அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday, 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு - பாகம் 1

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
 மூல ஆசிாியர் உரை 
    திருக்குர்ஆன் வாயிலாக எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்திற்கு பின்வரும் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.

    ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.
(திருக்குர்ஆன் 35:6)


    ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,
    'நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்" (திருக்குர்ஆன் 7:16,17)

    மேலும் ஒரு வசனத்தில் ஷைத்தானால் வழிகெடுக்க முடியாத மனிதர்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலவீனத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

    என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழுக்காக்கி காட்டுவேன். அவர்களில் உன்னால் தே
ர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அனைவரையும் வழி கெடுப்பேன். (திருக்குர்ஆன் 15:39,40)

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 2

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
நற்கூலி பெற்றுத் தரும் செயல்கள் எவை?

    ரியாவைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பு 'தூய்மையான எண்ணத்தின்" முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.

    அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: '"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஒருவரது ஹிஜ்ரத் (துறத்தல்) உலகைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அதையே அவர் அடைவார். அல்லது ஒரு பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவளை மணப்பார். ஒருவரது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" இதை உமர் பின் கத்தாப் (ரலி) மேடையில் இருந்து அறிவித்தார்கள். ஆதாரம்: புகாாி (1), முஸ்லிம், அபூதாவூத்

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 3

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

    'ரியா"வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளை விட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள்.

    மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்; அவர்கள் சொன்னார்கள். 'நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்ட போது, அவர்கள் 'ரியா" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

மற்றொரு நபிமொழியில் தஜ்ஜாலின் தீங்குகளை விட அதிகமாகத் தனது சமுதாயத்தினரை 'ரியா" பாதிக்குமோ என்று இறைத்தூதர் அஞ்சியிருப்பது வெளிப்படுகின்றது.

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 4

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
 'ரியா" ஏற்படுவதற்கான காரணங்கள்

    'ரியா" ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இறை நம்பிக்கையில் (ஈமானில்) ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒரு மனிதனுக்கு உறுதியான நம்பிக்கையில்லா விட்டால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதை விட மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவனுக்குப் பொிதாகத் தோன்றும். ஈமானில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளையும், அருள் வளங்களையும் அவன் புறக்கணிக்கின்றான். இதே நேரத்தில், இந்த உலகில் கிடைக்கும் பெயருக்காகவும், புகழுக்காகவும் அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே 'ரியா"வில் அவனை வீழ்த்துகின்றது.

'ரியா"விற்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் இறை நம்பிக்கையாளர்கள் எச்சாிக்கையாகி, கவனமாக செயல்பட வேண்டும்.

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 5

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
 நற்செயல்களைப் பாழ்படுத்தும் துர்க்குணங்கள்

    இரண்டு மிக முக்கிய அடிப்படைகளில் ரியாவை வகைப்படுத்தலாம். ஒன்று நேரத்தின் அடிப்படையில் எழும் ரியா, மற்றொன்று செயல்களின் அடிப்படையில் எழும் ரியா ஆகும்.

    1. நேரத்தின் அடிப்படையில் எழும் ரியா
    எந்தவொரு செயலிலும் ரியா ஏற்படலாம். இது அந்த செயலுக்கு முன்பு அல்லது செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது செயல் முடிவடைந்த நேரத்தில் நிகழலாம். நற்செயல்களினால் விளையும் நன்மைகளைத் தடுக்க, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஷைத்தான் மிகப் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 6

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியாவாக கருதப்படாத செயல்கள்!  
1. உள்நோக்கம் இல்லாத பாராட்டுரைகள்
    நல்ல செயல் செய்வோரை மக்கள் பாராட்டுவது சகஜமான நிகழ்வாகும். உதாரணமாக தங்களுக்கு மிகவும் பயன் தரும் ஒரு உரையைக் கேட்ட பிறகு. அதனை ஆற்றியவரைக் கண்டு பாராட்டி நன்றி சொல்வது சாதாரணமாக நடைமுறையில் உள்ளது. உரையாற்றிய சொற்பொழிவாளர் அல்லாஹ்விடம் நற்கூலி பெற வேண்டும் என்ற ஒரே எண்ணமுடையவராக இருந்தால், அவரது உரைக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுரைகளினால் அவரது தூய்மையான எண்ணத்தில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது. எனவே, இது போன்ற பாராட்டுரைகளால் அம்மனிதாின் நற்செயல்களுக்கு களங்கம் ஏற்படாது.

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 7

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியாவைத் தவிர்ப்பது எப்படி?   
 இதுவரை நாம் ரியாவினால் ஏற்படும் அபாயங்களைத் தெளிவுபடுத்தினோம். ரியாவாகக் கருதப்படும் செயல்கள் எவை என்பதையும் உதாரணங்களுடன் பார்த்தோம். இனி 'ரியா" என்னும் இந்த மறைமுக இணைவைப்பை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.

    'ரியா" ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம், ஈமானில் (இறை நம்பிக்கையில்) ஏற்படும் பலவீனம்தான். எனவே ஈமானை அதிகாிக்க உதவும் அத்தனை விஷயங்களும் ரியா ஏற்படுவதற்காக சாத்தியக் கூறுகளைக் குறைக்கின்றன. இந்த விஷயங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
  
  1. அறிவை அதிகாித்துக் கொள்ளுதல்
    
முஸ்லிம்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான தீர்வு மார்க்க அறிவை அதிகாித்துக் கொள்ளுவதில் தான் அமைந்துள்ளது. அல்லாஹ் திருக்குர்ஆனில்....

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 8

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியா கலப்பில்லாத இறை நம்பிக்கைக்கு வழி என்ன?
    நிறைவு செய்வதற்கு முன்பு, ரியா தொடர்பாக இன்னும் சில விளக்கங்களை அளிப்பது அவசியம் என்று கருதுகிறேன்.

    1. ரியாவாகி விடுமோ என்ற அச்சத்தில் நற்செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுதல்

    நமது நற்செயல்களை அழிப்பதற்காக ஷைத்தான் கையாளும் முறைகளில் ஒன்று தான் ரியா என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால் ரியாவாகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நாம் நற்செயல்கள் பூிவதைத் தடுப்பதும் ஷைத்தானிக் இன்னொரு ஊசலாட்டம் என்பதை மறந்து விடக் கூடாது. நற்செயல்களின் பலன்கள் நம்மை வந்து சேரக் கூடாது, என்பதற்காக ஷைத்தான் இந்த உத்தியைக் கையாளுகின்றான். ரியா மூலம்மனிதர்களின் நற்செயல்களை அழிக்க முடியாவிட்டால், அதற்கு நேர் மாற்றமாக ரியாவின் அச்சத்தினால் நற்செயல்கள் பூிவதிலிருந்து மக்களைத் தடுக்கும் செயலின் ஷைத்தான் ஈடுபடுகிறான்.

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 9

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
 'ரியா"விலிருந்து காப்பாற்ற இறைவனிடம் கையேந்துவோம்!
ரியா எனும் நோய் தன்னைப் பிடித்துள்ளதை ஒரு மனிதனால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. இதுவே ரியா ஏற்படுத்தும் மிகப்பெரும் பிரச்சனையாகும். எனவே நம்பிக்கையாளர்களுக்கு ரியா மிகப்பெரும் ஆபத்தாக விளங்குகின்றது. சாதாரண முஸ்லிம் முதல் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் வரை அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் வல்லமை நிறைந்ததாக ரியா விளங்குகின்றது. இறைவனின் கிருபையினால் மிகச் சொற்பமான மக்கள் தாம் தங்களை ரியாவிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

    எனவே ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு வழிபாட்டை செய்யும் போது, தங்களுக்கு 'நான் ஏன் இந்தச் செயலைச் செய்கிறேன்? இதனைஇறைவனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்கிறானா அல்லது மற்றவர்கள் நம்மை மெச்ச வேண்டும். பாராட்ட வேண்டும் என்பதற்காகச் செய்கிறேனா?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.