அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Sunday, 1 July 2012

கணிணியில் ஆபாசப் படம் பார்க்கும் சிறுவர்கள்... வேதனை ரிப்போர்ட்




இப்போது இதற்கான வசதி செல்ஃபோன்கள் வழியாகவும் வந்துவிட்டது. செல்ஃபோனைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு ஆசிரியை கண்டித்ததற்காக அவர் தனது மாணவனால் குத்திக் கொல்லப்பட்டார். பாலியல் வன்முறை தொடங்கி உயிர் கொலை வரை அத்தனை உத்திகளையும் வலைதளம் கற்றுக்கொடுக்கிறது. இவ்வாறு ஆபாசப்படம் பார்க்கும் சிறுவர்களில் வாரத்திற்கு 27 சதவீதம் பேர் மனச்சிதைவுக்கு ஆளாவதாக லண்டனின் அறிக்கை ஒன்று கூறுகிறது. தேசிய சுகாதார ஆய்வு மருத்துவமனை, மனநல மருத்துவத்திற்காக வரும் சிறார் நோயாளிகளில் 26.5 சதவீதம் பேர் வலைதளங்களில் ஆபாசப் படம் பார்ப்பவர்கள் என்று கூறுகிறது.
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் கிளேர் பெர்ரி, நாடாளுமன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர், அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஆபாசப் படங்களை தடைசெய்ய வேண்டுமென நாடாளு மன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இவரது கருத்துக்கு பிரிட்டிஷ் பிரதமரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று, ஆபாசப்படம் பார்க்கும் உலக எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் இந்தியாவில்தான் இருக்கிறார்களாம். தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பவர்களிடம் இயற்கை மீறிய செயல்கள் காணப்படுகிறதாம். இந்த இயற்கை மீறிய செயல்கள் அவர்களிடம் சோர்வுத் தன்மையையும், பின்னடைதலையும் கொடுப்பதுடன், சமூக விரோதிகளாகவும் மாற்றுகிறது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒரு இயற்கை மீறிய செயல். இதற்கும் வலைதளங்களால் தூண்டிவிடப்படும் ஆபாசப்படத்திற்கும் தொடர்புள்ளது.
ஃபேஸ் புக் போன்ற வலைதளங்களில் சிக்குண்டுக் கிடப்பவர்களுக்கு வெளியுலக நண்பர்களின் தொடர்பு அறுந்து போகிறது. ஃபேஸ்புக் நண்பர்களுடன் தான் அவர்களது நட்பும், உறவும். திருமணம் ஆனவர்கள் நடுவில் புகுந்து கொள்ளும் இந்த வலைதள ஆபாசப்படம், குடும்பத்திற்குள் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. பல குடும்பங்கள் சிதைந்திருக்கின்றன. உடல்நலக் கேட்டிற்கும், ஆபாசப்படம் பார்ப்பதற்கும் நேரடியாகத் தொடர்பு இல்லையெனினும், தொடர்ந்து நீண்டநேரம் கணினி முன்பு அமர்ந்திருந்ததால், இரத்தம் உறைந்துபோய் இதுவரை 10 பேர் மரணித்திருப்பதாக தென்கொரிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இதனால், எதிர்வரும் இளைய சமூகத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருப்பதைப் போன்று அனைத்து நாடுகளும் கணினிகளில் ஆபாசப் படம் நுழைக்கப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.

0 comments: