அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday, 24 August 2012

மோர் ரசம்

நாம் மோர் சாப்பிட்டு இருப்போம் ரசம் சாப்பிட்டு இருப்போம் அனால் மோர்ரசம் சாப்பிட்டு இருப்போமா இனிமேல் சாப்பிடலாம்
தேவையானவை:
  • மோர் : 2 கப்
  • மஞ்சள்தூள்: கால் தேக்கரண்டி
  • துவரம்பருப்பு : 2 தேக்கரண்டி
  • தனியா : 2 தேக்கரண்டி
  • வெந்தயம் :1/2 தேக்கரண்டி
  • கடுகு :1/2 தேக்கரண்டி
  • மிளகு: 1தேக்கரண்டி
  • சீரகம்:1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை : சிறிதளவு
  • எண்ணெய் :தேவையான அளவு
  • உப்பு :தேவையான அளவு
செய்முறை :
துவரம்பருப்பு ,தனியா,வெந்தயம்,மிளகு ஆகியவற்றை வறுத்து ,சீரகத்தை சேர்த்து அரைக்கவும், மோரில் மஞ்சள் தூள் ,உப்பு,அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்). எண்ணெயில் கடுகு, கரிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும் .

0 comments: