ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
'ரியா"விலிருந்து காப்பாற்ற இறைவனிடம் கையேந்துவோம்!
ரியா எனும் நோய் தன்னைப் பிடித்துள்ளதை ஒரு மனிதனால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. இதுவே ரியா ஏற்படுத்தும் மிகப்பெரும் பிரச்சனையாகும். எனவே நம்பிக்கையாளர்களுக்கு ரியா மிகப்பெரும் ஆபத்தாக விளங்குகின்றது. சாதாரண முஸ்லிம் முதல் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் வரை அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் வல்லமை நிறைந்ததாக ரியா விளங்குகின்றது. இறைவனின் கிருபையினால் மிகச் சொற்பமான மக்கள் தாம் தங்களை ரியாவிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
எனவே ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு வழிபாட்டை செய்யும் போது, தங்களுக்கு 'நான் ஏன் இந்தச் செயலைச் செய்கிறேன்? இதனைஇறைவனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்கிறானா அல்லது மற்றவர்கள் நம்மை மெச்ச வேண்டும். பாராட்ட வேண்டும் என்பதற்காகச் செய்கிறேனா?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.
வணக்க வழிபாட்டைச் செய்யும் போது ஒருவர் தன்னிடம் தூய்மையான எண்ணம் இல்லை என்று எண்ணுவாரேயானால், தனக்கு தூய்மையான எண்ணத்தைத் தருமாறு அவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். 'ரியா" எனும் நோயிலிருந்து தனக்கு நிவாரணம் அளிக்கும்படி அவர் இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். ஷைத்தானின் முணு முணுப்பு தன்னை எந்த வகையிலும் பாதிக்க அவர் அனுமதிக்கக் கூடாது. 'ரியா" என்ற அச்சத்தின் காரணமாக நற்செயல்களை செய்வதை அவர் தவிர்ாகவும் கூடாது.
முடிவாக -

நபிகள் நாயகம் அவர்கள் தூய்மையான எண்ணத்தினால் விளையும் அருட்கொடைகள் குறித்துக் கூறியுள்ள ஒரு நபிமொழியை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'எவரொருவர் மறுமையைத் தனது இலட்சியமாகக் கொண்ருெக்கிறாரோ, அவரது இதயத்தை இறைவன் வளப்படுத்துவான், அவரது விவகாரங்களை அவருக்கு எளிமைப்படுத்துவான். அம்மனிதர் விரும்பாமலேயே உலகம் அவர் வயப்படும். ஆனால் உலகத்தைத் தனது இலட்சியமாகக் கொண்டிருக்கும் மனிதன், தன் கண் முன்பே வறுமையைக் காண்பான். அவனது உலக விவகாரங்கள் சிதைந்து விடும். அல்லாஹ் நாடியதைத் தவிர எதுவும் அவனை வந்தடையாது" நூல்: ஷஹீஹ் அல் ஜாமி, ஷஹீஹ் சுனன் திர்மிதி
'ரியா" பற்றிய எனது கருத்தோட்டம் இத்துடன் நிறைவடைகின்றது. இதில் உள்ள சரியான கருத்துகள் அனைத்தும் இறைவனிடமிருந்து வந்தது. இதில் உள்ள தவறான கருத்துகள் என்னுடையவையும், ஷைத்தானின் முணுமுணுப்பினால் வந்தவையும் ஆகும். இறைவன் நம் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றி சுவனத்தில் அனுமதிக்க பிரார்த்தனை செய்கிறேன். அறிந்த நிலையில் இணை வைப்புச் செய்வதிலிருந்து காப்பாற்றுமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். அறியாத நிலையில் செய்யும் இணை வைப்பிலிருந்தும் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருகின்றேன்.
கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன். தூதர்கள் மீது சாந்தி உண்டாகுக! அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
(திருக்குர்ஆன்: 37:180, 181, 182)

0 comments:
Post a Comment