்கம் இழுத்துச் சென்றனர். முஸ் லிம்கள் மத்தியில் ஒற்றுமை என்பது சாத்தியமற்றது என்ற நாச காரக்கருத்தை ஆழமாக விதைத்தது டன் தேசம், மொழிப்பற்று இவை களைக் கூறி முஸ் லிம் உம்மத்தை சன்னஞ்சன்னமாகப் பிரித்தனர்.
இஸ்லாத்திற்கு எதிரான எவர் களின் எத்தகைய சூழ்ச்சிகளையும் அல்லாஹ்வின் வேதமான திருக் குர்ஆன் மூலமும் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளாலும் தூள் தூளாக்கிட நம்மால் நிச்சயம் முடியும் என்றாலும் முஸ் லிம்களாகிய நாம் முத­ல் அறியாமையை விட்டு விலகி விடவேண்டும்.
இஸ்லாத்தின் பெயரால் மடமை
”முஸ் லிம்களாகிய நாம் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம். இத்தகைய சூழ்நிலைகள் நமக்கு ஏற்படத்தான் செய்யும் இவைகளை தவிர்க்கவே இயலாது. ஏனெனில் இவைகளையெல்லாம் நாம் சந்திக்க நேரிடுமென்று நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துவிட்டார்கள்” என்று கூறி கீழ்க்காணும் நபிமொழியை மக்கள் மன்றத்திலும் எடுத்து வைக்கிறார்கள். அந்த நபிமொழியின் சுருக்கமானது, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
: ”ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்ட வுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்­ம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.” அதற்கு நபித்தோழர்கள் வின வினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்­ம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப் பார்களோ?” அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத் தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.” அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?.” அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: ”இவ்வுலகத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.” என்பதாகும். மேற்கண்ட நபிமொழிக்கு நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண் டும்? ‘வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடவேண்டும் மேலும் இவ் வுலத்தின் மீது அதிகமான பற்றும் வைத்து மரணத்தை வெறுக்கவும் வேண்டும் என்றா பொருள்?’ இல்லையே. ”வெள்ளத்தின் நுரை போல ஆகிவிடுவார்கள்” என்றால் அவ்வாறு நீங்கள் ஆகிவிடக்கூடாது மாறாக ”வெள்ளத்தின் விசைபோல் ஆகிவிடுங்கள், வீரத்துடன் வாழுங் கள்” என்ற நபி (ஸல்) அவர்களின் ஒரு எச்சரிக்கை பிரகடனமல்லவா அது.
அதைப்போல ”இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைப்பார்கள் மரணத்தை அஞ்சுவார்கள்” என்றால் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்காதீர்கள் மேலும் இறைவன் விதித்த மரணத்திற்கும், இறைவனு டைய பாதையில் மரணமாவதற்கும் அஞ்சாதீர்கள் என்றல்லவா பொருள்.
எனவே மேற்கண்ட நபிமொழிக்கு உண்மைக்கு மாற்றமான தவறான பொருள் கொண்டால் மட்டும்தான் நாம் பலகீனமாகிவிட்டோம், வெள் ளத்தின் நுரைபோல இருக்கிறோம் எனவே நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்க இயலாது என்ற தாழ்வுமனப்பான்மையான முடிவிற்கு வரஇயலும். சரியான முறையில் சிந்தித்தோமென்றால் வெள்ளத்தின் நுரைபோல ஆகி விடக்கூடாது, மறுமை வாழ்க்கையை விட இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்கக் கூடாது என்ற நிலைபாட்டிற்கே நம்மால் வர இயலுகிறது.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங் கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (திருக்குர்ஆன் 3:200)
எனவே நீங்கள் தைரியத்தை இழக் காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர் கள்; நீங்கள் முஃமின்களாக இருந் தால் நீங்கள் தாம் உன்னதமானவர் களாக இருப்பீர்கள். (திருக்குர்ஆன் 3:139)

0 comments: