ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியாவைத் தவிர்ப்பது எப்படி?
இதுவரை நாம் ரியாவினால் ஏற்படும் அபாயங்களைத் தெளிவுபடுத்தினோம். ரியாவாகக் கருதப்படும் செயல்கள் எவை என்பதையும் உதாரணங்களுடன் பார்த்தோம். இனி 'ரியா" என்னும் இந்த மறைமுக இணைவைப்பை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.
'ரியா" ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம், ஈமானில் (இறை நம்பிக்கையில்) ஏற்படும் பலவீனம்தான். எனவே ஈமானை அதிகாிக்க உதவும் அத்தனை விஷயங்களும் ரியா ஏற்படுவதற்காக சாத்தியக் கூறுகளைக் குறைக்கின்றன. இந்த விஷயங்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
1. அறிவை அதிகாித்துக் கொள்ளுதல்
முஸ்லிம்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கான தீர்வு மார்க்க அறிவை அதிகாித்துக் கொள்ளுவதில் தான் அமைந்துள்ளது. அல்லாஹ் திருக்குர்ஆனில்....

இவ்வாறே மனிதர்கள், ஊர்வன மற்றும் கால் நடைகளில் மாறுபட்ட நிறங்களைக் கொண்டவை உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன். மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 35:28)
தவ்ஹீத் (ஏகத்துவம்) மற்றும் அதன் அத்தனைக் கிளைகள் குறித்தான அறிவைப் பெறுவதன் மூலம், ஒருமனிதர் இணைவைப்பு மற்றும் ரியாவின் ஆபத்துகளை உணர்ந்து கொள்வார். அல்லாஹ் மட்டுமே அஞ்சப்படுவதற்கு தகுதியானவன் என்பதையும் அவர் உணர்ந்து கொள்வார். அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாட வேண்டும் என்ற எண்ணமும் அவரது உள்ளத்தில் பதிவு பெறும்.
(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும், மாலையிலும் அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர் அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை. எனவே, நீர் அவர்களை விரட்டிவிட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகிவிடுவீர். (திருக்குர்
மேலும் மற்றவர்கள் தன்னை விமர்சனம் செய்வதைப் பற்றி அவர் அச்சம் கொள்ள மாட்டார். மேலும், மக்களின் பாராட்டுகளைப் பெறுவதை விட அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறுவதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதை உணர்ந்து அதனை அடைவது மட்டுமே அவரது நாட்டமாக இருக்கும்.
அல்லாஹ்வின் அருளைக் கொண்டும் அன்பைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் திரட்டுவதை விட இது சிறந்ததாகும். (திருக்குர்ஆன் 10:58)
2. பிரார்த்தனை
ரியாவை வீழ்த்த உதவும் வலிமையான, ஆனால் எளிமையான ஆயுதம் துஆ என்னும் பிரார்த்தனை ஆகும்.
அபூ மூஸா அல் அஷ்அாி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதr அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் 'மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) 'அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?" என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்...
'அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று (பிரார்த்தனை செய்ய) சொன்னார்கள். நூல்: அஹ்மத்
மற்றொரு அறிவிப்பில், அண்ணல் நபி பின்வருமாறு கூறியதாக அபூபக்கா; (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'உங்களிடையே உள்ள இணைவைப்பு எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைமுகமானதாக உள்ளது. பெரும் இணைவைப்பு மற்றும் சிறிய இணைவைப்பு ஆகிய இரண்டையும் உங்களிடமிருந்து அகற்றும் ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். யா அல்லாஹ்! அறிந்துகொண்ட நிலையில் உன்னையன்றி மற்றவர்களை வணங்குவதை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறிந்திடாமல் (செய்பவை) குறித்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்" என்று (பிரார்த்தனை புரியுமாறு) கூறினார்கள்.ஆதாரம்: ஷஹீஹ் அல் ஜாமீ
3. சுவர்க்கம் நரகம் குறித்து எண்ணிப்பார்த்தல்
மறுமையைப் பற்றிய சிந்தனை,
இறையச்சத்தை அதிகாித்துக் கொள்ள உதவுகிறது. பாவம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அது பலப்படுத்துகின்றது. தனது வாழ்வின் உண்மையான நோக்கம் பெயரும், புகழும் அடைவதில்லை, மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதில்லை, மற்றவர்களை மகிழ்விப்பதில்லை - வாழ்வின் உண்மையான நோக்கம் நரக நெருப்பிலிருந்து தற்காத்துக் கொண்டு, சுவனத்தில் நுழைவது தான் என்பதை ஒரு மனிதன் உணர்ந்து கொண்டால், ரியாவை தவிர்த்துக் கொள்வதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வான்
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு அறிவிக்கப்படுகிறது. யார் தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்க்கிறாரோ அவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறைவனுக்கு எவரையும் இணையாக்காது இருக்கட்டும் என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 18:110)
4. நற்செயல்களை மறைத்துக் கொள்ளுதல்
ரியாவைத் தவிர்த்துக் கொள்ளும் வழிகளில் ஒன்று அல்லாஹ்வைத் தனிமையில் வணங்குவதாகும். தனிமையில் அல்லாஹ்வை வணங்குவது இரண்டு விஷயங்களை நிறைவேற்றித் தரும். முதலாவதாக மற்றவர்களுக் குத் தனது வணக்க வழிபாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதன் மூலம் மற்றவர்களின் கவனத்தைத் தம் பக்கம் திரும்பி, அதன் மூலம் பாராட்டுகளைப் பெற்று அதன் விளைவாகத் தனது நற்செயல்கள் பாழ்படும் அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். இரண்டாவதாக தனிமையி ல் வணக்கங்களை நிறைவேற்றுவது ஒருவரது ஈமானை (இறை நம்பிக்கை) அதிகாித்து அவரை ரியாவிலிருந்து பாதுகாக்கின்றது"
சில அறிஞர்களின் கூற்றுப்படி, 'நமக்கு முன்பு இருந்த மக்கள், அவர்களது மனைவி அல்லது நெருங்கிய நண்பர்கள் கூட அறிந்திராத வகையில் தனிமையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
ஒருமனிதர் தனிமையில் நல்ல செயல்கள் செய்யும்போதெல்லாம் அது குறித்து மற்றவர்கள் கண்டு பிடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தனது நற்செயல்களைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது ரியா என்னும் குழியில் நம்பிக்கையாளர்கள் விழுவதற்கு ஷைத்தான் வைத்துள்ள பொறிகளில் ஒன்று என்பதை உணர வேண்டும்.
சுப்யான் அஸ் ஸவ்ாி கூறினார்கள்:
'ஒரு நம்பிக்கையாளர் தனிமையில் நற்செயல்கள் செய்யும் போது, மற்றவர்களிடம் அது பற்றி தொிவிக்கும் வரை ஷைத்தான் அவாிடம் முணுமுணுத்துக் கொண்டிருப்பான். ஷைத்தானின் இந்த தூண்டுதலுக்கு பலியாகி விட்டால் தனிமையில் நிறைவேற்றப்பட்ட அந்த வழிபாடு, பகிரங்கமாக நிறைவேற்றப்பட்ட ஒன்றாக மாறி விடுகின்றது." நூல்: தல்பீஸ் இப்லீஸ்
தாங்கள் ஆற்றும் உரைகளின் போது, உணர்ச்சியால் உந்தப்பட்டு, இறையச்சத்தின் காரணமாக சில சொற்பொழிவாளர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும். அப்போது அவர்கள் தங்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டு, தாங்கள் கடுமையான ஜலதோசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்டு.
நோய்வாய்ப் பட்டுள்ளதாகக் கூறுவது ரியாவில் சேராது. ஆனால் மக்களின் இரக்கத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக, சுகவீனத்தை மறைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பொறுமையாக இருந்ததற்காக அல்லாஹ்விடம் சன்மானம் பெறலாம்.
இறை நம்பிக்கையாளர்களைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறும்போது,
ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள். (திருக்குர்ஆன் 51:18)
என்று கூறுகிறான். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் உண்மையான நம்பிக்கையாளர்களின் நற்பண்புகளில் ஒரு பகுதியாக தனிமையில் வணக்க வழிபாடு செய்வது அமைந்துள்ளது.
5. சுய பாிசோதனை
ரியாவில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை ஒரு மனிதன் உணரும் வேளையிலெல்லாம், தான் செய்த பாவங்கள் குறித்து உடனடியாக சுய பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனது குறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து பெருமை உணர்வு கரைந்து விடும். இதற்கு மாற்றமாக பாவச் செயல்களுக்காக வருத்தப்படும் எனவே அவனது உள்ளத்தில் மேலோங்கி நிற்கும். தான் செய்து வரும் நல்ல செயல்கள் மீது அதிக கவனம் செலுத்துவதை விட, தான் செய்து வரும் பாவச் செயல்கள் பற்றி சுய பாிசோதனை செய்வதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதே போல் தன்னால் செய்ய முடிந்த, ஆனால் செய்வதற்கு முயற்சி எடுக்கப்படாத நற்செயல்கள் மீதும் ஒருவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. பக்திமான்களுடன் சேர்ந்திருத்தல்
இறையச்சமுள்ள, அறிவு ஞானமிக்க நல்லமனிதர்களுடன் சேர்ந்து செல்வது, ரியாவின் ஆபத்துகளைப் பொிதும் குறைக்க உதவிடும். இந்த நல்லமனிதர்கள் சிறப்பான நடத்தையுடையவர்களாக இருப்பதால், அவரது அறிவு மற்றும் இறையச்சத்தினால் விளையும் நன்மைகளில் நாம் பயனடையலாம். ரியா மீதான நாட்டத்தைத் தவிர்த்துக் கொள்ள பக்திமான்கள் உதவிடுவர். இது போல் மனிதர்கள் செய்யும் நற்செயல்களுக்கு மிதமிஞ்சிய அளவு அவர்கள் புகழுரையும் அளிக்க மாட்டார்கள். இதுவும் ரியாவின் அச்சுறுத்தல்களைக் குறைக்க உதவிடும்.
7. ரியா பற்றிய விழிப்புணர்வு
ரியாவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது பெரும் பாவங்களின் பால் அழைத்துச் சென்று விடும். ரியாவின் அபாயங்களைப் பற்றி தொிந்து கொள்வதன் மூலம் அதனைப் பற்றிய அச்சம் உள்ளத்தில் ஏற்படுத்தும் ரியாவில் பன்முகத் தன்மைகளைப் பற்றிய அறிவு, ரியாவில் வீழ்வதில் இருந்து காப்பாற்றும்.
ரியா கலப்பில்லாத இறை நம்பிக்கைக்கு வழி என்ன? ...
இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் >>>>>>>> தொடரும்
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு அறிவிக்கப்படுகிறது. யார் தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்க்கிறாரோ அவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறைவனுக்கு எவரையும் இணையாக்காது இருக்கட்டும் என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 18:110)
4. நற்செயல்களை மறைத்துக் கொள்ளுதல்
ரியாவைத் தவிர்த்துக் கொள்ளும் வழிகளில் ஒன்று அல்லாஹ்வைத் தனிமையில் வணங்குவதாகும். தனிமையில் அல்லாஹ்வை வணங்குவது இரண்டு விஷயங்களை நிறைவேற்றித் தரும். முதலாவதாக மற்றவர்களுக்
சில அறிஞர்களின் கூற்றுப்படி, 'நமக்கு முன்பு இருந்த மக்கள், அவர்களது மனைவி அல்லது நெருங்கிய நண்பர்கள் கூட அறிந்திராத வகையில் தனிமையில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
ஒருமனிதர் தனிமையில் நல்ல செயல்கள் செய்யும்போதெல்லாம் அது குறித்து மற்றவர்கள் கண்டு பிடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தனது நற்செயல்களைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது ரியா என்னும் குழியில் நம்பிக்கையாளர்கள் விழுவதற்கு ஷைத்தான் வைத்துள்ள பொறிகளில் ஒன்று என்பதை உணர வேண்டும்.
சுப்யான் அஸ் ஸவ்ாி கூறினார்கள்:
'ஒரு நம்பிக்கையாளர் தனிமையில் நற்செயல்கள் செய்யும் போது, மற்றவர்களிடம் அது பற்றி தொிவிக்கும் வரை ஷைத்தான் அவாிடம் முணுமுணுத்துக் கொண்டிருப்பான். ஷைத்தானின் இந்த தூண்டுதலுக்கு பலியாகி விட்டால் தனிமையில் நிறைவேற்றப்பட்ட அந்த வழிபாடு, பகிரங்கமாக நிறைவேற்றப்பட்ட ஒன்றாக மாறி விடுகின்றது." நூல்: தல்பீஸ் இப்லீஸ்
தாங்கள் ஆற்றும் உரைகளின் போது, உணர்ச்சியால் உந்தப்பட்டு, இறையச்சத்தின் காரணமாக சில சொற்பொழிவாளர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும். அப்போது அவர்கள் தங்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டு, தாங்கள் கடுமையான ஜலதோசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்டு.
நோய்வாய்ப் பட்டுள்ளதாகக் கூறுவது ரியாவில் சேராது. ஆனால் மக்களின் இரக்கத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக, சுகவீனத்தை மறைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பொறுமையாக இருந்ததற்காக அல்லாஹ்விடம் சன்மானம் பெறலாம்.
இறை நம்பிக்கையாளர்களைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறும்போது,
ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள். (திருக்குர்ஆன் 51:18)
என்று கூறுகிறான். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் உண்மையான நம்பிக்கையாளர்களின் நற்பண்புகளில் ஒரு பகுதியாக தனிமையில் வணக்க வழிபாடு செய்வது அமைந்துள்ளது.
5. சுய பாிசோதனை
ரியாவில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை ஒரு மனிதன் உணரும் வேளையிலெல்லாம், தான் செய்த பாவங்கள் குறித்து உடனடியாக சுய பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனது குறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து பெருமை உணர்வு கரைந்து விடும். இதற்கு மாற்றமாக பாவச் செயல்களுக்காக வருத்தப்படும் எனவே அவனது உள்ளத்தில் மேலோங்கி நிற்கும். தான் செய்து வரும் நல்ல செயல்கள் மீது அதிக கவனம் செலுத்துவதை விட, தான் செய்து வரும் பாவச் செயல்கள் பற்றி சுய பாிசோதனை செய்வதில் தான் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதே போல் தன்னால் செய்ய முடிந்த, ஆனால் செய்வதற்கு முயற்சி எடுக்கப்படாத நற்செயல்கள் மீதும் ஒருவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. பக்திமான்களுடன் சேர்ந்திருத்தல்
இறையச்சமுள்ள, அறிவு ஞானமிக்க நல்லமனிதர்களுடன் சேர்ந்து செல்வது, ரியாவின் ஆபத்துகளைப் பொிதும் குறைக்க உதவிடும். இந்த நல்லமனிதர்கள் சிறப்பான நடத்தையுடையவர்களாக இருப்பதால், அவரது அறிவு மற்றும் இறையச்சத்தினால் விளையும் நன்மைகளில் நாம் பயனடையலாம். ரியா மீதான நாட்டத்தைத் தவிர்த்துக் கொள்ள பக்திமான்கள் உதவிடுவர். இது போல் மனிதர்கள் செய்யும் நற்செயல்களுக்கு மிதமிஞ்சிய அளவு அவர்கள் புகழுரையும் அளிக்க மாட்டார்கள். இதுவும் ரியாவின் அச்சுறுத்தல்களைக் குறைக்க உதவிடும்.
7. ரியா பற்றிய விழிப்புணர்வு
ரியாவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது பெரும் பாவங்களின் பால் அழைத்துச் சென்று விடும். ரியாவின் அபாயங்களைப் பற்றி தொிந்து கொள்வதன் மூலம் அதனைப் பற்றிய அச்சம் உள்ளத்தில் ஏற்படுத்தும் ரியாவில் பன்முகத் தன்மைகளைப் பற்றிய அறிவு, ரியாவில் வீழ்வதில் இருந்து காப்பாற்றும்.
ரியா கலப்பில்லாத இறை நம்பிக்கைக்கு வழி என்ன? ...
இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் >>>>>>>> தொடரும்
0 comments:
Post a Comment