அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday, 11 January 2013

மீலாது விழா கொண்டாடலாமா?


فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?

மீலாத் விழா ஓர் இஸ்லாமியப் பார்வை


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள்.

Thursday, 10 January 2013

புத்தாண்டு கொண்டாடும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?


கடந்தவாரம் ஜனவரி 1 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பல அனாச்சாரமான அருவருக்கத்தக்க காரியங்கள் அரங்கேறி முடிந்தன. இந்த நிலையில் இத்தகைய காரியங்களில் முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லி கொள்ளக்கூடியவர்களும் கலந்து கொண்டிருப்பது தான் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில் ஆலிம்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளக்கூடிய போலி உலமாக்கள் சிலர் கலந்து கொண்டு கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மதுரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களில் சிலர் கிறிஸ்த்தவ பாதிரியாரிடத்தில் ஆசிவாங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், கடந்த வாரம் இந்து முன்னனி தலைவர் ராமகோபாலன் விடுத்த அதிரடி அறிவிப்பு ஒன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. கோவில்களில் நடைதிறப்பது என்பதை இந்துக்களின் ஆகமக விதிகளின்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் தான். அன்று தான் நாளில் துவக்கம் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதற்கு மாற்றமாக சிலகோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தனர். அதைக் கண்டிக்கும் விதமாக இந்துமுன்னனி தலைவர் ராமகோபாலன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

Wednesday, 9 January 2013

கோபம் தன்னையே அழித்து விடும்

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)
Post image for கோபம் தன்னையே அழித்து விடும்“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.
· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

அழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்!!!

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.
பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு – சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.

புகைப்பழக்கம்

 நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
    சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள்  வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு ‘சமூக விரோதி’ புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.

கேன்சர் பற்றி அறிந்து கொள்வோம்


நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?


Post image for சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?
 உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

மெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்

Post image for மெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்

பி.பி.(Blood pressure- BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. ஏறுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பேர் ரத்த மிகு அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேருக்கு தங்களுககு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.
ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.
எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

Post image for தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
  வெள்ளைப் பூண்டு:பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

உணவே மருந்து, மருந்தே உணவு


பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

Saturday, 5 January 2013

பெண்கள் வெளியில் நடந்து கொள்ளும் முறை


நம்முடைய இஸ்லாம் மார்க்கம் நம் வாழ்க்கையை அழகான முறையில்அமைத்துக் கொள்வதற்கானவழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளதுநம்முடைய ஒவ்வொரு செயலையும் அழகிய முறையில்அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு அருகியுள்ளதுஇன்று நம் இஸ்லாமியபெண்களின் நிலை மார்க்கப்படி உள்ளதா என்று பார்க்கும் போது அவ்வாறு அமையவில்லை என்றேகூறலாம்.
     ஒரு குடும்பத்தின் அடையாளமாக பெண் கருதப்படுகிறாள்அவளுடைய செயலே அந்தஅடையாளத்தை நல்ல முறையிலோஇ தீய முறையிலோ அமைக்கிறது.
    
     'ஒரு மனிதர் சேமிக்கின்ற சொத்துக்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?' என்றுநபி(ஸல்அவர்கள் கேட்டுவிட்டு 'அது நல்ல பெண்மணியாகும்என்று கூறினார்கள்.
                          அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
                          நுல் : அபுதாவுத் 1417

     மார்க்கமுடைய பெண்களே ஆணுடைய வெற்றிக்கு காரணமாக இருப்பாள் என்று நபி(ஸல்அவர்கள் கூறியுள்ளார்கள்ஒரு பெண் நல்ல பெண்ணாக திகழ வேண்டும் என்றால் இஸ்லாம் காட்டும்வழிமுறைகளை அவள் கடைபிடிப்பதின் மூலமே அவ்வாறு திகழ முடியும்பெண்கள் வெளியில்செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சுp மார்க்க வழிமுறைகளை இங்கு காண்போம்.

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?


 [ பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.] 
ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். இந்நிலையில் பெண்கள் கொஞ்சிப்பேசினால் என்னவாகும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும்.
ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.

உண்மையை உணர மறுக்கும் உலகம் – மதுரை ஆதினம் கருத்து குறித்த கட்டுரை!


மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)
இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன.
( அல்குர் ஆன் 98 : 2,3)
சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும், பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் செய்தித்தாள்கள் வழியாகவும், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பதற்கும், இருக்க இருக்க இத்தகைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும் அவர்கள் அணியக்கூடிய கவர்ச்சியான ஆடைகள்தான் 99சதவீதம் காரணம் என்பதை அறிவுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் இந்த உண்மையை ஆட்சியாளர்களும், அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசக்கூடியவர்களும் உணர மறுப்பதுதான் வேதனையிலும் வேதனை.
பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்குரிய காரணங்களை தற்போதுதான் மிகமிக தாமதமாக காலம் கடந்துவிட்ட பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு தரப்பினராக உணரத்துவங்கியுள்ளனர்.

பெண்ணுரிமை பெயரால்_ In the name of Women's liberation

நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 23 வயதை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்ஸில் சில மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் செய்தி இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி  நாட்டின் பல பகுதிகளிலும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம், போராட்டம்,லோக் சபா, ராஜ்சபா சோகமயம் என்ற அளவுக்கு கொண்டு வந்துவிட்டது.
  • லோக்சபாவில் ஆக்ரோசமாக பேசிய பா.ஜ.க எதிர்த் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்று மிகவும் வேதனையுடன் கூறியதாகவும்,

டெல்லி கற்பழிப்பு சம்பவம் எதிரொலி- சட்டத்தால் தடுக்க முடியுமா??

சமீபமாக நடந்த ஒரு கொடூரச்சம்பவம் நாட்டையே உலுக்கும் அளவுக்கு மிகவும் பயங்கரமானது. பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்று கூறுவார்கள், ஆனால் இந்த மாடர்ன் உலகத்தில் பெண் என்றால் பேயும் சீண்டி பார்க்கும் என்றாகி விட்டது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில்,  பஸ்சில்  23 வயது நிரம்பிய மருத்துவ மாணவி கொலைவெறி பிடித்த கயவர்களால் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு சின்னாபின்னம் ஆக்கியது சிறுவர் முதல் பெரியவர் வரை மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைப் பற்றி லோக் சபாவில் விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியதாகவும், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக்கூடாது என்றும், ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுததாகவும், அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியது கேட்பவர் நெஞ்சை உருக்கியது.

யார் காரணம்??? :

Tuesday, 1 January 2013

ஸுர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில். . .


அல்குர்ஆன்
73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
82:1.
வானம் பிளந்து விடும்போது
82:2.
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3.
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4.
கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5.
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
81:1.
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
81:2.
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3.
மலைகள் பெயர்க்கப்படும் போது
101:4.
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
80:34.
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35.
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

பொறுமை சொர்க்க வாசிகளின் பண்பு. பொறுமைக்குக் கூலி சுவனமாகும்.


இந்தப் பொறுமையானது மூன்று அடிப்படையின் மீதுள்ளது. முதலாவது, அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ்வதில் ஏற்படும் இடையூறுகளை சகித்துக் கொள்வது. இரண்டாவது அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியங்களில் ஈடுபடாமல் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில் உள்ள சகிப்புத் தன்மை. மூன்றாவது உலகத்தில் ஏற்படும் துன்பங்களையும் சோதனைகளையும் சகித்துக் கொள்வது.
இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை கொண்ட மக்களை அல்லாஹ் புகழ்ந்து பேசுகிறான். அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று வாக்களிக்கிறான்.
وَالَّذِينَ صَبَرُواْ ابْتِغَاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُواْ الصَّلاةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلانِيَةً وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُوْلَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ  جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ سَلامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
எவர்கள் தமது இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி, பொறுமையாக இருந்து, தொழுகையை நிலைநாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் பரசியமாகவும் செலவு செய்து, தீமையை நன்மையால் தடுக்கின்றார்களோ அவர்களுக்கே (சுவனம் எனும்) இறுதி வீடு உண்டு.
அவர்களும் அவர்களது மூதாதையர்கள், அவர்களது துணைவிகள், அவர்களது சந்த்திகள் ஆகியோரில் நல்லவர்களாக இருந்தவர்களும் நிலையான சுவனச்சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் அவர்களிடம் நுழைவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்த்தற்காக உங்கள் மீது சாந்தி உண்டாவதாக.  (சுவனம் என்னும்) இறுதி வீடு மிகவும் சிறந்த்தாகி விட்டது. (13: 22,23,24)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி


உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்பதைக் காணலாம்.
 அவர்கள் ஏற்படுத்திய அந்த மகத்தான புரட்சி குறித்து சில விடயங்களை மிகச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டலாம் என எண்ணுகின்றேன்.
 உலகம் பல்வேறுபட்ட ஆன்மீகப் போதகர்களைக் கண்டு வருகின்றது. அவர்களில் அனேகர் மக்களின் பக்தியையும் மடமையையும் மூலதனமாக்கி மக்களைச் சுரண்டி வாழ்வதைக் காணலாம். நபி(ச) அவர்கள் ஒரு மாபெரும் ஆன்மீக வாதியாக இருந்த அதேநேரம், தன்னைச் சாதாரண ஒரு மனிதனாகவே அறிமுகப் படுத்தினார்கள்.

உறவுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்


உறவுகளோடு இணங்கி வாழ்தல் என்பது சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் நல்லறங்களில் உள்ளதாகும். நல்லடியார்களின் பண்புகளை அல்லாஹ் விவரித்துக் கூறும் இடங்களில் அவர்கள் உறவுகளோடு இணங்கி வாழ்வார்கள், உறவுகளை முறிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றான்.
وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ وَالَّذِينَ صَبَرُواْ ابْتِغَاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُواْ الصَّلاةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلانِيَةً وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُوْلَئِكَ لَهُمْ عُقْبَى
இன்னும் அவர்கள் இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்ட (இரத்த பந்த்த்)தைச் சேர்ந்த நடந்து, தமது இரட்சகனை அஞ்சுவார்கள். மேலும் மோசமான விசாரணையை பயப்படுவார்கள்.
எவர்கள் தமது இறைவனின் முகத்தை நாடி, பொறுமையாக இருந்து, தொழுகையை நிலைநாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் பரசியமாகவும் செலவு செய்து, தீமையை நன்மையால் தடுக்கின்றார்களோ அவர்களுக்கே (சுவனம்) என்னும் இறுதி வீடு உண்டு.(13:21,22)
உறவுகளோடு இணங்கி வாழ்வது இறை நம்பிக்கையோடு தொடர்புடையதாகும். அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவன் தன் உறவுகளைச் சேர்த்துக் கொள்ளட்டும் என்று உபதேசித்துள்ளார்கள்.(புகாரி)
من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه
இவ்வுலகில் உறவுகளோடு இணங்கி வாழ்பவன் மறுமையில் நிம்மதியாக சுவனத்தில் பிரவேசிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி சொல்லியிருக்கிறார்கள்.

மருமகள்களுக்கு…


டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.
எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்’ என்று சொல்லி பாருங்கள்.
`மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.
வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான்.
அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.
சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.
வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள்.
அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.

சிக்கன சமையல்


கீரைக்கூட்டு
தேவையானவை: அரைக்கீரை – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – ஒரு கப், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, பாசிப்பருப்பு – 100 கிராம், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, தண்ணீர் வடிய விட்டு பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிடவும். நறுக்கிய கீரையுடன் தேவையான உப்பு கலந்து நன்றாக வேக வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வெந்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: அரைக்கீரை கண்ணுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்லது.