அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Tuesday, 1 January 2013

உறவுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்


உறவுகளோடு இணங்கி வாழ்தல் என்பது சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் நல்லறங்களில் உள்ளதாகும். நல்லடியார்களின் பண்புகளை அல்லாஹ் விவரித்துக் கூறும் இடங்களில் அவர்கள் உறவுகளோடு இணங்கி வாழ்வார்கள், உறவுகளை முறிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றான்.
وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ وَالَّذِينَ صَبَرُواْ ابْتِغَاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُواْ الصَّلاةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلانِيَةً وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُوْلَئِكَ لَهُمْ عُقْبَى
இன்னும் அவர்கள் இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்ட (இரத்த பந்த்த்)தைச் சேர்ந்த நடந்து, தமது இரட்சகனை அஞ்சுவார்கள். மேலும் மோசமான விசாரணையை பயப்படுவார்கள்.
எவர்கள் தமது இறைவனின் முகத்தை நாடி, பொறுமையாக இருந்து, தொழுகையை நிலைநாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் பரசியமாகவும் செலவு செய்து, தீமையை நன்மையால் தடுக்கின்றார்களோ அவர்களுக்கே (சுவனம்) என்னும் இறுதி வீடு உண்டு.(13:21,22)
உறவுகளோடு இணங்கி வாழ்வது இறை நம்பிக்கையோடு தொடர்புடையதாகும். அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவன் தன் உறவுகளைச் சேர்த்துக் கொள்ளட்டும் என்று உபதேசித்துள்ளார்கள்.(புகாரி)
من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه
இவ்வுலகில் உறவுகளோடு இணங்கி வாழ்பவன் மறுமையில் நிம்மதியாக சுவனத்தில் பிரவேசிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி சொல்லியிருக்கிறார்கள்.

 يأيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام ، تدخلوا الجنة بسلام ] رواه أحمد والترمذي وابن ماجه.
மக்களே! சலாமைப் பரப்புங்கள்! (ஏழைகளுக்கு) உணவளியுங்கள்! உறவுகளோடு இணங்கி வாழுங்கள்! மக்களெல்லாம் தூங்கும் நேரத்தில் (வழித்தெழுந்து) தொழுகையில் ஈடுபடுங்கள்! (இதனால்) சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவீர்கள். (அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா)
இன்னும் அல்லாஹ் தக்வாவைப் பற்றி உபதேசிக்கும் போதும் உறவுகளைத் துண்டிப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று உபதேசிக்கின்றான்.
وَاتَّقُواْ اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأَرْحَامَ
எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும், இரத்த உறவுகளை(த் துண்டித்துக் நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள் (4:1)
சொந்த பந்தங்களைச் சேர்த்துக் கொள்வது சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நல்லறங்களில் உள்ளதாகும்.
عن أبي أيوب الأنصاري – رضي الله عنه – أن رجلاً قال: يا رسول الله، أخبرني بعمل يدخلني الجنة؛ فقال النبي صلى الله عليه وسلم: “تعبد الله لا تشرك به شيئاً، وتقيم الصلاة، وتؤتي الزكاة، وتصل الرحم”.
அபூ அய்யூப் (ரழி) அவர்க்ள அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் (நபியவர்களிடம்) கேட்டார் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் ஒரு நல்லறத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீ அல்லாஹ்வை வணங்கு. அவனுக்கு எதையும் இணையாக்காதே! தொழுகையை நிலை நாட்டு. ஸக்காத்தை (முறையாகக்) கொடு. உன் உறவுகளோடு இணங்கி வாழ். (புகாரி)
இரத்த உறவுகள் என்பது அல்லாஹ்வோடு உள்ள தொடர்புடன் சம்மந்தப்பட்டதாகும்.
عن عائشة رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم أنه قال :[ الرحم متعلقة بالعرش تقول : من وصلني وصله الله ، ومن قطعني قطعه الله] . رواه مسلم.
அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கின்றார்கள்: இரத்த உறவானது (அல்லாஹ்வுடைய) அர்ஷில் தொங்கிக் கொண்டு இவ்வாறு கூறியது: “எவன் என்னை சேர்த்துக் கொண்டானோ அவனை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். எவன் என்னை முறித்து விட்டானோ அவனை அல்லாஹ்வும் முறித்து விட்டான்” (முஸ்லிம்)
ஆக இரத்த பந்தங்களை துண்டித்து வாழ்வதென்பது அல்லாஹ்வோடுள்ள தொடர்பு துண்டிக்கப்படுவதற்குக் காரணமாகி விடுகின்றது. அதிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அல்லாஹ் சிலரை சபித்த்தாக குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவர்களுடைய பண்புகளில் ஒன்று அவர்கள் இரத்த பந்தங்களை துண்டித்து வாழ்வதாகும்.
فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم . أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم
நீங்கள் புறக்கணித்து, பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவம் முனைவீர்களா? அவர்களைத்தான் அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடாக்கி, அவர்களது பார்வைகளையும் குருடாக்கி விட்டான். (47:22,23)
இன்னும் எவன் உறவுகளைத் துண்டித்து வாழ்கிறானோ அவன் சுவனத்தில் பிரவேசிக்க மாட்டான்என்றும் ரசூல் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
لا يدخل الجنة قاطع رحم
இன்னும் உறவுகளோடு இணங்கி வாழ்தல் என்பது சோதனை மிக்கதாகும். மக்களில் பெரும்பாலோர் தன்னோடு யார் இணங்கி வாழ்கிறார்களோ அத்தகைய உறவுகளை மட்டும் சேர்த்துக் கொள்வர். தனக்கு விருப்பமில்லாதவர்களை விலக்கிக் கொள்வர். இது உறவுகளைச் சேர்த்தலாகாது. தன்னை முறித்துக் கொண்டவர்களையும் சேர்த்துக் கொள்வதே உண்மையான உறவு முறை ஆகும். இத்தகைய உயர்ந்த பண்பையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.
( ليس الواصل بالمكافئ ، ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها ). رواه البخاري .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் (புகாரி)
அல்லாஹ்வின் திருப்திக்காக உறவுகளோடு இணங்கி வாழ்வோம். மறுமையில் வெற்றி பெறுவோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

0 comments: